என் வாழ்வில்
நடந்ததை நினைக்கையில் – என்
மெய் பொய்யாவென
கிள்ளிப் பார்க்க தோணுது!

நடுநிசியில் மொனித்தது …
புதுவருட வாழ்த்துகளை,
பரிமாறிய மகிழ்வில்,
உறங்கச் சென்ற வேளை!

திடீரென ஒற்றை வலி
இதயத்தை அண்மித்ததாய்,
வியர்க்காத வலி
பயத்தால் வாய் மொனித்தது!

நேரம் செல்லச் செல்ல,
புழுவாய் துடித்தேன்.
பார்வையில் எதுவும்
விழவே இல்லை!

இருண்ட யுகத்துள்
நுழைவது போல உணர்வு.
நினனவு தப்பலை.
எதுவும் செய்ய முடியலை!

மரணத்தின் நுழைவாயிலில்,
எட்டி விட்டாயென
ஒற்றைக் கீற்றாய்
புத்தியில் உறைத்தது!

கரணம் தப்பினால் மரணம்,
தங்கையை பார்க்க
அண்ணன் உள்ளான் என,
கண்களை இறுக மூடினேன்!

வலியும் அதிகரிக்க,
இனி பிழைக்கேன்,
நம்பிக்கையும் வலுப்பெற
நினைவும் தவறியது!

விழி திறந்து பார்க்கையில்,
இறுதி பயணத்திற்காய்
நுழைந்து மீண்டவளாய் – வாழ்வின்,
கடைசி நிமிடம்!