அம்மா எனக்கொருத் தோழி

அம்மாவின் கனவுகளை மட்டுமல்ல, நினைவுகளையும் கூடப் பொய்யாக்கிவிட்டு ஓடிப்போனவன் நான். அம்மாவை இறுதியாக எப்போது பார்த்தேன். இருக்கலாம். ஓர் இருபது ஆண்டுகள் இருக்கலாம். என் மனத்துள் இருக்கும் அம்மா நூற் சேலையில், முழங்கை நீண்ட, கழுத்துவரை உயர்ந்த கிளாஸ்கோ மல் இரவிக்கையில் ஐம்பது வயதிலும் நரை அறியாது என்னை ஆச்சரியப்படுத்துபவள். காலையில் தோசைக்கல் வழிய மாவை வார்த்து, பொன் சிவப்புக்குக் காத்திருந்து, “குறைந்தது மூன்றாவது தின்னுட்டுத்தான் எழுந்திருக்கணுமெனச்” சத்தம் போடுவதையும், Read more

தாய்ப்பால்

திடீரென்று அவள் சொன்னாள்: ‘‘ராஜு அவன் பாட்டுக்கு முலைப்பால் குடிச்சுக்கட்டும். அதுனாலே எனக்கு உடம்பு சரியில்லேன்னு வந்தா வந்துட்டுப் போகட்டும். குருவாயூரப்பன் இஷ்டம் போல நடக்கட்டும். என்னாலே தடுக்க முடியாது!’’

‘‘என்ன, ஜானூ! உனக்கு கிறுக்குப் புடிச்சுடுத்தா? டாக்டர் உன்னிடம் என்ன சொன்னார்? எழுந்து நடக்கவே உன்னால முடியாமப் போச்சு. கையும், காலும் இன்னும் முளைக்காத ரெண்டு குழந்தைங்க முன்னாலே இருக்கிறாங்க என்கிற கவலை கொஞ்சம் வேணும்!’’ கணவன் அவளுக்கு நினைவுறுத்தினான். மீண்டும் ஒரு பீடி எடுத்துப் பற்ற வைத்தான்.

விடுதலை

இன்று விடுதலை. சிறையை விட்டு வெளியேறப் போகிறார் சேகர். அடைப்பட்ட வாழ்வை 18 ஆண்டுகள் அனுபவித்து விட்டார். பெருமூச்சு உதிர்ந்தது. அவரும் படித்தவர். பட்ட தாரி. சக நண்பர்கள் பெரிய பதவியில் இருப்பதை அறியும் பொழுது… அவரையறியாமல் மனசு கலங்கும். இவ்வளவு காலத்திற்குப் பிறகு, சிறையை விட்டு வெளியேறி… வீடு, குடும்பம், வாழ்க்கை… என்பதை நினைக்கும் பொழுது… அவருக்கு பயமாக இருந்தது. கூப்பிட்டு அனுப்பிய ஜெயிலரின் முன் நின்றார் சேகர். Read more

பூவும் வேரும்

நீளமான அந்தச் சாலையின் ஒரு ஓரத்தில் மிகப்பெரிய மரம் பரந்து விரிந்து சடைத்து வளர்ந்து நின்றது. அனலாகக் கொதிக்கும், கடும் வெயிலில் போவோர் வருவோர்க்கெல்லாம் களைப்பாறும் தங்குமிடமாக ஒரு கற்பக விருட்சமாக அமைந்திருந்தது அந்த மரம். மரத்தில் மலர்ந்திருந்த பூக்கள் அழகாகவும் நல்ல நறுமணத்தையும் தந்தது. மலர்களைச் சுற்றி தேனீக்களும் வண்டுகளும் ரீங்காரமிட்டு, வலம் வந்தன. மரத்தின் கீழ் இளைப்பாறும் வழி போக்கர்கள் பூவின் அழகையும் அதன் நறுமணத்தையும் புகழ்ந்து Read more

வெள்ளை இருட்டில் ஒரு கருப்பு வெளிச்சம்

அந்தப் பிப்ரவரி மாதத்துப் பிரெஞ்ச்சு வானம் சாம்பல் நிறத்தைக் சாசுவத மாக்கிக் கொண்டிருந்தது. இரண்டு மாதகாலமாகவே இருட்டுச் சுருணைக்குள் சூரியப் பந்து சுருண்டு கொண்டது. காலை எட்டரை மணி அளவில் இரவு இருட்டு இலேசாக விளகிப் பகலிருட்டாகும். அதற்குத்தான் இங்கே விடியல் என்று பெயர். அதைக்கூட டெலிவிஷன் அறிக்கையை வைத்துத்தான் தெளிவாகச் சொல்ல முடியும். இந்த ‘விடியல்’ போந்துவாஸ் தொடர் வண்டி நிலையம். ஒரு பாரிஸ் புற நகருக்குரிய இயந்திரச் Read more

அன்பின் பரிசு

புதிதாக மணமான இளந்தம்பதிகள். இல்லறப் பூங்காவில் துள்ளியோடும் புள்ளிமான்கள். எந்தெந்த வழியில் இன்பம் கிடைக்கின்றதோ அதை அனுபவிக்கத் துடித்துக் கொண்டிருக்கும் இளஞ்சிட்டுகள். அன்றையதினம் அவர்கள் பெயருக்கு அஞ்சலொன்று வருகிறது. அதை ஆவலுடன் பிரித்துப் பார்க்கிறார்கள். உள்ளே… பிரபலமானவர்கள் நடித்துத் திரையிடப்பட்டிருக்கும் சினிமாவின் இரவு காட்சிக்கு ரிசர்வ் செய்யப்பட்ட முதல் வகுப்பு டிக்கெட் இரண்டு அவர்களைப் பார்த்துச் சிரித்தது. இருவரும் மகிழ்ச்சியில் திளைத்தார்கள். அனுப்பியவர் யார் என்றும் தெரியவில்லை. அனுப்பியவர் யாராக Read more

விதியின் விளையாட்டு

காலை நேரம். மணி ஒன்பதைத் தாண்டிவிட்டது. வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்திருந்த பாஸ்கரன் சலிப்புடன் எழுந்தான். அவன் முகத்தில் சோகத்தின் சாயல். ஏமாற்றத்தின் பிரதிபலிப்பு. வழக்கமாக நேரத்திற்கு வரும் தபால்காரன் வரக்காணோம். நெடுநேரமாக வீட்டிற்குள் போவதும், வீதிக்கு வருவதுமாக இருந்த பாஸ்கரன் முடிவாக தபால்காரனை நினைத்து முணுமுணுத்துக் கொண்டே வீட்டுக்குள்ளேச் சென்றான். அவனது மனைவி பிரேமா காபியுடன் அவன் அருகில் வந்து நின்றாள். ” இன்னைக்கும் உங்கள் கதை வரலையா? ” Read more