நாட்டுப்புற காதல் பாடல்களில் காணப்படும் சங்க அகஇலக்கியக் கூறுகள்

முன்னுரை நாட்டுப்புற மக்களின் காதல் உணர்வின் வெளிப்பாடே காதல் பாடல்கள் ஆகும். அகத்தின் கண் மறைத்தும் புறத்தின் கண் புலப்பட்டும் மெய்ப்பாடுகளால் தாக்கப்பெறும் வலிய சக்தியே காதல். ஆண், பெண் என்ற தத்துவத்தின் வித்தாகவும் அவற்றின் வாழ்வுக்கும் வளமைக்கும் அடிப்படையாகவும் காதல் விளங்குவதைக் காணலாம். வாழ்க்கையை அகம் புறம் என்ற இரும்பெரும் பிரிவுகளாக பிரித்தனர். பண்டைத்தமிழர் காதல் வாழ்வை அகத்தில் அடக்கினர். அக வாழ்க்கையை களவு கற்பு என இரு Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 56

பாடல் – 56 முந்தை எழுத்தின் வரவுணர்ந்து பிற்பாடு தந்தையும் தாயும் வழிபட்டு – வந்த ஒழுக்கம் பெருநெறி சேர்தலிம் மூன்றும் விழுப்ப நெறிதூரா வாறு. (இ-ள்.) முந்தை – (முன்னதாகிய) இளமைப் பருவத்தில், எழுத்தின் வரவு – கல்வியறிவு உண்டாதலும்; பிற்பாடு – அதன்பின்பு, உணர்ந்து – கல்விப் பொருள் உணர்ந்து, தந்தையும் தாயும் – தந்தையையும் தாயையும், வழிபட்டுவந்த – போற்றிவந்த, ஒழுக்கம் – ஒழுக்கமும்; பெருநெறி Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 55

பாடல் – 55 அருமறை காவாத நட்பும் பெருமையை வேண்டாது விட்டொழிந்த பெண்பாலும் யாண்டானும் செற்றங்கொண் டாடுஞ் சிறுதொழும்பும் இம்மூவர் ஒற்றாள் எனப்படு வார். (இ-ள்.) அருமறை – பிறர்க்கு வெளிப்படுத்தக்கூடா மறை மொழியை, காவாத – காப்பாற்றாத, நட்பும் – நட்பாளனும்; பெருமையை – பெருமைக்குணத்தை, வேண்டாது, விரும்பாமல், விட்டு – தலைவன் குறைகளை வெளிப்படுத்தி, ஒழிந்த – தருமத்தினின்றும் நீங்கிய, பெண்பாலும் – பெண்ணும்; யாண்டானும் – Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 54

பாடல் – 54 தன்பயம் தூக்காரைச் சார்தலும் தாம்பயவா நன்பயம் காய்வின்கண் கூறலும் – பின்பயவாக் குற்றம் பிறர்மேல் உரைத்தலும் இம்மூன்றும் தெற்றென வில்லார் தொழில். (இ-ள்.)தன்பயம் – தனக்கு வரும் பயனை, தூக்காரை – ஆராய்ந்து அதற்கு உதவி செய்யாதாரை, சார்தலும் – அடுத்தலும்; காய்வின்கண் – ஒருவன் சினமுற்ற காலத்து, தாம் பயவா – தாம் பயன்படாமல் போவனவாகிய, நல் பயம் – நன்மையாகிய பயனைத் தரும் Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 53

பாடல் – 53 குருடன் மனையாள் அழகும் இருள்தீரக் கற்றறி வில்லான் தழ்ந்துரையும் – பற்றிய பண்ணின் தெரியாதான் யாழ்கேட்பும் இம்மூன்றும் எண்ணின் தெரியாப் பொருள். (இ-ள்.) குருடன் – குருடனுடைய, மனையாள் – மனைவியினது, அழகும் – அழகும்; இருள்தீர – மயக்கம் நீங்க, கற்று – (உண்மை நூலைக்) கற்று, அறிவிலான் – அதன் பொருளை அறியாதவன், கதழ்ந்து – விரைந்து, உரையும் – சொல்லுகின்ற சொல்லும்; Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 52

பாடல் – 52 கண்ணுக் கணிகலம் கண்ணோட்டம் காமுற்ற பெண்ணுக் கணிகலம் நாணுடைமை – நண்ணும் மறுமைக் கணிகலம் கல்வியிம் மூன்றும் குறியுடையோர் கண்ணே யுள. (இ-ள்.) கண்ணுக்கு – கண்களுக்கு, அணிகலம் – அணியத் தக்க பூணாவது, கண்ணோட்டம் – கண்ணோடுதல்; காமுற்ற – (கணவனால்) விரும்பப்பட்ட, பெண்ணுக்கு – குலமகளுக்கு, அணிகலம் – அணிகலனாவது, நாண் உடைமை – நாணம் உடையவளாயிருத்தல்; நண்ணும் – பொருந்துகின்ற, மறுமைக்கு Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 51

பாடல் – 51 தூர்ந்தொழுகிக் கண்ணும் துணைகள் துணைகளே சார்ந்தொழுகிக் கண்ணும் சலவர் சலவரே ஈர்ந்தகல் இன்னாக் கயவர் இவர்மூவர் தேர்ந்தக்கால் தோன்றும் பொருள். (இ-ள்.) தூர்ந்து – (பொருள்வருவாய்) அடைபட்டு ஒழுகிக் கண்ணும் – (இல்லாமல்) வாழுமிடத்தும், துணைகள் – உறவாவோர், துணைகளே – உறவினரே யாவர்; சார்ந்து – கருத்துக்கு இணங்கி, ஒழுகிக் கண்ணும் – நடந்தவிடத்தும், சலவர் – பகைவர், சலவரே – பகைவரே; இன்னா Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 50

பாடல் – 50 கொள்பொருள் வெஃகிக் குடியலைக்கும் வேந்தனும் உள்பொருள் சொல்லாச் சலமொழி மாந்தரும் இல்லிருந் தெல்லை கடப்பாளும் இம்மூவர் வல்லே மழையருக்குங் கோள். (இ-ள்.) கொள்பொருள் – தான் கொள்ளுதற்குரிய பொருளை, வெஃகி – விரும்பி, குடி அலைக்கும் – குடிகளை வருத்துகின்ற, வேந்தனும் – அரசனும்; உள்பொருள் – உண்மை நிகழ்ச்சியை, சொல்லா – சொல்லாமல், சலம் மொழி – பொய் சொல்லுகின்ற, மாந்தரும் – மனிதரும்; Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 49

பாடல் – 49 ஏவாது மாற்றும் இளங்கிளையும் காவாது வைதெள்ளிச் சொல்லுந் தலைமகனும் – பொய்தெள்ளி அம்மனை தேய்க்கும் மனையாளும் இம்மூவர் இம்மைக் குறுதியில் லார். (இ-ள்.) ஏவு – (பெற்றோரால்) ஏவப்பட்ட, ஆதும் – எந்தக் காரியத்தையும், மாற்றும் – தன்னால் முடியாதென மறுக்கின்ற, இளங்கிளையும் – புதல்வனும்; காவாது – மனைவியைக் காவாமல், வைது – திட்டி, எள்ளி – இகழ்ந்து, சொல்லும் – பேசுகின்ற, தலைமகனும் Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 48

பாடல் – 48 வைததனை இன்சொல்லாக் கொள்வானும் நெய்பெய்த சோறென்று கூழை மதிப்பானும் – ஊறிய கைப்பதனைக் கட்டியென் றுண்பானும் இம்மூவர் மெய்ப்பொருள் கண்டுவாழ் வார். (இ-ள்.) வைததனை – ஒருவன் வைததை, இன் சொல் ஆ – இனிய சொல்லாக, கொள்வானும் – கொள்கின்றவனும், நெய்பெய்த – நெய் வார்த்த, சோறு என்று – சோறு இது ஆம் என்று, கூழை மதிப்பானும் – கூழை மதிக்கின்றவனும், கைப்பு Read more