தொடர் – 33
ஹைக்கூ என்பது தமிழில் இன்று பலரால் கவனிக்கப்படும் விதத்தில் வளர்ந்திருக்கிறது. அது மட்டுமல்லாது பலரால் ஆரோக்கியமாய் விமர்சிக்கப்பட்டும் கொண்டிருக்கிறது.
இருப்பினும்… ஹைக்கூவைப் பற்றிய புரிதல்கள் பலரிடையே வேறுபட்டே திகழ்கிறது. இதில் ஹைக்கூவை எழுதும் கவிஞர்களும் விதிவிலக்கல்ல.
ஹைக்கூ எழுதப்படும் விதத்thai வைத்து அதனை பொதுவில்… மூன்று வகையாக பிரித்துவிடலாம்.
- நேரடிக் காட்சிப் ( View ) பதிவினை மட்டும் காட்டி நகரும் ஹைக்கூ ஒரு முறை.
- ஹைக்கூ வாயிலாக கனமான ஒரு கருத்தினைக் ( Message ) கூறி நகர்வது ஒரு முறை.
- மூன்றாவது ஒரு வகையில்… ஹைக்கூவில் அழகிய காட்சியும் விரியும்… கூடவே அதில் ஒரு கருத்தும் ( View & Message ) இருக்கும்.
ஹைக்கூ எழுதப்படும் முறைகளை இவ்வாறு வகைப்படுத்தி விடலாம்..
ஒவ்வொன்றையும் எடுத்துக்காட்டுடன் பார்த்துவிடலாமா…
முதலில் காட்சிப்பதிவு ஹைக்கூ.
பெயரில்லா மலையொன்றை
காலைப்பனி மூடும்
வசந்த காலம்.
பழைய குளம்
தவளை குதிக்க
நீரின் சப்தம்.
- மட்சுவோ பாஷோ..
இவ்விரண்டு ஹைக்கூவும் நேரடி காட்சிப் பதிவை மட்டுமே ஹைக்கூவில் சொல்லி நகர்வதை காணலாம். ஹைக்கூ வாசி்த்து முடிந்தவுடன் அக்காட்சியானது நம்முடைய மனக்கண்ணில் விரியும்.
இனி இரண்டாவதாக..
கருத்தை சொல்லி நகரும் ஹைக்கூ…
இருளிலிருந்து
வெளிச்சத்திற்கு வர
விளக்குகள் தேவையில்லை.
- அருணாச்சல சிவா
நான் பிறந்தேன்
பின் இறந்தே ஆகவேண்டும்
அவ்வளவே.
- கிசேய்
இவையனைத்தும் கருத்துக்களை சொல்லி நகரும் ஹைக்கூக்கள்.
இவைகளை வாசிக்கும் போதோ.. கேட்கும் போதோ.. கருத்து மட்டுமே நம்முள் இறங்கும்.
இனி… மூன்றாவதான..காட்சியோடு..கருத்தையும் சொல்லி நகரும் ஹைக்கூ.
மரணம் நிகழ்ந்த வீடு
காலி நாற்காலிகள்
முழுதும் மௌனம்.
- ஜெ.பிராங்க்ளின் குமார்
அடர்மரத்தில் காக்கைக் கூடு
உள்ளிருந்து தரையிறங்குகிறது
ஒரு மென்னிறகு.
- வைகறை
இவ்விரண்டு ஹைக்கூவை வாசிக்கும் போது காட்சியும் கண்முன் விரியும்..கூடவே அக்கவிதை உணர்த்தும் கனமும் மனதினை அழுத்தும்..
ஹைக்கூவை எழுதும் முறைகளை வைத்து இவ்வாறாக மூன்று வகையில் பிரிக்கலாம். ஹைக்கூ பொதுவில் பல கோணங்களோடு நம்முள் விரிந்தாலும் வகைபடுத்துதல் எனும் போது இம்மூன்று பிரிவுகளில் அடங்கி விடும்.
இன்று ஹைக்கூவில் அடிக்கடி கேட்கும் வார்த்தை “சாயல் கவிதை…போலச் செய்தல் ” என்பது.. போன்ற விசயத்தை அடுத்துக் காணலாம்.
3 Comments
職棒 · ஜனவரி 17, 2026 at 0 h 44 min
cpbl粉絲必備的資訊平台,提供最即時的cpbl新聞、球員數據分析,以及專業的比賽預測。
livescore · ஜனவரி 17, 2026 at 23 h 25 min
我們的台灣運彩官網官方授權專家團隊第一時間更新官方各大聯盟的比賽分析,包括NBA、MLB、中華職棒等。
icc men's t20 world cup warm-up matches · ஜனவரி 21, 2026 at 0 h 15 min
Winning goals, match winners and their scorers documented