தொடர் – 32

ஹைக்கூவின் வகைமையான சென்ரியு வகை கவிதை குறித்து சென்ற தொடரில் பார்த்தோம். ஹைக்கூ எழுதும் பலருக்கும் அவ்வப்போது திடீரென ஒரு சந்தேகம் முளைப்பது வாடிக்கை. நாம் எழுதியிருப்பது ஹைக்கூவா… அல்லது சென்ரியுவா… என்று.

நகைச்சுவை, கிண்டல், கேலி, எள்ளல், பரிகசிப்பு, சீண்டல் என எழுதப்படும் வகை பெரும்பாலும் சென்ரியுவாகவே அமையும். அது மட்டுமல்லாது… சென்ரியுவிற்கும், ஹைக்கூவிற்கும் பொதுவான ஒரு வேறுபாடும் உண்டு. உங்களது கவிதை இரண்டு காட்சிகளையோ அல்லது அதற்கும் மேற்பட்ட காட்சிகளைக் கொண்டு அமைந்தால்… அது ஹைக்கூ..

அதை தவிர்த்து நேரடியாகவோ, மறைமுகமாகவோ சென்ரியுவிற்கான கிண்டல், கேலி, நகைச்சுவை உணர்வுடன் ஒரே பொருளை மட்டும் கவிதையில் சொல்லி நகர்ந்தால் அது சென்ரியு.

இதோ… இதை கவனியுங்கள்..

கூட்ட நெரிசல்
காணாமல் போகிறது
பிரதான சாலை..!

இது சென்ரியு. நேரடி ஒரே பொருள். கூடவே… நகைச்சுவை உணர்வை தரும் விதம்.

இதையே…

கூட்ட நெரிசல்
காணாமல் போகிறது
ஜல்லிக்கட்டுக் காளை..!

இது ஹைக்கூ. இங்கு முதலிரண்டு வரி வாசிக்கும் போது…

கூட்ட நெரிசல்
காணாமல் போகிறது..

ஏன்… எதற்கு என்ற, ஒரு எதிர்பார்ப்பை உண்டு பண்ணும்…

ஈற்றடியோ..

ஜல்லிக்கட்டுக் காளை… எனும் போது

கூட்ட நெரிசல்

காணாமல் போவதற்கு.. காரணமாக ஜல்லிக்கட்டுக் காளை இருக்கிறது என்றும் நாம் காட்சிப் படுத்துகிறோம்.

வேறொரு காட்சியில்..

கூட்ட நெரிசலில்
காணாமல் போகிறது

ஜல்லிக்கட்டுக் காளை… என்று சொல்லும் போது… கூட்டத்தைக் கண்டு ஜல்லிக்கட்டு காளை மிரண்டு ஓடி… காணாமல் போகிறதோ என வேறு ஒரு சிந்தனையை நமக்கு உணர்த்தும்.

ஒரு ஹைக்கூவிற்குள் மாறுபட்ட கோணத்தில் இரு காட்சிகளும்..

சென்ரியுவாக இருப்பின் நேரடியாக ஒரே காட்சி சற்றே நகைச்சுவை, கிண்டல், கேலி..கலந்து இருக்கும் என அறிந்து கொள்ளலாம்.

இன்னும் வரும்..

முன் தொடர்


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

எழுதக் கற்றுக்கொள்வோம்

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 40

தொடர் – 40

லிமர்புன்

ஹைக்கூ கவிதை வகைமைகளில் அடுத்தபடியாக நாம் காணவிருப்பது லிமர்புன்.

இது சற்றேறக்குறைய ஹைபுன் போலவே தான். முன்னதாக ஒரு உரைநடையோ அல்லது கவிதையோ பதிவிட்டு இறுதியில் அந்த உரைநடைக்கு பொருந்தி வருமாறு..ஹைக்கூவிற்கு பதிலாக லிமரைக்கூவை பதிவிட்டால் அதற்கு லிமர்புன் என்று பெயர்.

 » Read more about: ஹைக்கூ ஓர் அறிமுகம் – 40  »

எழுதக் கற்றுக்கொள்வோம்

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 39

தொடர் – 39

ஹைபுன்

ஹைக்கூ கவிதை வடிவில் ஜப்பானிய கவிவடிவமான ..ஹைக்கூ மற்றும் சென்ரியு மிக முக்கியமானவை.

இந்த வகை கவிதைகளை மேற்கத்திய கவிஞர்களும்,

 » Read more about: ஹைக்கூ ஓர் அறிமுகம் – 39  »

எழுதக் கற்றுக்கொள்வோம்

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 38

தொடர் –38

ஹைக்கூ வாசிக்கும் முறை

கவிதை என்பது இலக்கியத்தின் உயரிய வடிவம்..நமது தமிழ் இலக்கிய மரபில் வெண்பா, விருத்தம், கலிப்பா, கும்மி என பல வகைகள் உண்டு.

 » Read more about: ஹைக்கூ ஓர் அறிமுகம் – 38  »