தொடர் – 31

ஜப்பானிய கவிதை வடிவமான ஹைக்கூவைப் போலவே… பிரசித்தமான ஏறக்குறைய ஹைக்கூவைப் போலவே காட்சி தரும் ஒரு வடிவம் சென்ரியு.

ஹைக்கூவில் கவிநயமும்..கருத்தாற்றலும் மிகுதி.. ஆனால் சென்ரியுவில் இயல்பான நகைச்சுவை, அங்கதம், கேலி, கிண்டல், எள்ளல், சாடல், போன்ற உணர்வுகளே மேலோங்கி நிற்கும்.

ஜப்பானில் “சென்ரியு” எனும் புனைப் பெயரைக் கொண்ட “கராய் ஹச்சிமோன்” ( 1716-1790 ) என்பவரால் தொகுத்து வழங்கப்பட்ட கவிதை வடிவம் இது என்பதனால் அவரது பெயரிலேயே சென்ரியு என வழங்கப்படலாயிற்று.

சென்ரியு என்பதை.. மயேகூ எனும் முதலடியை ஏதேனும் ஒருவர் எழுதி வைத்துவிட்டு சென்று விடுவார். அதைத் தொடர்ந்து ஸூகெய் எனும் இணைக்கப்பட்ட ஒரு வார்த்தையை வேறொருவர் எழுதுவார். பலரும் கூட அந்த மயேகூ எனும் முதலடிக்கு இணையான ஸூகெய் வார்த்தையை எழுதுவார்கள். இதில் எவரது வார்த்தை தொடர் சிறப்பாக இருக்கிறதோ… அவர்களுக்கு பரிசுகள் எல்லாம் வழங்கப்படும். இவ்வாறான நிகழ்வுகள் மதுபான கடைகள், டீ கடைகள் என அங்காடிகளில் நடத்தப் பட்டுள்ளன. இவ்வாறான கவிதைகளை தொகுத்து நூலாகவும் வெளியிட்டுள்ளார் கராய் சென்ரியு. ஆகையால் இவ்வடிவ ஹைக்கூ வகைமை கவிதைகளுக்கு அவரது பெயரையே வைத்து விட்டனர்.

சென்ரியுவின் சீடரான அருபெஷி என்பவரும் 18 ஆம் நூற்றாண்டு ஆரம்பத்தில் சென்ரியுவிற்கு மாற்று வடிவம் தர முற்பட்டு…இரண்டு அடிகளாய்…

அன்பு செலுத்த விரும்புகையில்
பெற்றோர்கள் போய்விட்டனர்..!

என சென்ரியுவை மூன்றடியில் இருந்து இரண்டடிக்கு மாற்றி எழுதி பரிசோதித்தார்.

பொதுவில்… இன்று தமிழில் எழுதப்படும் பல ஹைக்கூக்களும்… சென்ரியுவாகவே உள்ளது எனலாம். நமது சூழலுக்கு அதுவே பெரும்பாலும் பொருந்திப் போகிறது.

அரசியல் சாடல், சமூக சாடல், மூடநம்பிக்கை,  கிண்டல் என நாம் எழுதும் நகைச்சுவை ததும்பும் கவிதைகள் சென்ரியுவாகவே மலர்கிறது.

தமிழில் இதனை ஈரோடு தமிழன்பன் அவர்கள் தனித் தொகுப்பாய் தந்துள்ளார்.

உங்களின் பார்வைக்கு…சில சென்ரியுக்கள்.

பொறுமையற்ற சாரதி
பாய்ந்து முந்திக் கொண்டார்
எமன்..!

  • சத்தார் முகம்மட் அஸாத்

கொய்யாப்பழம் தந்த காதலி
நெருங்கி வந்து கேட்கிறாள்
கடித்த மீதியை..!

  • சத்தார் முகம்மட் அஸாத்

சாதிகள் வேண்டாம்
ஐயோ… அடிக்காதீர்கள்.
நான் உங்க சாதிக்காரன்..!

பிறக்கும் போது
கொம்பு முளைத்திருந்தது
நோக்கியோ செல்போன்..!

இவ்விரண்டும் எனது கைவண்ணத்தில் உருவான சென்ரியுக்கள்.

இனி…  வேறு ஒரு தகவலுடன் சந்திப்போம்…

இன்னும் வரும்…

முன் தொடர்


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

அறிமுகம்

வாழ்வி(ய)ல் வசந்தம்!

உள்ளிழுத்து வெளிவரும் – என்
உஷ்ண மூச்சுக் காற்று
இதயத்தின் ரணங்களை
மொழிபெயர்க்கும்!

என் வீட்டு ஜன்னல் கதவு
என் மன ஓலத்தை எதிரொலிக்க
ஒத்தாசை புரியும்!

 » Read more about: வாழ்வி(ய)ல் வசந்தம்!  »

ஆன்மீகம்

வாரியார் படைப்பில், வாழ்வியல் நெறிகள்.

“அன்பால் அறிவால் அகங்குளிரும்
அமுதமொழியால் அனைவரையும்”

தன்பால் ஈர்க்கும் தகைமிகு பேச்சாளர், நல்ல எழுத்தாளர், மூதறிஞர், சித்திரகவி பாடிய கவிஞர், முத்தமிழ் அறிஞர், ஆன்மீகச் செம்மல் என்று அடுக்கிக் கொண்டே போகக்கூடிய வல்லமை பெற்ற வாரியார் சுவாமிகளின் நூல்களைப் படிக்கும் பொழுது தனிப்பெரும் இன்பம் தன்னால் வருவதை நாம் உணர முடியும்.

 » Read more about: வாரியார் படைப்பில், வாழ்வியல் நெறிகள்.  »

இலக்கணம்-இலக்கியம்

கவிதைக்கழகு இலக்கணம் – 20

தொடர் 20

வெண்பா ஆசிரியப்பா இரண்டு பற்றியும் தெரிந்து கொண்ட நாம் அடுத்ததாக கலிப்பாவைக் காண்போம்.

இது 3 ஆவது பாவகை

மாமுன் நிரை
விளமுன் நேர்
காய்முன் நேர் இவை வெண்பா

நேர்முன்நேர்
நிரைமுன் நிரை
நேர் முன் நிரை
நிரை முன் நேர் இவை ஆசிரியப்பா

ஆனால் கலிப்பாவில்

காய்முன் நிரை வரும்
அதாவது கலித்தளை மிகுந்து வரும்
மற்ற தளைகள் குறைந்து வரலாம்
புளிமாங்காய் கருவிளங்காய் அதிகம் வரும்
கனிச்சீர்கள் வாரா
அளவடிகளால் ஆனது

கலிப்பா மற்ற பாக்கள் போல ஒரே உறுப்புகள் கொண்டமையாமல் பல உறுப்புகள் உடையது.

 » Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 20  »