பாடல் – 85

எள்ளப் படுமரபிற் றாகலும் உள்பொருளைக்
கேட்டு மறவாத கூர்மையும் முட்டின்றி
உள்பொருள் சொல்லும் உணர்ச்சியும் இம்மூன்றும்
ஒள்ளிய ஒற்றாள் குணம்.

(இ-ள்.) எள்ளப்படும் – (தன் செய்கை பகைவரால்) நன்கு மதிக்கப்படாத, மரபிற்று ஆகலும் – முறையை உடையதாதலும்; உள் பொருளை – (அப் பகைவரிடத்து) நடந்துள்ள காரியத்தை, கேட்டு மறவாத – கேட்டுப் பின் மறவாத, கூர்மையும் – கூரறிவுடைமையும்; உள் பொருள் – அப் பொருளை, முட்டு இன்றி – தடையின்றி, சொல்லும் உணர்ச்சியும் – (தன் அரசனுக்குச்) சொல்லுகின்ற தெளிவுடைமையும்; இ மூன்றும் – ஆகிய இம் மூன்றும், ஒள்ளிய – அறிவுள்ள, ஒற்று ஆள் – வேவுகாரனது; குணம் – தன்மையாம்; (எ-று.)

(க-ரை.) பகைவன் நாட்டில் தான் இருந்து செய்யும் செய்கை பிறர் கருதத் தக்கது ஆகாதபடி செய்தலும், அவன் கருத்தறிந்து மறவாதிருத்தலும் அக் கருத்தை அரசர்க்குச் செவ்வையாகத் தெரிவிக்கும் வலிமை பெற்றிருத்தலும், வேவுகாரர்க்குரிய குணங்களாம் என்பது.

மரபிற்று : குறிப்பு வினைமுற்று; குறிப்பு வினையாலணையும் பெயருமாம். உள் பொருள் – உண்மையாகிய பொருள் : பண்புத்தொகை – முட்டு – முட்டுதல் : முதனிலைத் தொழிற்பெயர்.

முன் பக்கம் செல்ல…    தொடரும்


2 Comments

https://Hellspin4nzcasino.wordpress.com/ · அக்டோபர் 19, 2025 at 23 h 41 min

Hi everyone, it’s my first go to see at this website, and post is truly fruitful in support of me, keep up posting these content. https://Hellspin4nzcasino.wordpress.com/

https://hvilya.COM.Ua/rizne/stylni-podarunky-dlya-cholovikiv-koly-vazhlyva-kozhna-detal/ · நவம்பர் 21, 2025 at 16 h 55 min

Just want to say your article is as amazing. The clarity for
your put up is simply great and i can think you’re an expert
in this subject. Well together with your permission allow me to clutch your RSS feed to stay updated with forthcoming post.
Thanks one million and please keep up the enjoyable work. https://hvilya.COM.Ua/rizne/stylni-podarunky-dlya-cholovikiv-koly-vazhlyva-kozhna-detal/

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

Related Posts

இலக்கணம்-இலக்கியம்

தமிழ்நெஞ்சம் புகழாரம்

தமிழ்நெஞ்சம் புகழாரம் புத்தகம் பற்றி ஒரு பார்வை...

ஒரு புகழாரத்தைத் தனிப் புத்தமாக பதிக்க வேண்டுமென்றால் அதன் தரம் எப்படி இருக்கும்? இப்படித்தான் இருக்கும் என்கிறது இந்தத் தொகுப்பு. தித்திப்பே திரண்டு வந்து சொற்களுக்குள் புகுந்து கொண்ட திகட்டாத இனிப்பு.நாவூறும் பாக்களின் நற்கோர்வை காரணம் அதன் சொற்கோவை.

 » Read more about: தமிழ்நெஞ்சம் புகழாரம்  »

இலக்கணம்-இலக்கியம்

கவிதைக்கழகு இலக்கணம் – 20

தொடர் 20

வெண்பா ஆசிரியப்பா இரண்டு பற்றியும் தெரிந்து கொண்ட நாம் அடுத்ததாக கலிப்பாவைக் காண்போம்.

இது 3 ஆவது பாவகை

மாமுன் நிரை
விளமுன் நேர்
காய்முன் நேர் இவை வெண்பா

நேர்முன்நேர்
நிரைமுன் நிரை
நேர் முன் நிரை
நிரை முன் நேர் இவை ஆசிரியப்பா

ஆனால் கலிப்பாவில்

காய்முன் நிரை வரும்
அதாவது கலித்தளை மிகுந்து வரும்
மற்ற தளைகள் குறைந்து வரலாம்
புளிமாங்காய் கருவிளங்காய் அதிகம் வரும்
கனிச்சீர்கள் வாரா
அளவடிகளால் ஆனது

கலிப்பா மற்ற பாக்கள் போல ஒரே உறுப்புகள் கொண்டமையாமல் பல உறுப்புகள் உடையது.

 » Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 20  »

இலக்கணம்-இலக்கியம்

கவிதைக்கழகு இலக்கணம் – 19

தொடர் 19

வெண்பாதான் கடினம் என்று புலவர்கள் சொல்வதுண்டு. வெண்பாவில் சிறப்பாக எழுதுபவர்களை வெண்பாப் புலி என்றும் அழைக்கப்படுவார்கள். நிறைய தமிழ் நூல்கள் வெண்பாவில் புனையப் பட்டுள்ளன. நீங்களும் இப்போது வெண்பா எழுத முற்பட்டிருப்பீர்கள் எனக் கருதுகிறேன்.

 » Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 19  »