ஹைக்கூ ஓர் அறிமுகம் – 56

தொடர் 56 நாம் காணப் போவது, ஹைக்கூ கவிதையில் மிக முக்கியமான விசயம். ஒரு ஹைக்கூ கவிதையில் எவையெல்லாம் இடம் பெறலாம். எவையெல்லாம் தவிர்க்க பட வேண்டும் என்பதை இந்த பகுதியில் காண்போம். முதலில் ஹைக்கூவில் இவை அவசியம் இடம்பெற வேண்டியவை என எவற்றையெல்லாம் சொல்லலாம் எனக் காண்போம். கவிதையில் கிகா எனப்படும் பருவகாலம் அவசியமாய் காட்டப்பட வேண்டும்..சில கவிதைகளில் தவிர்க்க வேண்டியதிருப்பின் தவறில்லை. பருவகாலம் என்பது நேரடியாய் பருவ Read more

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 55

தொடர்  55 ஹைக்கூ கவிதைகள் நம்முடைய வாசிப்புத் திறனை சுவாரஸ்யமாக்குவது மட்டுமின்றி, நமது எண்ணங்களையும், சிந்தனைகளையும் மேம்படுத்த உதவுகிறது. ஒவ்வொரு அடிகளிலும் நமது சிந்தனைகளை விரிவடையச் செய்வது இதன் தனிச் சிறப்பு. நமது இந்திய நாட்டில் போக்குவரத்தில் கடைப்பிடிக்கப்படும்.. நில் கவனி செல். எனும் வாசகம் கூட மிகச்சிறந்த ஹைக்கூ என்று சொன்னால்.. தவறில்லை என்பேன். நில்… ஏன்.. எதற்கு.. என்ற கேள்விகள் இங்கு தொக்கி நிற்கிறது..முதலடியில். கவனி.. எதை Read more

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 54

தொடர்  54 தமிழ் ஹைக்கூ உலகில், தவிர்க்க இயலாத ஒரு ஆளுமையாளர் கவிப்பேரருவி ஈரோடு தமிழன்பன் அவர்கள். பன்முகத் தன்மை கொண்டவர். அவரது சில ஹைக்கூ மற்றும், சென்ரியுக்களை இங்கு காண்போம். விட்டிலின் சிறகு எழுதியது ஒளியின் ஸ்பரிசமே மரணம். அனைவரும் அறிந்த விசயந்தான். விட்டிலானது விளக்கினில் விழுந்து மாய்ந்து போகுமென்பது.  தெரிந்த தகவலொன்றை ஹைக்கூவில  சொல்லி நகர்கிறார்கள் எனில் அங்கு பூடகமாக வேறொன்றைச் சொல்ல வருகிறார்கள் என்பது பொருள், Read more

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 53

தொடர்  53 ஜப்பானிய ஹைக்கூ கவிஞர்களில் பிரபலமான #இஸ்ஸா #பூசன் மற்றும் #ஷிகி ஆகியோர் ஹைக்கூ உலகிற்கு நல்கிய சில கவிதைகளை இவ்வாரம் உங்களின் பார்வைக்குத் தருகிறேன்.. கொபயா ஷி இஸ்ஸா (1763_1827 ) கிராமியக் கவிஞர் இவர்..இளம் வயதில் பல இன்னல்களுக்கும் துயரங்களுக்கும் ஆளானவர்..சிற்றுயிர் நேசர்…பூனை..ஈ.. போன்ற உயிரினங்கள் பால் மிகுந்த அன்பினைச் செலுத்தியவர். ** மலை ஏறு ஓ..நத்தையே மெதுவாக..மெதுவாக. ** கொல்லாதே கைகளையும் கால்களையும் தேய்த்துக் Read more

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 52

தொடர் – 52 உலகின் பல நாட்டு இலக்கியங்களில் எழுதப்பட்டிருக்கும் கவிதைகளில் அபூர்வமாய் சில கவிதைகள் தமிழின் சங்க காலப் பாடல்களோடு பொருந்தி போவதும் உண்டு அவ்வாறான ஒரு நிகழ்வு ஹைக்கூ கவிதை இலக்கியத்திலும் நிகழ்ந்துள்ளது..அது போன்ற ஒன்றை இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.. நமது தமிழ் இலக்கியத்தின் சங்ககால அகநானூற்றுப் பாடல் ஒன்று.. துறைமீன் வழங்கும் பெருநீர்ப் பொய்கை அரிமலர் ஆம்பல்மேய்ந்த நெறி மருப்பு ஈர்ந்தண் எருமைச் Read more

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 51

தொடர் – 51 உலக அரங்கில் பிரசித்தி பெற்ற ஒரு ஹைக்கூ ..ஜப்பானிய ஹைக்கூ பிதாமகர் மட்சுவோ பாஷோ கி.பி 17ஆம் நூற்றாண்டில் எழுதிய ஒரு ஹைக்கூ.. பழைய குளம் தவளை தாவிக் குதிக்க நீரில் சப்தம். The old pond a frog jumps in the sound of the water. பழைய குளம் என்றாலே அது பாழடைந்த குளமாகவும்..குப்பைகளால் நிரம்பி நீரற்றுப் போன ஒரு நிலையையே Read more

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 50

தொடர் – 50 ஒரு பயணி பேரூந்து நிலையத்தில் நின்றிருந்த ஒரு பேரூந்தில் ஏறியதும்..அருகிலிருந்த பயணியிடம் ” இந்த பேரூந்து எங்கே செல்கிறது..? ” எனக் கேட்டார்..அந்த பயணியும் சற்றே கிண்டலாக.. “நீங்கள் எங்கே செல்ல வேண்டும்..அதை சொல்லுங்கள் .” என்றாராம். உண்மை தானே.. நமக்கு எது தேவையோ அதை நாம் கேட்பதில்லை.. தேவையில்லாத பலவற்றைக் கேட்டு நம் நேரத்தையும்..காலத்தையும் விரயமாக்கிக் கொண்டிருப்போம்.. நமது இலக்கு இதுவென தெளிவாய் தெரிந்தால் Read more

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 49

தொடர் – 49 இந்த தொடர்களின் வாயிலாக ஒரு ஹைக்கூவை சிறப்பாக எழுதுவது எப்படி.. தவிர்க்க வேண்டிய விசயங்கள் என்னென்ன என்பதை தெரிந்து கொண்டிருப்பீர்கள்.. ஹைக்கூ பொதுவாக நமது அனுபவங்களே. கண்டும் .. உணர்ந்தும் கொள்ளக் கூடிய விசயங்களைக் கவிதையாக நாம் வடிக்கும் போது அது ஆழ்ந்த பொருளை அங்கு விளைவிக்கிறதெனலாம். ஒரு ஓவியத்தில் வரையப்பட்ட விசயங்களை விட வரையாமல் விடப்படும் இடங்கள் அதிக வலிமையுடையதாக இருக்கும் என்பார்கள்.. அதைப் போலவே Read more

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 48

தொடர் – 48 ஹைக்கூ ஜப்பானிய மரபுக் கவிதை வகையைச் சார்ந்தது என்பதை அனைவரும் அறிவோம்..மேற்கத்திய கவிஞர்கள் வாயிலாக உலகின் பல பகுதிகளுக்கும் பரவிய இந்தக் கவிதை வடிவம்.. பல கவிஞராலும் ஈர்க்கப்பட்டு இன்று பலராலும் எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு கவிதை வடிவமாகவும் திகழ்கிறது. இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் ஹைக்கூ நுழைந்து நூறாண்டுகளைக் கடந்து விட்டது எனினும்.. இன்னும் பலர் அதை புரிந்தும் புரியாமலுமே கையாண்டு கொண்டிருக்கிறார்கள்.. ஒரு சிலரோ Read more

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 47

தொடர் – 47 எந்தவொருக் கவிதை வடிவமும் மற்றவர்களால் விமர்சனத்திற்கு ஆட்படுவது இயற்கையே.. மரபாகிலும் சரி… அதன்பின் புதுக்கவிதை..நவீனக்கவிதை தொட்டு இன்று ஹைக்கூ வரையில் அனைவராலும் நேர்மறையாக மட்டுமின்றி… எதிர்மறையாகவும் விமர்சனம் எழுவதென்பது வாடிக்கையே. ஒட்டக்கூத்தன் பாடலுக்கு ரெட்டைத் தாழ்ப்பாள் என மரபுக் கவிதைக்கே இம் மண்ணில் எதிர்ப்புகளும்.. விமர்சனங்களும் எழும் போது இன்றையக் காலக் கட்டத்தில் ஹைக்கூவும் அது போன்ற விமர்சனங்களை சந்தித்தே வருகிறது. மரபு மட்டுமே கோலோச்சிக் கொண்டிருந்த Read more