தொடர் – 51

உலக அரங்கில் பிரசித்தி பெற்ற ஒரு ஹைக்கூ ..ஜப்பானிய ஹைக்கூ பிதாமகர் மட்சுவோ பாஷோ கி.பி 17ஆம் நூற்றாண்டில் எழுதிய ஒரு ஹைக்கூ..

பழைய குளம்
தவளை தாவிக் குதிக்க
நீரில் சப்தம்.

The old pond
a frog jumps in
the sound of the water.

பழைய குளம் என்றாலே அது பாழடைந்த குளமாகவும்..குப்பைகளால் நிரம்பி நீரற்றுப் போன ஒரு நிலையையே நம் கண்முன் நிறுத்தும்.. அவ்விடத்தில் தவளைகள்..பாம்புகள் போன்ற உயிரினங்கள் இருப்பதும் இயற்கையே.. அது போன்ற ஒரு குளக்கரையில் எவராவது நடந்து செல்ல முயற்சிக்கும் போது அதன் கரைகளில் இருக்கும் தவளை தாவி குதிப்பதும் இயற்கையான ஒரு நிகழ்வு தான்..ஆனால் ஈற்றடியில் நீரில் சப்தம் என்ற ஒரு சொல்லின் வாயிலாக பழைய குளமாக இருந்தாலும் கனமழையின் காரணமாக அது நிறைந்திருக்கவும் வாய்ப்புள்ளதையும் அறிந்து கொள்ளலாம்.. அவ்வாறு நிறைந்த நீருள்ள ஒரு குளத்தில் தவளை தாவிக் குதிக்க எழுகிறது நீரில் சப்தம்.. என நிறைவு செய்து விட்டார்.

இதில் என்ன புதிய செய்தி..ஏன் இந்த கவிதை உலகளாவிய மதிப்பினைப் பெற்றது… இந்தக் கவிதையை ஏன் ஜப்பான் தேசமே கொண்டாடி மகிழ்ந்தது.. இத்தனைக்கும் காரணம் இல்லாமல் இல்லை..

படிப்பதற்கும்..பார்ப்பதற்கும் எளிமையாய் இருக்கும் இந்தக் கவிதை படிம உத்தியில் எழுதப்பட்ட ஒரு கவிதை..

இதை ஜப்பான் தேசத்தவரும்..உலக நாடுகளும் கொண்டாட என்ன காரணம் என்பதை அறிவதற்கு முன்..நீங்கள் இதை தெரிந்து கொள்ள வேண்டும்.

ஜப்பானில் ஹைக்கூ பிரசித்தமாகத் துவங்கியது எடோ காலம் ( Edo Period ) கி.பி 1603 லிருந்து கி.பி.1867 வரை

அப்போது மன்னர் பரம்பரையினரே ஜப்பானை ஆட்சி செய்து வந்தார்கள்.அவர்கள் நோபிள்ஸ் அல்லது மிக்காடோ (Nobles or Mikado..the Emperor) என அழைக்கப் பட்டார்கள்.. அவர்களது படைப்பிரிவு தலைவர்களாகவும் மக்களை அதிகாரம் செய்யும் தலைமை பொறுப்பிலும் இருந்தவர்கள் சாமுராய்கள் ( Samurai ) எனப் பட்டனர்..கீழான நிலையில் இருந்தவர்களை சோனின் ( Chonin ) அல்லது அயினோ ( Aino ) என்ற சாதி பகுப்பு முறைகளும் இருந்தது..சாமுராய் வீரர்களிலும் சற்று மேம்பட்டவர்களை ஷோகன் ( Shogun ) எனவும் அழைத்தார்கள்..சோனின் மற்றும் அயினோ என அழைக்கப்பட்ட கீழ்தட்டு மக்கள் தான் பொதுவாக புராக்குமின் ( Burakumin ) என வழங்கப் பட்டனர்..இவர்களே விவசாயிகளாகவும்..மீன்பிடித் தொழிலையும் செய்து வந்தவர்கள்..

ஷோகன்களோ..சாமுராய்களோ புராக்குமின்களை சற்றே தரக்குறைவாகவே நடத்தி வந்த பழைமைவாதிகள் நிறைந்த காலமே எடோ காலம்..அவ்வாறான சூழலில் ஒன்றிரண்டு சாமுராய்கள் புராக்குமின்னுடன் இணக்கமாக இருக்க பயங்கர எதிர்ப்பும் வலுத்த காலம் அது..

மட்சுவோ பாஷோ சாமுராய் இனத்தைச் சேர்ந்தவர்..அவர் மக்கள் அனைவரையும் ஒன்றாகவே பாவித்து நடத்திய ஜென் துறவி..அவருக்கு பழைமைவாதிகளால் எவ்வளவு இடையூறும்..துன்பமும் நேர்ந்திருக்கும் என எண்ணிப் பாருங்கள்..அந்தக் காலச் சூழலை மனதில் நிலைநிறுத்திக் கொண்டு..வாருங்கள் இந்தக் கவிதைக்கு..

பழைய குளம்
தவளை தாவிக் குதிக்க
நீரில் சப்தம்.

பழைய குளம்…பழைமைவாதிகளுக்கான படிமம்.

தவளை பாஷோவிற்கான படிமம்.. அவரின் புரட்சிகரப்போக்கு பழைமைவாதத்திலிருந்து தாவுவதற்கான படிமம்.

நீரில் எழும் சப்தம்..பழைமை வாதிகளின் கருத்தில் ஏற்படும் முரண்களும்..சலசலப்பும்.

பழைய குளத்தைச்சேர்ந்த ஒரு தவளை அதை விட்டுத்தாவும் போது அந்த பழைமை வாதிகளின் கருத்தில் சலனத்தை ஏற்படுத்தி விடுகிறது…என்பதே இக் கவிதையின் மூலம்… இதுவும் எனது பார்வையும்..கோணமுமே…பாஷோவைப் பற்றியும்…பழங்கால ஜப்பானைப் பற்றியும் தேடலைத் துவங்கிய போது எனக்கு கிடைத்த தகவல்…இது உண்மையாகவும் இருக்கலாம்.. தவறாகவும் இருக்கலாம்..ஒரு எளிய கவிதையை ஜப் பானிய தேசமே கொண்டாடி மகிழ்ந்திருக்கிறது எனில் அடக்குமுறையாளர்களின் எதேச்சிகாரப் போக்கை கண்டித்த…அல்லது மீறிய ஒரு பார்வையை அக்கவிதை விதைத்த பலன் தான் என்பது எனது எண்ணம்.

டோக்கியோ காலத்திற்குப் பின்னும்..ஆங்கிலேயரது ஆட்சிக்குப் பின்னும் புராக்குமின்னும் ஏனைய உயர் வகுப்பினரும் சாமுராய்களும் ஒன்றென கலந்து விட்டனர்… இன்று சாமுராய்களின் உடலில் புராக்குமின்னுடைய இரத்தமும்..புராக்குமின் உடலில் சாமுராய் இரத்தமும் ஒன்றென கலந்த காரணத்தாலேயே…உலக அரங்கில் ஜப்பானியர்கள் இரண்டாம் உலகப் போரில் பயங்கர பொருளாதார அடியைப் பெற்றபோதும் வீறுகொண்டெழ உதவியது இந்த இன இணக்கமேயாகும்.

இன்னும் வரும்

முன் தொடர்

 


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மின்னிதழ்

ஹைக்கூ திண்ணை 13

ஹைக்கூ திண்ணை செப்டம்பர் / ஒக்டோபர் மின்னிதழைத் தொகுக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன். இந்தப் பெறுமதியான வாய்ப்பை வழங்கிய கவிச்சுடர் கல்யாணசுந்தரம் ஐயா அவர்களுக்கு முதற்கண் எனது நெஞ்சம் நிறைந்த நன்றிகளைச் சமர்ப்பிக்கிறேன். ஹைக்கூ என்றால் என்ன, அதை விளங்கிக் கொண்டு அதன் விதிமுறைகள் பற்றி அறிந்து அதன்படி எழுத எல்லோரும் முனைகின்றார்களா என்பது கேள்விக்குறியே. சிலர் இலக்கண விதிமுறைக்கேற்ப ஹைக்கூ கவிதைகளை எழுதுகின்றனர். ஆனாலும் சிலர் இலக்கண விதிகளைக் கொஞ்சம் மீறிப் புதுமையாக, வித்தியாசமாக எழுதுபவர்களாக இருக்கிறார்கள்...

ஆன்மீகம்

அருள் வாக்கியே! அப்துல்காதிரே!

அருள் வாக்கியே அப்துல் காதிரே!
திருப்புகழ் பாடிப் புகழ்சேர்த்த மெய்ஞ்ஞானியே!

வெண்பா வினால் விளக்கேற்றியே
விந்தைகள் தான்செய்த இறைநேசரே!

(அருள்)

எரியென்றே நீபாடித் திரியேற்றி னாய்
அரியணையில் அணையென்றே ஒளிபோக் கினாய்!

 » Read more about: அருள் வாக்கியே! அப்துல்காதிரே!  »

மின்னிதழ்

நிறைய சிந்தியுங்கள் ஹைக்கூ பிறக்கும்

ஹைக்கூ கவிதைகள் எப்படி இருக்க வேண்டும் என்பதில் குழப்பம் வருவதில் அர்த்தமில்லை அவசியமில்லை தேவையுமில்லை. வாழ்ந்த ஹைக்கூ முன்னோடிகள் கவிக்கோ அப்துல் ரகுமான் தி. லிலாவதி, கவிஞர் மித்ரா, நிர்மலா சுரேஷ் போன்றவர்களின் கவிதை களைப் பாடமாக படியுங்கள். நாம் வாழும் காலத்தில் இருக்கின்ற தமிழக மூத்தக் கவிஞர்கள் கவிஞர் அமுதபாரதி கவிஞர் ஈரோடு தமிழன்பன் கவிஞர் அறிவுமதி கவிச்சுடர் கா. ந. கல்யாண சுந்தரம் கவிஞர் அமரன் கவிஞர் வே. புகழேந்தி கவிஞர் அனுராஜ் கவிஞர் இளையபாரதி கந்தகம் பூக்கள் இவர்களின் கவிதைகளைப் படித்து நுணுக்கங்களை கற்றுக் கொள்ளுங்கள்.