தொடர் – 52

உலகின் பல நாட்டு இலக்கியங்களில் எழுதப்பட்டிருக்கும் கவிதைகளில் அபூர்வமாய் சில கவிதைகள் தமிழின் சங்க காலப் பாடல்களோடு பொருந்தி போவதும் உண்டு அவ்வாறான ஒரு நிகழ்வு ஹைக்கூ கவிதை இலக்கியத்திலும் நிகழ்ந்துள்ளது..அது போன்ற ஒன்றை இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்..

நமது தமிழ் இலக்கியத்தின் சங்ககால அகநானூற்றுப் பாடல் ஒன்று..

துறைமீன் வழங்கும் பெருநீர்ப் பொய்கை
அரிமலர் ஆம்பல்மேய்ந்த நெறி மருப்பு
ஈர்ந்தண் எருமைச் சுவல்படு முதுபோத்து
தூங்கு சேற்று அள்ளல் துஞ்சி, பொழுதுபட
பைந்நிண வராஅல் குறையப் பெயர்தந்து
குரூஉக்கொடிப் பகன்றை சூடி, மூதூர்ப்
போர்செறி மள்ளரின் புகுதரும் ஊரன்.

அகநானூற்றின் 316 வது பாடலாக ஒரம்போகியார் எனும் புலவரின் பாடல் இது..

குளத்தில் ஆம்பல் மலர்களை மேய்ந்த எருமை ராத்திரியெல்லாம் அந்த குளத்தில் அலைந்து திரிந்து புரண்டு திளைத்து காலையில் எழுந்து வருகையில் திறட்சியான விரால் மீன்களை மிதித்து துவம்சம் செய்து குளத்தில் கட்டி உருண்டு சண்டையிட்ட மல்லன் போல அதன் கொம்பில் பகன்றை கொடியை சூடிய படி வெளியே வருகிறதாம்..

இப்பாடல் தலைவியின் தோழியானவள் தலைவனுக்கு கூறும் அறிவுரைப் பாடலாக பாடப் பட்டுள்ள ஒரு பாடல்..

இதே சாயலில் ஹைக்கூவில் ஆப்பிரிக்க நாவலாசிரியரும் ஹைக்கூ கவிஞருமான ரிச்சர்ட் ரைட் என்பவர் எழுதிய ஹைக்கூ கவிதையை கவனியுங்கள்..

காட்டிலிருந்து வரும்
மாட்டின் கொம்பில்
முல்லைக் கொடி.

  • ரிச்சர்ட் ரைட்.

இது போன்ற நிகழ்வுகள் எதேச்சையாக நிகழ்ந்தவை எனினும் சுவையானவை என்பதை மறுப்பதற்கில்லை.

நன்றி..எழுத்தாளர் சுஜாதாவின் ஹைக்கூ கட்டுரையில் இருந்து..

இன்னும் வரும்

முன் தொடர்


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

இலக்கணம்-இலக்கியம்

கவிதைக்கழகு இலக்கணம் – 2

தொடர்- 2

எதுகை தொடர்ச்சி

இதுவரை இரண்டு எதுகைகள் பார்த்தோம் அடி எதுகை மற்றும் இணை எதுகை

மற்றவற்றைப் பார்க்குமுன் ஒரு குறிப்பு

இது எதுகையை எழுதும் போது நாம் அவசியம் கவனத்தில் கொள்ள வேண்டியது.( நன்றி.

 » Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 2  »

இலக்கணம்-இலக்கியம்

கவிதைக்கழகு இலக்கணம் – 1

வணக்கம் நண்பர்களே

– இராம வேல்முருகன்

நாம் சிகையலங்காரம் முகச்சவரம் முகப்பூச்சு வண்ண ஆடைகள் போன்றவற்றைப் பயன்படுத்துவது நம்மை அழகாகக் காட்டுவதற்குத்தான்.

இதுபோலவே ஒரு கவிதைக்கும் அழகு சேர்ப்பதற்காக அதற்கு எதுகை மோனை1 இயைபு போன்றவற்றைச் சேர்த்து எழுதும் போது அக்கவிதை மேலும் அழகு உள்ளதாக இருக்கும்.

 » Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 1  »

அறிமுகம்

தென்றலின் தேடலில்…

தென்றலின் தேடலில் நுழைந்தேன். அசையாதிருக்கும் மரத்தை அசைத்து அழகும், சுகமுமூட்டும் தென்றல் காற்றென நம்மையும் அழைக்கிறது தென்றலின் தேடல் கவிதை நூல்.

பாரதியின் வரவிற்குப் பின் தமிழ்ச் சமுதாயத்தில் கவிஞர்கள் பெருகி வளர,

 » Read more about: தென்றலின் தேடலில்…  »