கவிதை
விதி
துன்பம் உற்றோர் துவண்டு உரைப்பர்
நன்றே விதியால் நலிந்தோம் என்றே!
இன்பம் உற்றோர் ஏனோ விதியை
எண்ணிப் பார்த்தே ஏத்துதல் இல்லை!
மதியைக் கொண்டு வறுமை போக்கி
சதியை வெல்லல் விதியின் செயலே!
துன்பம் உற்றோர் துவண்டு உரைப்பர்
நன்றே விதியால் நலிந்தோம் என்றே!
இன்பம் உற்றோர் ஏனோ விதியை
எண்ணிப் பார்த்தே ஏத்துதல் இல்லை!
மதியைக் கொண்டு வறுமை போக்கி
சதியை வெல்லல் விதியின் செயலே!
வண்டுகடி பூ நிற மதிப்பெண் அட்டை நீட்டி " கையெழுத்து வாங்கிட்டு வரச்சொன்னாங்க சாரு " அழுக்குடன் வெய்யிலில் கிடந்ததால் மடமடத்து நிற்கும் பாவாடை கசக்கி நிற்பேன்.
உலகம் எங்கும் படர்ந்த கூட்டம் தமிழர் கூட்டம் - என்றும் ஒருமைப் பாட்டைப் போற்றிப் பேணும் புனிதக் கூட்டம்! அண்டை, மேலை நாடு தோறும் உழைக்கும் கூட்டம்! - என்றும்
பொன்னும் பொருளும் நிறைந்தாலும்
போற்றும் அருளால் சிறந்தாலும்
மின்னும் கல்வி இல்லாரை
மேன்மை யாக எண்ணாரே!
எண்ணும் எழுத்தும் கண்ணாகும்
ஏனைக் கலைகள் பொன்னாகும்!
மண்ணில் நன்றாய் வாழ்தற்கு
வளரும் கல்வி பெறுவோமே!
பேரீச் சம்போல் சுவைகூட்டி, பெரியோர் சொன்ன நெறிகாட்டி, மாரி பொழியும் குளிராக மனமே சிலிர்க்கக் கவிதீட்டி, பாரி வள்ளல் கொடைபோல வாரித் தமிழைப் படைத்திடுமே! பாரீச் நகரில் பைந்தமிழைப் பரப்பி மகிழும் தமிழ்நெஞ்சம்!
ஆல்பத்தில் சிரிக்கும் உறவு முகங்கள் ஆபத்தில் உதவிகேட்க அவசரமாய் இறுகும் மருந்து தடவி ஆறாத காயம் தந்தையின் கண்ணீர் துளிபட காணாமல் போகும்
மழலைப் பருவத்தில்
பார்த்து வியக்க
ஒரு நட்பு…
குழந்தைப் பருவத்தில்
ஓடி விளையாட
ஒரு நட்பு…
காளைப் பருவத்தில்
ஊர் சுற்ற
ஒரு நட்பு…
மானம் காக்கும் அறநெஞ்சம் - உலக மனத்தைக் கவரும் அறநெஞ்சம் ஈனப் பகையைத் தொடாநெஞ்சம் - நலம் இயற்றும் கடமை கெடாநெஞ்சம். நீதி வகுத்த நன்நெஞ்சம் - சங்க நெறிநூல் தொகுத்த பொன்நெஞ்சம் ஆதி நெஞ்சம் இந்நெஞ்சம் - வேறு அதற்கீ டாவ தெந்நெஞ்சம்?