பாட்டெழுதும் பாவலன் கை

பாட்டெழுதும் பாவலன்கை பரிசு வாங்க பயன்படலாம் பலருக்கும் ; ஆனல் என்கை கூட்டுக்குள் தவித்திருக்கும் குஞ்சுப் பறவைக் கோலத்தைப் பார்த்தவுடன் அதனை எடுத்து காட்டுக்குள் பறக்கவிட்டு கருணை நெஞ்சில் கூட்டுகின்ற நிகழ்வினையே கடிதாய்ச் செய்யும் , வீட்டுக்குள் இருந்தாலும் வெளியே இருப்பினும் வேலைதேடி என்கைதான் விருப்பம் காணும் . நாட்டுக்குள் நடக்கின்ற அநியா யங்கள் நாமறிந்த வேளையிலே எதிர்த்து எழுதி தோட்டாபோல் பாவலன்கை துரிதமாய் ; பகையோ தொகையாக வந்தாலும் Read more

சூனியப்புள்ளி

அந்த சூனியப்புள்ளிக்கு இப்போது சில வருடங்கள் வயதாகிறது வளர்ந்து பருத்த அதற்கு அற்ப ஆயுள் இருக்க கூடாதா என நான் கேட்டுக்கொள்கின்றேன் ஒரு உறுதியான நிலைத்த புள்ளியில் வாழத்தெரிந்த அதை பார்த்து வியக்கின்றேன் என்னோடு வாழ்ந்து வளர்ந்து எனக்கே போட்டியாகும் என் நிழலென வளரும் அதற்கும் என் ஆயுள் வரை தான் வயதாகும் சந்தேகமே இல்லை

இன்னொரு அவள்

மாறி கால இரவொன்றில் பிரயத்தனமின்றி சுமக்கும் மிகையான குளிரில் அவள் நிர்மலமான நொடிகளை ஒவ்வொன்றாய் கடக்கும் போது தனிமைத் தீர்க்க வந்த இன்னொரு அவள் கவிதைகள் பற்றிய கோணங்களை வட்டங்களுக்குள் அடக்குகிறாள் சில்லரைத்தனமான சொற் சேர்க்கை வெறும் பேச்சுகள் என்றும் அகராதி மறைத்த செறிவான பதங்கள் கொண்டு ஆழந்த அர்த்தங்களாயும் சிலேடைகளாயும் மர்மங்களாயும் சுருக்கியும் விரித்தும் சுவாரசியமாகவும் புனைவதன் சிறப்பை விபரித்துக் கொண்டே அவள் சொல்லும் கவிதையை நான் எழுதிக்கொண்டிருந்தேன் Read more

உழைப்பு

மலர்பறிக்கும் கைகளில் மண்வெட்டி , என்றும் மணம்பரப்பும் தலையில் கல்சட்டி , விரிந்து மைவைக்கும் கண்ணில் புதுமிரட்சி , புதிதாய் நகைவைக்கும் இதழில் நாவறட்சி , மென்மை நடைபயிலும் காலில் பெரும்தளர்ச்சி , நாளும் பூமலரும் உடலில் பூகம்பம் , வானின் மதிபோன்ற முகத்தில் மண்படிதல் , தூய கருநிற முடியில் கசடுறைதல் , ஈர்க்கும் கனிதரும் கன்னம் காயாதல் கண்டீர் .

உன்ன யெண்ணி ஏங்க வச்சே

நான் கோயிலுக்கு நடந்து போகயிலே எந்தன் எதிரே வந்து தரிசனம் தந்தவளே நான் முதல் முதலா உன்னை பார்த்தேன் எந்தன் விழிகளிலே உன்னை சேர்த்தேன் காதலோடு பூவெடுத்து பூமாலை கோர்த்தேன் நெத்தியில நீதானே பொட்டு ஒன்னு வைச்சே ஊசி நூலு இல்லாம ஏன்டி எம்மனச தைச்சே ஏறெடுத்து பார்த்தில்ல நான் இதுவரை பெண்ணே தினமும் உன்னயெண்ணி ஏங்க வச்சே ஏன்டி கண்ணே! நீ என்னோடு சேர்ந்த நீங்காத சொந்தமடி ஏழேழு Read more

நம்முறவின் பரிணாமம்

திரும்பி எடுக்க முடியா உன் ப்ரியங்கள் மனக்குகைக்குள் அமிழ்ந்து விட்ட சந்தங்கள்.. காதல் இங்கு நம் மந்திரம் விதி வரைந்ததோ நம் பந்தம்.. மனக்காயத்தை ஆற்றுகின்ற மகிழ்வான பொழுதுகள் நம் உறவின் சாட்சிகள் என்றும் மாறாத காட்சிகள்.. நீயும் நானும் கலந்த நம் உறவு பூர்வ ஜென்ம தொடர் நீங்காத நேசம் .. தாரிணி

என்றாலும் நான் எழுவேன்!

கசப்பான திரிபுற்ற பொய்களைப் பூசி வரலாற்றில் கடைநிலையில் என்னை நீ எழுதலாம்; அழுக்குக்குள் தோயும்படி அழுத்தமாய் மிதிக்கலாம் என்றாலும் நான் எழுவேன், சிறு புழுதியைப் போல! எனது தோற்றமுனை வருத்துகின்றதா? வாட்டமுற்று நீ வருந்துவதேன்? என் வீட்டின் முன்னறை அருகிருந்து முடுக்கிவிடத் தோதான – பல எண்ணெய்க் கிணறுகளை அடையப்பெற்றதுபோல் – நான் நடப்பதைக் கண்டுதானோ? நிலவினைப் போல் பகலவன் போல் – கடலதன் மேலெழும் அலைகளைப் போல் கிளர்ந்தே Read more

சொக்குப்பொடி

சுண்ணப்பொடி சுகந்தப்பொடி சுந்தரியின் எண்ணப்படி. வண்ணப்பொடி வசந்தப்பொடி வந்திருக்கும் சொர்ணப்பொடி. கோலப்பொடி கொஞ்சும்படி குலமகளை விஞ்சும்பொடி, சாயப்பொடி சாந்துப்பொடி சரியவைக்கும் சந்தனப்பொடி. மஞ்சள்பொடி மகிழும்படி மங்கைப்பூச மருதாணிப்பொடி, நெஞ்சம்பொடி ஆகும்படி நெருங்கிவந்த தாழம்பொடி. பச்சைப்பொடி பரவும்படி பசலைகொண்ட வஞ்சிக்கொடி, இச்சைப்படி இணையும்பொடி ஏங்கவைக்கும் முல்லைக்கொடி. சிவப்புப்பொடி சிரிக்கும்படி சிலுசிலுக்குது சின்னகொடி, மணக்கும்பொடி மயக்கும்படி மாதுபோட்டாள் சொக்குப்பொடி.

வரதட்சணை

சுற்றமுடன் வந்தவர்கள் பெண்ணைப் பார்த்தார் சுகமானப் பாட்டுதனைப் பாடக் கேட்டார் கற்றிட்ட கல்வியினைப் பணியைக் கேட்டார் கால்களினை நடக்கவிட்டே ஊனம் பார்ததார் பெற்றவர்கள் சொத்துகளைச் சரியாக் கேட்டார் பெயரளவில் சிற்றுண்டி சுவைத்த பின்னர் சற்றேனும் நெஞ்சமதில் ஈர மின்றிச் சரியாக தட்சணையை எடுத்து ரைத்தார் ! குணம்பார்க்கும் குணமில்லா மதிப டைத்தோர் குலமகளின் தரந்தன்னைப் பார்த்தி டாமல் பணம்பார்த்தார் ! பாவையரைப் பணத்தை வைத்துப் பார்க்கின்ற இழிவான செயலைச் செய்தார் Read more

ஐம்புலனை தூண்டிவிடும் நங்கையிவள்

மாங்கனி தாங்கிய மங்கை -இவள் மதுத்துளி இதழில் தேங்கிய கங்கை தேன் கனி தடவிய கன்னம் ஆண் கனி தேடுற வண்ணம் விழிகளிரண்டும் கணைகள் பாய புது கவிதை சொல்லும் மெல்லிடையில் உடைகள் தழுவக் கண்டால் விரல்கள் கவலை கொள்ளும் செவ்விளநீர் தங்குமிடம் பொங்கி வரும் தங்க குடம் தங்கிவிட மெய் மறந்து ஐம்புலனை தூண்டிவிடும் நங்கையிவள் ஒரு தேன் கவிதை