தென்றலின் தேடல்கள்

தென்றல் கவியை ஆண்டு விழாக்கள் கவியரங்கங்களில் அவ்வப் போது சந்திப்ப துண்டு. அவரது இயற்பெயர் யாதென அறியேன். அவரது தாயார் ஒரு சிறந்த கவிஞர். அவரது கவியரங்கத்தலைமை கண்டு வியந்து போயிருக்கிறேன். இவரது கவிதைகளிலும் அந்த தாக்கம் ஆங்காங்கே தெரியும். இவரது கவிதை நூல் ஒன்றைப் படிக்கும் வாய்ப்பு சமீபத்தில் கிடைத்தது. அந்த கவிஞர் தென்றல் கவி (தமிழ்ச்சிட்டு) அவரது புத்தகத்தின் பெயர் தென்றலின் தேடல்கள். அட்டைப்படம் வெகு அருமை; Read more

ஸ்ரீமத் பகவத்கீதையும் திருக்குறளும் ( ஒப்பாய்வு – 6 )

தியானயோகம் தஞ்சைத் தமிழ் மன்றத்தின் கவியரங்கம் . அதற்கு வருவதாக ஒரு முகநூல் நண்பர் சொல்லியிருந்தார். முதல்நாளே முகவரியைக் கேட்டுப் பெற்றிருந்தார். வருவதாகச் சொல்பவர்கள் எல்லாம் எங்கே நிகழ்வுகளுக்கு வருகிறார்கள்? ஏதாவது காரணம் சொல்லிவிட்டு வாராமல் நின்று விடுகிறார்கள். ஆனால் இவர் அப்படியல்ல. நிகழ்வு தொடங்குமுன்னே வருகிறார். ஒல்லியான தேகம். சுறுசுறுப்பான நடை. வெண்ணிற மீசை. பளிச்சென்ற கண்கள். கண்டவுடனே எனக்குப் பெருமகிழ்வு. பெரும்பாலும் ஆங்கிலத்தில் உரையாடல்; சார் சார் Read more

பொன்மணிதாசன் கவிதைகள்

ஒரு வயதான அன்பர். வெள்ளைச் சட்டையுடன் முறுக்கிய மீசையுடன் தும்பைநிற வேட்டி சட்டையில் கவியரங்கம் நடக்கும் இடங்களில் ஒரு ஓரத்தில் அமர்ந்திருப்பார். அருகில் சென்று பேசினால் பேசுவார். இல்லையேல் அமைதியாக இருப்பார். அழைத்தால் மேடையில் வந்து கவிதை பாடுவார். இல்லையேல் அதுவும் இல்லாது சென்று விடுவார். இப்படி அறிமுகமானவர்தான் அக் கவிஞர். பொன்மணிதாசன் என்பது அவரது பெயர். பெயருக்குத் தகுந்தாற் போல பொன்மனத்துக்குச் சொந்தக்காரர். அமைதியானவர். ஆனால் தினம் ஒரு Read more

Moon inside the well

ஹைக்கூ (Haiku) தமிழ் இலக்கியத் தளத்தில் தவிர்க்க முடியாத கவிதை வடிவமாக நாளுக்கு நாள் வளர்ந்துக் கொண்டே வருகின்றது. ஹைக்கூ ஜப்பானிய இலக்கிய வடிவம் என்றாலும், 17 ம் நூற்றாண்டில் பாசோ இதனை மேலும் மெருகூட்டப்பட்ட கலையாக் வடிவமைக்க, இவ்வடிவம் தனித் தன்மையடந்தது. தமிழில் 1980 களில் ஹைக்கூ கவிதைகள் பல எழுதப்பட்டன. அமுதபாரதியின் புள்ளிப்பூக்கள், அறிவு மதியின் புல்லின் நுனியில் பனித்துளி, ஈரோடு தமிழன்பனின் சூரியப் பறவைகள் என்பன Read more

இலங்கையில் சிங்களவர்

இலங்கை அரசின் இனவெறிப் படுகொலைக்குத் துணை நிற்கும் நடுவணரசும் ஏன் தமிழக அரசும், உருசியா, சீனா போன்ற பொதுவுடைமை நாடுகளும், ஏனைய உலக நாடுகளும் வரலாற்றுப் பிழை செய்வதை இந்நூல் அரண் செய்கின்றது. தமிழர் யார்? சிங்களவர் யார்? இலங்கையின் வரலாறு என்ன என்பதையும், அறிவியல் முறையிலான மரபணுக்கூறு இயல், மானிட இயல், தொல்லியல் சார்ந்த மண்டைஓடு, எலும்புகள், கலங்கள் பற்றிய ஆய்வியல், நாணயவியல், நிலவியல், சமுதாய இயல், மொழியியல், Read more

மொழி பெயர்க்கப்படாத மௌனம்

வாசிப்பு என்பது ஓர் இனிய நுகர்வு படைப்பாளிக்கும் படிப்பாளிக்கும் இடையே பரிமாறப்படும் இன்சுவை விருந்து. படைப்பாளி ஒரு சொற் கூட விட்டுவிடலாகாது இப்படி நுகரப்படுவதே இருவர்க்குமான பேரின்ப நிகழ்வு. ஒரு நூலைப் புரட்டும் கையால் அப்படி அடிமுதல் நுனிவரை சுவைக்க கிடைப்பது அரிதே. அங்கொன்றும் இங்கொன்றுமாக தெறிக்கும் மின்னல்கள் மகிழ்ச்சியை வழங்குவதும் தேடித்தேடி அவற்றைக்காண்பதும் ஒரு சுவை. தோழியர் ரிம்ஸா டீன் எழுதிய ‘‘மொழி பெயர்க்கப்படாத மெளனம்’’ அவ்வகையான இனிய Read more

சிறகசைப்பில் மிளிரும் வெயில்

வாழ்வின் எல்லாப்பக்கங்களிலும் கவிதைகளால் நிறைந்துள்ளது. ஆனாலும், அது எல்லோரின் கண்களுக்கும் புலப்படுவதில்லை. நாம் பார்க்கின்ற பார்வைகளும் நம் எண்ணங்களிலும் அது மாறுபடுகின்றது. நம் கண்முன் புலப்படாத ஒன்றைக்கூட அகக்கண்களினால்கூட கவிதையாக்கிட முடியும். அவ்வாறாக அந்த வானம் அதன் முழுவதும் மின்னுகின்ற நட்சத்திரங்கள், பூமி முழுவதும் பரவிக்கிடக்கின்ற கடல், மரங்கள், சருகுகள் என்பனவற்றையும், காதல், காமம், பிரிவு அகம்சார்ந்தும், புறம்சார்ந்தும் பேசுகின்ற கவிதைகளாக இத்தொகுப்பில் காணமுடிகின்றது. அகம் சார்ந்து பேசுகின்ற கவிதைகளை Read more

தங்கையின் மணவிழா மலர்

திருமண விழாவில் தங்கைக்காக கவிஞர் மன்னை ஜீவிதா அரசி வழங்கிய சிறு நூல். மேலேயுள்ள முகப்புப்படத்தில் க்ளிக் செய்து தரவிறக்கம் செய்து படிக்கலாம்.

உறங்காத உண்மைகள்

உறங்காத உண்மைகள் – சிறுகதைத் தொகுப்பு கண்ணோட்டம் : ஜெஸ்மி எம்.மூஸா கல்முனைப் பிரதேசத்தில் இருந்து சிறுகதைகள் வெளிவருதல் என்பது புதிய விடயமல்ல. இலங்கையின் சிறுகதைகளைப் பற்றிப் பேசுவதாக இருந்தாலும் தென்கிழக்குப்பிரதேசத்தின் சிறுகதைகளைப் பற்றிப் பேசுவதாக இருந்தாலும் அம்பாறை மாவட்டத்தின் சிறுகதைகளைப் பற்றிப் பேசுவதாக இருந்தாலும் கல்முனையை விடுத்து எம்மால் இத்துறை பற்றிப் பேசமுடியாது. சிறுகதையின் தோற்றம் எப்போது ஆரம்பித்ததோ அப்போதிருந்து அதற்குக் கணிசமான அளவு பங்காற்றியவர்கள் எம்மவர்கள். சிறுகதை Read more

புத்தனைத் தேடும் போதிமரங்கள்

கவிஞர் கு.அ.தமிழ்மொழி அவர்களின் “புத்தனைத் தேடும் போதி மரங்கள் ” என்ற கவிதை  நூல் ஒரு பார்வை… – கவிமதி சோலச்சி, புதுக்கோட்டை தமிழ்கூறும் நல்லுலகில் எண்ணற்ற நூல்கள் மலை போல் குவிந்த வண்ணம் இருக்கின்றன. இதில் கவிதை நூல்கள் அதிக இடத்தைப் பிடிக்கின்றன என்பதில் ஒருபோதும் ஐயமில்லை.  காரணம் கணக்கில்லாமல் கவிஞர்கள் பெருகிக்கொண்டே இருக்கின்றனர். இதை தமிழுக்கு கிடைத்த பெருமையாகவே நான் கருதுகின்றேன். புரட்சிகளின் பிறப்பிடமாய் போர்க்களமாய் திகழ்ந்த Read more