ஒரு வயதான அன்பர். வெள்ளைச் சட்டையுடன் முறுக்கிய மீசையுடன் தும்பைநிற வேட்டி சட்டையில் கவியரங்கம் நடக்கும் இடங்களில் ஒரு ஓரத்தில் அமர்ந்திருப்பார். அருகில் சென்று பேசினால் பேசுவார். இல்லையேல் அமைதியாக இருப்பார். அழைத்தால் மேடையில் வந்து கவிதை பாடுவார். இல்லையேல் அதுவும் இல்லாது சென்று விடுவார். இப்படி அறிமுகமானவர்தான் அக் கவிஞர். பொன்மணிதாசன் என்பது அவரது பெயர். பெயருக்குத் தகுந்தாற் போல பொன்மனத்துக்குச் சொந்தக்காரர்.

அமைதியானவர். ஆனால் தினம் ஒரு கவிதையையாவது முகநூலில் பதிவிட்டுவிடுவார். அவர் ஒருநாள் எனக்கு அலை பேசியில் வந்து முகவரி அனுப்பச் சொன்னார். அனுப்பினேன்; இரண்டொரு நாளில் அவரது புத்தகம் ஒன்று வந்தது.

பொன்மணிதாசன் கவிதைகள் என்ற அந்த நூலின் உள்சென்றேன்.

வெளியே வரமுடியவில்லை. பக்கத்துக்குப் பக்கம் கவிதை மழை.

புத்தகம் 225 பக்கங்கள் உடையது. இருநூற்றுக்கும் மேற்பட்ட கவிதைகள் . அனைத்து வகை தலைப்புகளிலும் உள்ள கவிதைகள் . கடவுள் ,குடும்பம், பாசம், சமூக அவலம் மற்றும் கல்வி என அனைத்து வகையான தலைப்புகளிலும் எழுதியுள்ளார்.

அடி தா என கவிதை அடி களை ஆண்டவனிடம் வேண்டுகிறார். இவரது ஊருக்கு அருகில் உள்ள எட்டுக்குடி முருகனை வர வேண்டி அழைக்கிறார். கண்ணனையும் சிவனையும் வேண்டத்தவறவில்லை. கிராமக்கடவுளான அய்யனாரையும் வணங்குகிறார்.

காதல் கவிதை எழுதாத கவிஞர் யாருளர்? இவர் மட்டும் விதிவிலக்கா என்ன? நிறைய செய்திகளைச் சொல்லிக் கொண்டே வந்தவர்
ஆதலினால் கா தலையும் திருத்து
அன்பொன்றே காதலென இருத்து

என்கிறார். இது பாரதியின் ஆதலினால் காதல் செய்வீரைக் காட்டுகிறது.

உயிரெழுத்து நீ எனக்கு
மெய்யெழுத்து நானுனக்கு
கையசைத்து காட்டு பெண்ணே
காதலுக்கு ஒத்துழைத்து
” என்று காதலியிடம் கொஞ்சுகிறார்.

வேண்டுவன எல்லாமும்
வேண்டும்வரை நான்தரவா
நீண்டிருக்க இரவெல்லாம்
நீ எழுத கரு தரவா!” என்று இன்னொரு கவிதையில் வெள்ளந்திக் கவிஞராக வினவித்திரிகிறார்.

முகநூலில் கவிதை எழுதுவதாலோ என்னவோ இவர் முகநூலையும் விடவில்லை – தலைப்பில். ஆண்களைவிட பெண்களுக்கான முகநூல் கணக்குகளே அதிகம் விரும்பப்படுவதை இவர் நொந்து கொள்ளாமலும் இல்லை.

ஆண்முகத்தில் பெண்ணிருப்பார்
பெண்முகத்தில் ஆணிருப்பார்
தன்முகத்தைக் காட்டாமல்
தப்பு தப்பாய்க் கதையளப்பார்” என்று முகநூல்நண்பர்களைக் கண்டிக்கவும் செய்கிறார்.

இவர் மதுஅருந்துபவரா என எனக்குத் தெரியாது. ஆனால்
சொல்லாமல் கொள்ளாமல்
சுறுசுறுப்பு சுற்றிவர
வல்லாத வலி நீக்க
வந்துவிட்டேன் மதுக்கடைக்கு” என மதுக்கடையைக் கவிதையில் பாடுகிறார்.

தமிழைப் பாடாத தமிழ்க் கவிஞர் யாருளர்? தமிழோடு வாழ்வேன் என்ற கவிதையில்
தமிழொடு வாழ்வேன் தனித்தே வாழ்வேன்
தாழ்வேனில்லை எவர்க்கும்
தமிழனாய் வாழ்வேன் தலையாய் வாழ்வேன்
தர்மமாயி ருப்பேன் பலர்க்கும்” என்கிறார். இன்னொரு இடத்தில் “இத்தமிழ் நான்பெற்ற வரம்” என்கிறார் .

நீர்வளம் காப்போம் என்ற கவிதையில்
தேவையெனச் சொல்லிச் சொல்லி நித்தமிங்கு
தேடித்தேடி மரங்களையும் அறுத்துப் போட்டோம்
தேவையுளப் பட்டியலில் மழையை இன்று
தேடித் தேடி நாமிங்கு களைத்துநின்றோம்” என்று நீரின் அவசியத்தைத் தெரிவித்துள்ளார்.

சாதாரண தொழிலாளி விவசாயி சவரத்தொழிலாளி உழைப்பாளி பாட்டி பாப்பா இளம்பெண் நவீனப்பெண்டிர் என எல்லாவிதமான தலைப்பு களிலும் தனது நறுக்கான கவிதைகளை அள்ளித் தெளித்துள்ளார்.

என்னுயரம் என்ற கவிதையில்
எட்டிப்பார்க்க ஏறிய அளவு
எனக்கே ஆச்சரியம்
எட்டிப் பிடிக்க இன்னுமிருக்கு
இதுதான் ஆச்சரியம்

எல்லா கவிஞனுக்கும் வேண்டிய தன்னம்பிக்கையும் தன்னடக்கமும் இங்கே தெரிகிறது

அருமையான கவிதைப்பூங்கொத்து. அனைவரும் படிகடகவேண்டிய தமிழ்ச்சொத்து

வெளியிட்ட பதிப்பகம் :

அறம் பதிப்பகம்
7A வீரபத்ரா இரண்டாவது வீதி
சத்திரோடு
ஈரோடு 3

கவிஞரின் முகவரி :

2/40/1 சுண்ணாம்புக்கார வீதி
பாப்பாக் கோயி்ல் 611102
நாகப்பட்டிணம் , தமிழ்நாடு
தொடர்பு எண் 8072269282

விலை ரூ 100/-


1 Comment

இராம வேல்முருகன் வலங்கைமான் · நவம்பர் 24, 2019 at 2 h 45 min

இனிய நன்றி

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

நூல்கள் அறிமுகம்

பாவேந்தல் பாலமுனை பாறூக் பொன்விழா!

இலங்கைத் திருநாட்டில் இலக்கியக் கொண்டாட்டம் பாவேந்தல் பாலமுனை பாறூக் பொன்விழா!

அடைமழை பெய்து ஓய்ந்து அடுத்து சில தினங்களில் ஆங்காங்கு தூறல்கள் அவிழ்ந்திட்ட போதும் 15.01.2022 மாலை சனிக்கிழமை அசல் வெயில் பாலமுனை எங்கும் பரவிக்கிடந்தது.

 » Read more about: பாவேந்தல் பாலமுனை பாறூக் பொன்விழா!  »

இலக்கணம்-இலக்கியம்

தமிழ்நெஞ்சம் புகழாரம்

தமிழ்நெஞ்சம் புகழாரம் புத்தகம் பற்றி ஒரு பார்வை...

ஒரு புகழாரத்தைத் தனிப் புத்தமாக பதிக்க வேண்டுமென்றால் அதன் தரம் எப்படி இருக்கும்? இப்படித்தான் இருக்கும் என்கிறது இந்தத் தொகுப்பு. தித்திப்பே திரண்டு வந்து சொற்களுக்குள் புகுந்து கொண்ட திகட்டாத இனிப்பு.நாவூறும் பாக்களின் நற்கோர்வை காரணம் அதன் சொற்கோவை.

 » Read more about: தமிழ்நெஞ்சம் புகழாரம்  »

நூல்கள் அறிமுகம்

வெய்யோனின் வேந்தன்

இராமாயணம் வாசித்தவர்கள் அதில் பல காண்டங்கள் இருப்பதை உணர்ந்திருப்பீர்…

அது போல இந்த இராவண காவியத் தில் மூன்று காண்டங்கள் தமிழ்போல.

த = தன்னிகரில்லா தமிழ்வேந்தனைப் பற்றி முதல் பகுதியிலிருந்து ஆரம்பிக்கின் றார் எழுத்தாளர் ஸ்ரீமதி.

 » Read more about: வெய்யோனின் வேந்தன்  »