ஹைக்கூ (Haiku) தமிழ் இலக்கியத் தளத்தில் தவிர்க்க முடியாத கவிதை வடிவமாக நாளுக்கு நாள் வளர்ந்துக் கொண்டே வருகின்றது. ஹைக்கூ ஜப்பானிய இலக்கிய வடிவம் என்றாலும், 17 ம் நூற்றாண்டில் பாசோ இதனை மேலும் மெருகூட்டப்பட்ட கலையாக் வடிவமைக்க, இவ்வடிவம் தனித் தன்மையடந்தது. தமிழில் 1980 களில் ஹைக்கூ கவிதைகள் பல எழுதப்பட்டன. அமுதபாரதியின் புள்ளிப்பூக்கள், அறிவு மதியின் புல்லின் நுனியில் பனித்துளி, ஈரோடு தமிழன்பனின் சூரியப் பறவைகள் என்பன குறிப்பிடத் தக்கவை.

இந்திய மொழிகளில் தமிழ் ஹைக்கூ கவிதைகள் பல மொழிபெயர்க்கப்பட்டு வரும் சூழலில், தமிழில் எழுதப்படும் ஹைக்கூவும் ஆங்கிலம் உட்பட பல உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டும் வருகின்றது. தமிழ் இலக்கியம் உலக அரங்கில் தன்னை நிலைபெற்றுக்கொள்ள தமிழ்மொழி தாண்டியும் உலக மொழிகளில் தமிழ் இலக்கியங்கள் வெளிவர வேண்டும். அந்த வகையில் காரை இரா.மேகலா அவர்களின் இந்தத் தொகுப்பு தமிழிலும், ஆங்கிலத்திலும் வெளிவந்துள்ளது. 36 கவிதைகளை நூலாசிரி யரே மொழிப்பெயர்த்திருப்பதுடன் மற்ற கவிதைகளை ஆங்கில மொழியில் கவிஞர் அமரன் அவர்கள் மொழிபெயர்த்து இருப்ப தும் கூடுதல் சிறப்பு.

சமூக அவலங்களை பாடாத கவிதைகளும், கவிஞர்களும் இருக்க முடியாது. மூட நம்பிக்கைக்கு எதிரான இவரின் கவிதை வரிகள் எதிர்வினை யாற்றுகின்றது.

குறுக்கே ஓடியது பூனை
அன்றைய தினம் மோசம்
அடிபட்ட பூனைக்கு

cat crossing path
Unbecomming of the day
For the cat, hurt!

சிறைப்பட்ட கிளி
ஜோதிடத்தில் சிறைவைத்தது
மனித நம்பிக்கை.

Parrot within cage
In astrology imprison’d
Human faith!

சிறு குடிசைகளுக்குள் வாழும் குடும்பங் களின் வறுமைப்பற்றி பேசுகிறது. இக்கவிதை பெருத்தமழை, பெருங்காற்று, இயற்கைச் சீற்றங்களில் இருந்து மனிதர்கள் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள பெரும் பாடு படுகினறனர்.

பெருத்தமழை
குடைக்கு கீழ் குடும்பம்
குடிசை.

Down torrential rain at hut
Under one umbrella
Entire family.

சமகாலத்தில் பெரும் பிரச்னையாக உருவெடுத்துவரும் தண்ணீர், எதிர் காலத்தில் பருக கிடைக்கப் போவதில்லை. அது கானல் நீராகவே இருக்கப் போகிறது என எச்சரிக்கிறார் கவிஞர்.

பாதையெங்கும் தண்ணீர்
அள்ளிப் பருக இல்லை
கானல் நீர்!

Water, water entire path –
None to scoop
Nor to dring… the mirage!

தமிழில் பல ஹைக்கூ கவிதை நூல்கள் வெளிவந்துக் கொண்டிருந்தாலும், தமிழிலும் ஆங்கிலத்திலும் Moon inside the well வெளிவந்து இருப்பது பாராட்டுக்குரியது. நம் தாய்மொழி கடந்து உலக் மொழிகளில் இன்னும் நிறைய தொகுப்புகள் வெளி வர வேண்டும். தமிழையும், தமிழ் இலக்கி யத்தையும் சிறு இடத்துக்குள் அடைத்துவிட முடியாது என்பதற்கு இவரின் கவிதைகளும் முழு சான்று.

வெளியீடு :

Ragam Pathippagam
Karaikal 609 601 (india)
megalaoct2000@gmail.com

விலை : ₹ 100/-


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

நூல்கள் அறிமுகம்

பாவேந்தல் பாலமுனை பாறூக் பொன்விழா!

இலங்கைத் திருநாட்டில் இலக்கியக் கொண்டாட்டம் பாவேந்தல் பாலமுனை பாறூக் பொன்விழா!

அடைமழை பெய்து ஓய்ந்து அடுத்து சில தினங்களில் ஆங்காங்கு தூறல்கள் அவிழ்ந்திட்ட போதும் 15.01.2022 மாலை சனிக்கிழமை அசல் வெயில் பாலமுனை எங்கும் பரவிக்கிடந்தது.

 » Read more about: பாவேந்தல் பாலமுனை பாறூக் பொன்விழா!  »

இலக்கணம்-இலக்கியம்

தமிழ்நெஞ்சம் புகழாரம்

தமிழ்நெஞ்சம் புகழாரம் புத்தகம் பற்றி ஒரு பார்வை...

ஒரு புகழாரத்தைத் தனிப் புத்தமாக பதிக்க வேண்டுமென்றால் அதன் தரம் எப்படி இருக்கும்? இப்படித்தான் இருக்கும் என்கிறது இந்தத் தொகுப்பு. தித்திப்பே திரண்டு வந்து சொற்களுக்குள் புகுந்து கொண்ட திகட்டாத இனிப்பு.நாவூறும் பாக்களின் நற்கோர்வை காரணம் அதன் சொற்கோவை.

 » Read more about: தமிழ்நெஞ்சம் புகழாரம்  »

நூல்கள் அறிமுகம்

வெய்யோனின் வேந்தன்

இராமாயணம் வாசித்தவர்கள் அதில் பல காண்டங்கள் இருப்பதை உணர்ந்திருப்பீர்…

அது போல இந்த இராவண காவியத் தில் மூன்று காண்டங்கள் தமிழ்போல.

த = தன்னிகரில்லா தமிழ்வேந்தனைப் பற்றி முதல் பகுதியிலிருந்து ஆரம்பிக்கின் றார் எழுத்தாளர் ஸ்ரீமதி.

 » Read more about: வெய்யோனின் வேந்தன்  »