கவிதைக்கழகு இலக்கணம் – 1

வணக்கம் நண்பர்களே – இராம வேல்முருகன் நாம் சிகையலங்காரம் முகச்சவரம் முகப்பூச்சு வண்ண ஆடைகள் போன்றவற்றைப் பயன்படுத்துவது நம்மை அழகாகக் காட்டுவதற்குத்தான். இதுபோலவே ஒரு கவிதைக்கும் அழகு சேர்ப்பதற்காக அதற்கு எதுகை மோனை1 இயைபு போன்றவற்றைச் சேர்த்து எழுதும் போது அக்கவிதை மேலும் அழகு உள்ளதாக இருக்கும். இப்போது எதுகை என்றால் என்ன என்று பார்ப்போம் எதுகை இது கவிதைக்கு அழகூட்டும் ஒரு அமைப்பு. இது இல்லாமலும் கவிதைகள் எழுதலாம் Read more

ஸ்ரீமத் பகவத்கீதையும் திருக்குறளும் ( ஒப்பாய்வு – 6 )

தியானயோகம் தஞ்சைத் தமிழ் மன்றத்தின் கவியரங்கம் . அதற்கு வருவதாக ஒரு முகநூல் நண்பர் சொல்லியிருந்தார். முதல்நாளே முகவரியைக் கேட்டுப் பெற்றிருந்தார். வருவதாகச் சொல்பவர்கள் எல்லாம் எங்கே நிகழ்வுகளுக்கு வருகிறார்கள்? ஏதாவது காரணம் சொல்லிவிட்டு வாராமல் நின்று விடுகிறார்கள். ஆனால் இவர் அப்படியல்ல. நிகழ்வு தொடங்குமுன்னே வருகிறார். ஒல்லியான தேகம். சுறுசுறுப்பான நடை. வெண்ணிற மீசை. பளிச்சென்ற கண்கள். கண்டவுடனே எனக்குப் பெருமகிழ்வு. பெரும்பாலும் ஆங்கிலத்தில் உரையாடல்; சார் சார் Read more

பொன்மணிதாசன் கவிதைகள்

ஒரு வயதான அன்பர். வெள்ளைச் சட்டையுடன் முறுக்கிய மீசையுடன் தும்பைநிற வேட்டி சட்டையில் கவியரங்கம் நடக்கும் இடங்களில் ஒரு ஓரத்தில் அமர்ந்திருப்பார். அருகில் சென்று பேசினால் பேசுவார். இல்லையேல் அமைதியாக இருப்பார். அழைத்தால் மேடையில் வந்து கவிதை பாடுவார். இல்லையேல் அதுவும் இல்லாது சென்று விடுவார். இப்படி அறிமுகமானவர்தான் அக் கவிஞர். பொன்மணிதாசன் என்பது அவரது பெயர். பெயருக்குத் தகுந்தாற் போல பொன்மனத்துக்குச் சொந்தக்காரர். அமைதியானவர். ஆனால் தினம் ஒரு Read more

சங்க இலக்கியமும், தற்காலமும்!

முல்லைத்திணையும், முற்றுபெறாதக் காத்திருப்பும்… முல்லைக்குரிய உரிப்பொருள் ‘‘இருத்தலும் இருத்தல் நிமித்தமுமாகும்’’ (தொல்காப்பியம், இளம்., ப.30) வினைமேற்சென்ற தலைவன் வினைகளத்தே இருப்பதும் அவனுக்காகத் தலைவி காத்திருப்பதும்.. ‘நெஞ்சாற்றுப் படுத்த நிறைதபு புலம்பொடு நீலுநினைந்து தேற்றியு மோடுவளை திருத்தியு மையல் கொண்டு மொய்யென வுயிர்த்து மேவுறு மஞ்ஞையி னடுங்டகி யிழைநெகிழ்ந்து. (முல்லைப்பாட்டு..) அன்றும் இன்றும் என்றும்..காத்திருப்பு கடினமானதே.. போரின் பொருட்டோ…பொருளின் பொருட்டோ தலைவன் பிரிந்து செல்ல அவனை நினைத்துக் காத்திருக்கும் தலைவிக்கும்.. இன்றும் Read more

தமிழமின் வாழ்க தழைத்து!

விசித்திர அகவல் ஒரு குறள் வெண்பாவிலுள்ள ஒவ்வோர் எழுத்தையும் ஒவ்வோரடியின் ஈற்றில் அமையுமாறு பாடுவது விசித்திர அகவல் ஆகும். குறள் வெண்பா குமுத மலராகக் கோலவிதழ் பின்னும் தமிழமின் வாழ்க தழைத்து! அன்னைத் தமிழின் அமுதைப் பருகு மன்பன்! ஆற்றல் அரிமா! கி.மு முன்னே மொழியைத் முனைந்து காத்த தன்னே ரில்லாத் தமிழன் நாம மோதும் மறவன்! முத்தமிழ் வல்ல தாதும் மணக்கும் தகையன்! தீரா ஆசை கவிமேல்! ஆக்கம் Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 100

பாடல் – 100 பத்திமை சான்ற படையும் பலர்தொகினும் எத்துணையும் அஞ்சா எயிலரணும் – வைத்தமைந்த எண்ணின் உலவா விழுநிதியும் இம்மூன்றும் மண்ணாளும் வேந்தர்க் குறுப்பு. (இ-ள்.) பத்திமை சான்ற – (தம்மேல்) அன்பு நிறைந்த, படையும் – சேனையும்; பலர் தொகினும் – பகைவர் பலர்கூடி எதிர்ப்பினும், எத்துணையும் – எவ்வளவும், அஞ்சா – பயப்பட வேண்டாத, எயில் அரணும் – மதிலரணும்; வைத்து – வைக்கப்பட்டு, அமைந்து Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 99

பாடல் – 99 கற்றாரைக் கைவிட்டு வாழ்தலும் காமுற்ற பெட்டாங்கு செய்தொழுகும் பேதையும் – முட்டின்றி அல்லவை செய்யும் அலவலையும் இம்மூவர் நல்லுலகம் சேரா தவர். (இ-ள்.) கற்றாரை – கற்றறிவுடையாரை, கைவிட்டு – முற்றும் விட்டு நீக்கி, வாழ்தலும் – வாழ்பவனும்; காமுற்ற – தான் விரும்பியவற்றை, பெட்டாங்கு – விரும்பினாற்போல, செய்து ஒழுகும் – செய்து நடக்கும், பேதையும் – அறிவில்லாதவனும்; முட்டு இன்றி – தடையில்லாமல், Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 98

பாடல் – 98 செந்தீ முதல்வர் அறம்நினைந்து வாழ்தலும் வெஞ்சின வேந்தன் முறைநெறியில் சேர்தலும் பெண்பால் கொழுநன் வழிச்செலவும் இம்மூன்றும் திங்கள்மும் மாரிக்கு வித்து. (இ-ள்.) செந்தீ – வேள்விச் செந்தீயை, முதல்வர் – வளர்கின்ற அந்தணர்கள், அறம் – தமக்குரிய அறத்தை, நினைந்து வாழ்தலும் – மறவாது வாழ்தலும்; வெம் சின வேந்தன் – கொடுமையாகிய கோபத்தைக் காட்டுகின்ற அரசன், முறை நெறியில் – முறையாக ஆளும் வழியில்; Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 97

பாடல் – 97 ஐங்குரவ ராணை மறுத்தலும் ஆர்வுற்ற எஞ்சாத நட்பினுள் பொய்வழக்கும் – நெஞ்சமர்ந்த கற்புடை யாளைத் துறத்தலும் இம்மூன்றும் நற்புடையி லாளர் தொழில். (இ-ள்.) ஐங்குரவர் – ஐந்து பெரியோர்களுடைய, ஆணை – கட்டளையை, மறுத்தலும் – மறுத்து நடத்தலும்; ஆர்வு உற்ற – விரும்பிய, எஞ்சாத – குறையாமல் வளர்கின்ற; நட்பினுள் – நட்புச் செய்வாரிடத்து, பொய் வழக்கும் – பொய் பேசுதலும்; நெஞ்சு அமர்ந்த Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 96

பாடல் – 96 கொண்டான் குறிப்பறிவாள் பெண்டாட்டி கொண்டன செய்வகை செய்வான் தவசி கொடிதொரீஇ நல்லவை செய்வான் அரசன் இவர்மூவர் பெய்யெனப் பெய்யும் மழை. (இ-ள்.) கொண்டான் – கொண்ட கணவனுடைய, குறிப்பு அறிவாள் – குறிப்பறிந்து நடக்கின்றவள், பெண்டாட்டி – மனைவியாவாள் : கொண்டன – தான் மேற்கொண்ட விரதங்களை, செய்வகை – செய்யும் முறைப்படி, செய்பவன் – செய்பவன், தவசி – தவசியாவன்; கொடிது – தீங்கினை, Read more