பனிமலையில் பிறந்தவளோ?

பளபளக்கும் பாவையிவள் பாதரசத்தில் குளித்தவளா? படபடக்கும் விழிகளோடு பனிமலையில் பிறந்தவளா? கூந்தலில் மல்லிகையைக் குடியிருக்க வைத்தவளே! காந்தமானக் கண்களிலே கவர்ந்திழுக்கும் கனிச்சுளையே! பாவாடைத் தாவணியில் பருவத்தைக் கட்டிவைத்து பூவாசம் வீசுகின்ற புதுப்பெண்ணும் நீதானோ? கண்ணாடி பார்க்கின்ற கன்னியுந்தன் பார்வையிலே முன்னழகு எல்லாமே முழுமையாய்த் தெரியுதடி! உன்மார்பில் ஊஞ்சலாடும் ஒற்றைமணி ஆரமுமே பெண்பார்க்க சொல்லுதடி பேரழகை அள்ளுதடி. பால்குடத்தில் நீந்திவரும் பனிநிலவாய் நீயிருக்க சேல்விழியின் துணையோடு செகமுழுதும் ஆள்பவளே!

மது குடிக்கும் உயிர்

மதுவுடைய பிடியினிலே மயங்குகிற அடிமையே! எதுகுடித்தால் இன்பமெனில் மதுகுடித்தால் இன்பமென்பாய்; மதுகுடிக்கும் உன்னுயிரை மயக்கத்திலே நீயிருப்பாய்; அதுகுடிப்பது உன்னுயிரை அடுத்தடுத்து உம்முறவை; இதுகுடித்து ஏப்பமிடும் எல்லையிலாத் துன்பம்தரும்; மதுகுடித்தப் போதையிலே மயங்குகிறப் பேதையிரே! சதிசெய்யும் சாத்தானாய் சந்ததிக்கே ஊறுசெய்யும், மதிமயக்கி உமையழித்து மானமதைக் கெடுத்துவிடும். மதுவரக்கன் கைபிடிக்க மனமதுவோ அதிலயிக்க, பதியாக வாழ்பவரைப் பாழ்படுத்த வந்ததுவே! விதிமுடிக்க வருமுன்னே விழித்துவிடு குடிமகனே! அதுவுன்னை முடிக்குமுன்னே அதனைநீ முடித்துவிடு.

பிராணவாயு நீ !

சுவாசிக்கும் காற்றில் கரியமிலவாயு நான், பிராணவாயு நீ! பருகும் நீரில் ஹைட்ரஜன் நான், ஆக்சிஜன் நீ! எரியும் விளக்கில் வெப்பம் நான், வெளிச்சம் நீ! மலரும் பூவில் மகரந்தம் நான், மதுவோ நீ! நெய்யும் ஆடையில் ஊடையாய் நான், உள்பாவு நீ! கதம்ப மாலையில் கனகாம்பரம் நான், கவின்மல்லி நீ! அணியும் நகையில் அரும்செம்பு நான் , ஆணிப்பொன் நீ! சுழலும் புவியில் சுற்றுவது நான், சூழ்வது நீ!

கறுப்பு நிறத்தழகி !

கறுப்பு நிறத்தழகி ! இயற்கையின் நிறத்தினை இயல்பானத் தரத்தினை இருளின் வடிவாக இருக்கப் பெற்றவளே ! கருப்பை இருப்பைக் கவர்ந்து ஈர்த்து கறுப்பை நிறமாய்க் காலத்தில் பெற்றவளே ! உடலோ கறுப்பு உதிரமோ சிவப்பு கட்சியில் இதுதானே கழகத்தின் சிறப்பு ! பேரழகி உன்னைப் பார்த்தால் போதும் , தார்ரோடு என்றும் தலைகவிழ்ந்து கிடக்கும் . அடுப்புக்கரி தோற்றுவிடும் அணங்குஉன் முன்னாலே , அட்டக்கறுப் பென்பது அகிலத்தில் இதுதானோ ! Read more

ஆடைகட்டிவந்த அல்லிமலர்

இரவிவர்மா ஓவியமா இராமன்கதைக் காவியமோ ? வானவர்க்கும் கிடைக்காத வந்திருக்கும் திரவியமோ ? மின்னலுக்கு ஆடைகட்டி மேதினியில் உதித்ததுவோ ? கன்னலுக்குத் தேன்பாய்ச்சி காலிங்குப் பதித்ததுவோ ? வெடித்திருக்கும் வெள்ளைரோஸ் விவரிக்கும் பேரழகோ ? கொடுத்துவைத்த கோமகனும் குடியமரும் தேரழகோ ? முல்லைமலர் போலிருக்கும் மூக்குத்திப் பொன்னழகோ ? உள்ளமதை வெளிப்படுத்தும் உயர்வானக் கண்ணழகோ ? இதழ்பூசும் வண்ணமது இதயத்தைக் கவர்ந்ததுவோ ? விதவிதமாய்க் காதணிகள் விருந்துக்கு வந்தனவோ ? Read more

சொர்க்கத்தைத் தந்தாயடா !

சாமத்தில் எழுந்து காமத்தில் நுழைந்து மோகத்தை விதைத்தாயடா – இரு போகத்தை அறுத்தாயடா. வேகத்தில் மிதந்து சோகத்தை மறந்து தேகத்தை வதைத்தாயடா – என் தூக்கத்தைக் கெடுத்தாயடா. தாகத்தை நினைந்து மேகத்தைத் திறந்து யூகத்தில் சரிந்தாயடா – பட நாகமாய் விரிந்தாயடா . காகத்தைச் சினந்து கூகையை வெறுத்து தோகையை விரித்தாயடா – என் தூய்மையைப் பறித்தாயடா. ஆகமவிதிப் படியேநீ ஆறுகால பூசையில் சொர்க்கத்தைத் தந்தாயடா – எரி சூளையிலே Read more

தண்ணிலவும் தமிழ்நெஞ்சமும்

அல்லிமலர் போலிருக்கும் அழகானப் பெண்ணருகில் கொல்லிப்பலா கொஞ்சுகின்ற கவிஞரிவர் தமிழ்நெஞ்சம், அள்ளிக்கொண் டுசென்றிடவே ஆவலுடன் நிற்கின்றார், பள்ளியறைக் காத்திருக்க பலகனவுப் பூத்திருக்க. வெள்ளிநிலவு இங்குவந்து விளையாட்டில் தனைமறந்து பில்லியாட்ஸ் ஆடுகின்ற பேரழகை என்னென்பேன், துள்ளியாடும் பருவமதில் தோகைதனை விரிக்கின்ற நல்லழகுத் தேவதையை நானிங்குக் காண்கிறேனே!

பாடலாசிரியர் நா. முத்துக்குமாருக்கு அஞ்சலி

கவியுலகின் நன்முத்து கண்மூடிக் கொண்டது , பொன்னுலகு தேடியே புறப்பட்டு விட்டது . திரையில் ஜொலித்த தீந்தமிழ் வைரம் , திசைமாறிப் போனதால் திக்கெட்டும் துயரம் . மரணம் இவரை மார்பில் சுமந்து திறமை முழுவதையும் தின்றுத் தீர்த்தது . காலன் இவரின் கணக்கை முடித்தான் , காலனின் கணக்கை யார்தான் முடிப்பது ? எரிகின்ற விளக்கு எப்படித்தான் அணைந்தது ? ஒளியினை இழந்து உயர்வானில் இணைந்ததே ! ஆனந்த Read more

​உச்சிக் குளிருதடா!

கட்டி அணைக்கையிலே உச்சிக் குளிருதடா! விட்டு விலகையிலே நெஞ்சம் கணக்குதடா! உந்தன் ஸ்பரிசமது உயிரைப் பிழியுதடா! எந்தன் மனசினிலே இன்பம் வழியுதடா ! உச்சி முகர்ந்தாலே உள்ளம் சிலிர்க்குதடா! எச்சில் அமுதமாக என்றும் இனிக்குதடா! மீசைக் குத்தினாலும்மி ருதுவாய் இருக்குதடா! ஆசை நிரம்பிடவே அன்புப் பெருகுதடா! அள்ளி அணைக்கையிலே அச்சம் தடுக்குதடா! சொல்லும் வார்த்தையிலே சொர்க்கம் தெரியுதடா! முத்தம் பதிக்கையிலே மேகம் கருக்குதடா! சத்தம் இன்றிமழை சாட்சியாய் இறங்குதடா! உன்னை Read more

அம்மனைத் தேடும் அழகுரதம்

வெள்ளிக்குடம் சுமந்துவரும் தங்கரதமே – உந்தன் வேண்டுதலும் நிறைவேறும் பொன்னுரங்கமே ! பால்குடத்தை எடுத்துவரும் தேனருவியே – உந்தன் பாவங்கள் போக்கிவிடும் தேவியருளே ! அலங்கார நடைபோடும் தேவதையே – உந்தன் அருகினிலே வந்தமரும் சேவடியே ! பலங்காலப் பக்தியிலே அடியவளே – உந்தன் பக்தியினை மெச்சாவிடில் கொடியவளே ! பூமிக்கும் வலிக்காமல் நடப்பவளே – உந்தன் பூவிரல்கள் மலராக்கிக் கடப்பவளே ! சாமிக்கும் உனைக்காண அருள்வருமே – உந்தன் Read more