கட்டி அணைக்கையிலே உச்சிக் குளிருதடா!

விட்டு விலகையிலே நெஞ்சம் கணக்குதடா!

உந்தன் ஸ்பரிசமது உயிரைப் பிழியுதடா!

எந்தன் மனசினிலே இன்பம் வழியுதடா !

உச்சி முகர்ந்தாலே உள்ளம் சிலிர்க்குதடா!

எச்சில் அமுதமாக என்றும் இனிக்குதடா!

மீசைக் குத்தினாலும்மி ருதுவாய் இருக்குதடா!

ஆசை நிரம்பிடவே அன்புப் பெருகுதடா!

அள்ளி அணைக்கையிலே அச்சம் தடுக்குதடா!

சொல்லும் வார்த்தையிலே சொர்க்கம் தெரியுதடா!

முத்தம் பதிக்கையிலே மேகம் கருக்குதடா!

சத்தம் இன்றிமழை சாட்சியாய் இறங்குதடா!

உன்னை நினைக்கையிலே உறவை மறந்தேனடா!

என்னை நினைக்கையிலே தன்னை இழந்தேனடா!

உன்னைப் பிரிவதென்றால் உயிரைப் பிரிவேனடா!

உன்னைத் தொடுவதாலே  உயரப் பறப்பேனடா!