கறுப்பு நிறத்தழகி !
இயற்கையின் நிறத்தினை
இயல்பானத் தரத்தினை
இருளின் வடிவாக
இருக்கப் பெற்றவளே !
கருப்பை இருப்பைக்
கவர்ந்து ஈர்த்து
கறுப்பை நிறமாய்க்
காலத்தில் பெற்றவளே !
உடலோ கறுப்பு
உதிரமோ சிவப்பு
கட்சியில் இதுதானே
கழகத்தின் சிறப்பு !
பேரழகி உன்னைப்
பார்த்தால் போதும் ,
தார்ரோடு என்றும்
தலைகவிழ்ந்து கிடக்கும் .
அடுப்புக்கரி தோற்றுவிடும்
அணங்குஉன் முன்னாலே ,
அட்டக்கறுப் பென்பது
அகிலத்தில் இதுதானோ !
வடைச்சட்டி போட்டியிட
வந்திடுமா உன்னருகில் ?
கடைக்கண் மையுமே
கையெடுத்துக் கும்பிடுமே !
2 Comments
ஜவ்வாது முஸ்தபா · மார்ச் 30, 2017 at 16 h 17 min
மிக அருமை சார்..
இனிய வாழ்த்துகள்.
உங்கள் கவிதையில் கறுப்பு நிறம்
அது கலங்கமற்ற நிறமென ஒரு உணர்வு மேலிடுகிறது.
சுசிமணாளன் · ஜூன் 2, 2017 at 15 h 14 min
பேரழகி உன்னைப்
பார்த்தால் போதும்,
தார்ரோடு என்றும்
தலைகவிழ்ந்து கிடக்கும்!