தொடர் – 49

இந்த தொடர்களின் வாயிலாக ஒரு ஹைக்கூவை சிறப்பாக எழுதுவது எப்படி.. தவிர்க்க வேண்டிய விசயங்கள் என்னென்ன என்பதை தெரிந்து கொண்டிருப்பீர்கள்.. ஹைக்கூ பொதுவாக நமது அனுபவங்களே.

கண்டும் .. உணர்ந்தும் கொள்ளக் கூடிய விசயங்களைக் கவிதையாக நாம் வடிக்கும் போது அது ஆழ்ந்த பொருளை அங்கு விளைவிக்கிறதெனலாம்.

ஒரு ஓவியத்தில் வரையப்பட்ட விசயங்களை விட வரையாமல் விடப்படும் இடங்கள் அதிக வலிமையுடையதாக இருக்கும் என்பார்கள்.. அதைப் போலவே பேசிய வார்த்தைகளை விட பேசாத மௌனத்திற்கு அதிக வலிமை உண்டு என்பதும்.. இதுவே சூஃபி தத்துவத்திலும் சொல்லப்பட்டுள்ளது.

அதுபோலவே…ஹைக்கூவிலும் சொல்லும் காட்சிகளை விட சொல்லாமல் விடும் காட்சிகள் மிகவும் பேசும்..வாசிக்கும் வாசகனை இது பல்வேறு தளத்திற்கு இருந்தும் செல்லும்.

இங்கு நாம் கண்ணால் காணும் இரு காட்சிகளை எப்படி ஹைக்கூவாக மாற்றுவது என பார்ப்போம்.

காட்சி : 1..

தாய்பறவை ஒன்று தன் குஞ்சுகளுக்கு பறக்க கற்றுத் தரும் நிகழ்வினை நாம் கண்ணால் காண நேரிடுகிறது… இதை எப்படி ஹைக்கூவாக மாற்றுவது எனக் காணலாம்.

பரிதாபமாய் விழுகிறது

பறக்க எத்தனிக்கும் குஞ்சு அப்படித்தான் விழும்.. இல்லையா… இது முதலடி.

இனி.. இரண்டாவது அடி..

பறவை பறக்க எத்தனிக்கையில்

பரிதாபமாய் விழுகிறது

பறவை பறக்க எத்தனிக்கையில்..

இது நாம் கண்ட காட்சியை பதிவு செய்து விட்டோம்.. ஆனால் ஈற்றடி. .. எவரும் எதிர்பாரா ஒரு திருப்பத்தை கவிதையில் காட்ட வேண்டுமே… அது மூன்றடிகளையும் இணைத்து செல்ல வேண்டுமே.. இதை கவனியுங்கள்..

பரிதாபமாய் விழுகிறது
பறவை பறக்க எத்தனிக்கையில்
பார்ப்பவர் பார்வை..!

என எவரும் எதிர்பாரா ஒரு ஈற்றடியை தருகிறோம்.. ஆக பரிதாபமாய் விழுவது பறவை மட்டுமல்ல… பார்ப்பவர் பார்வையும் தான் என்பது ஒட்டு மொத்த கவிதையை வாசித்தால் புலனாகும்.

காட்சி : 2.

கோவில் ஒன்றுக்கு செல்கிறீர்கள்..அங்குள்ள குளத்தில் இறங்கி கால்களை கழுவியபின் கோவிலுக்குள் செல்ல எண்ணி..குளத்தில் இறங்குகிறீர்கள்.

இதை காட்சிப் படுத்த எண்ணிய ஹைக்கூவை இவ்வாறு அமைக்கலாம்.

குளம் முழுவதும்

நிரம்பி இருக்கின்றது

என இரண்டு அடிகளையும் நிறைவு செய்யும் போது… வாசகனுக்கு ஈற்றடியானது ” நீராகத் தான் ” இருக்கும் என எண்ணத் தோன்றும்… ஆனால் நாம் எதிர்பாரா முடிவினுக்காக… ஈற்றடியை இவ்வாறு அமைக்கிறோம்.

குளம் முழுவதும்
நிரம்பி இருக்கின்றது
தாமரை மலர்கள்.

இங்கு ஆகாயத் தாமரை… நெகிழி குப்பை..தேவையற்ற கழிவு என பல்வகையான சொற்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஆக… ஹைக்கூவை எழுதும் போது நாம் கண்ட காட்சியை தெளிவாக படிப்பவர் உணரும் வண்ணம் பதிவு செய்திடல் வேண்டும்.. அக் கவிதையில் மாறுபட்ட இரு காட்சிகள் வருமாறு அமைத்திடல்  வேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அப்போது தான் நாம் எழுதும் ஹைக்கூ சிறப்பாக அமையும்.

இன்னும் வரும்… 

 முன் தொடர்


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

எழுதக் கற்றுக்கொள்வோம்

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 52

தொடர் – 52

உலகின் பல நாட்டு இலக்கியங்களில் எழுதப்பட்டிருக்கும் கவிதைகளில் அபூர்வமாய் சில கவிதைகள் தமிழின் சங்க காலப் பாடல்களோடு பொருந்தி போவதும் உண்டு அவ்வாறான ஒரு நிகழ்வு ஹைக்கூ கவிதை இலக்கியத்திலும் நிகழ்ந்துள்ளது..அது போன்ற ஒன்றை இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்..

 » Read more about: ஹைக்கூ ஓர் அறிமுகம் – 52  »

எழுதக் கற்றுக்கொள்வோம்

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 51

தொடர் – 51

உலக அரங்கில் பிரசித்தி பெற்ற ஒரு ஹைக்கூ ..ஜப்பானிய ஹைக்கூ பிதாமகர் மட்சுவோ பாஷோ கி.பி 17ஆம் நூற்றாண்டில் எழுதிய ஒரு ஹைக்கூ..

பழைய குளம்
தவளை தாவிக் குதிக்க
நீரில் சப்தம்.

 » Read more about: ஹைக்கூ ஓர் அறிமுகம் – 51  »

எழுதக் கற்றுக்கொள்வோம்

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 50

தொடர் – 50

ஒரு பயணி பேரூந்து நிலையத்தில் நின்றிருந்த ஒரு பேரூந்தில் ஏறியதும்..அருகிலிருந்த பயணியிடம் ” இந்த பேரூந்து எங்கே செல்கிறது..? ” எனக் கேட்டார்..அந்த பயணியும் சற்றே கிண்டலாக..

 » Read more about: ஹைக்கூ ஓர் அறிமுகம் – 50  »