தொடர் 20

ஹைக்கூவை எழுதும் போது ஒவ்வொரு அடிகளையும் முற்றுப்பெற்ற அடிகளாக நிறைவு செய்வதா ? அல்லது தொடர் அடியாக அமைப்பதா ? இரண்டில் எது சிறந்தது ?

பொதுவில்… முற்றுப் பெற்ற அடியாக நிறைவு செய்வதே சிறப்பாகும்..

சமயத்தில் தொடர் அடியாக அமைய நேரிடுவதும் உண்டு. அதனை பெரும்பாலும் முற்றுப்பெற்ற அடியாக மாற்றிட முயலுங்கள். தவறும் பட்சத்தில் இருக்கட்டும். ஆனால் முதல் இரண்டு அடிகளில் முதல் அடியானது தொடர் அடியாக நீளும் போது இரண்டாவது அடியில் அதனை முற்றுப் பெற செய்து விடுங்கள். ஈற்றடியை தனி அடியாக காட்டுங்கள். அதே போல முதல் அடி நிறைவு பெற்ற அடியாக அமைந்து, இரண்டாவது அடி தொடர் அடியாக அமைய நேரிட்டால்… ஈற்றடியில் அதனை முற்றுப் பெற்ற அடியாக நிறைவு செய்து விட வேண்டும்.

கவிதைகளின் போக்கிற்கு தேவையான படி வார்த்தைகளை நாம் வடிவமைத்தலே சிறப்பு.

மனைவியின் மடியில்
தலை சாய்த்தேன் வந்து போகிறது
அம்மாவின் ஞாபகம்.

  • ஆ.உமாபதி

ஆனந்த சயனத்தில்
வீதியின் ஓரத்தில் கிடந்தார்.
ஓவியமாய் கடவுள்.

  • யுவபாரதி கந்தப்பூக்கள்

இவைகள் முதலடி தொடர் அடியாக எழுதப்பட்டு, இரண்டாவது அடியில் முற்று பெற்று விடுகிறது.

மாடியில் நிலாச்சோறு
தீர்ந்து போனதென்னவோ
இரவு மட்டும்

  • கு.அ.தமிழ் மொழி

என்னப் பிரச்சனை..?
விளக்கினில் மாயும்
விட்டில்கள்..!

யார் தீட்டியது.
தூரிகையில்லாமல்
வானில்..!

இவ்விரண்டும் எனது ஹைக்கூக்கள். இதில் இரண்டாவது அடியை தொடர் அடியாக கையாண்டிருப்பதைக் காணலாம்.

இதை தவிர்த்து ஈற்றடியையும் தொடர் வார்த்தையாக நிறைவு செய்யவும் ஹைக்கூவில் வழி உண்டு. இதை கவனியுங்கள்..

பஷீர் வீட்டு
முருங்கைக் கீரை
மாரியாத்தா கூழுக்கு..!

  • கா.ந.கல்யாணசுந்தரம்

பழுத்த பழம்
காயாய் மாறி வருகிறது
தென்னை மரத்தில்..!

  • ரசிகுணா

ஆக, ஹைக்கூவில் தொடரும் வார்த்தைகளைக் கொண்டும் ஹைக்கூவின் அடிகள் அமையும்..அமைக்கலாம். தவறில்லை.

ஆனால்.. பெரும்பாலும் நிறைவாக அமையும் அல்லது முற்றுப் பெறும் வார்த்தைகளைக் கொண்டு ஹைக்கூ வடிவமைப்பதே சிறந்தது .

எனவே, ஒரு ஹைக்கூவில் அடிகளை தொடர் அடியாகவோ, முற்றுப் பெற்ற அடியாகவோ தீர்மானிப்பது கவிதைகளே. எது கவிதைக்கு அழகையும், சிறப்பையும் தருகின்றதோ அதனை அங்கு கையாளலாம்.

அடுத்து ஹைக்கூவில் மகளிரின் பங்கு..

இன்னும் வரும்..

 முன்தொடர் 19


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

எழுதக் கற்றுக்கொள்வோம்

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 45

தொடர் – 45

ஹைக்கூ எளிய கவிதை வடிவம்… ஆனால் உள்ளார்ந்த பல விசயங்களைக் கொண்டிருக்கும் உன்னத கவிதை வடிவமாகும்.

இக் கவிதை வடிவில் கருப்பொருளோடு இரண்டறக் கலந்திருப்பது பல விசயங்கள்..

 » Read more about: ஹைக்கூ ஓர் அறிமுகம் – 45  »

எழுதக் கற்றுக்கொள்வோம்

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 44

தொடர் – 44

ஹைக்கூவில் பாஷோவின் ஆளுமை

பாஷோ.. ஹைக்கூவின் பிதாமகர்.. ஜப்பானியக் கவிஞர் கி.பி.1644_ ல் பிறந்து 1694  ல் மறைந்த ஒரு மாபெரும் ஹைக்கூ ஆசான்.

 » Read more about: ஹைக்கூ ஓர் அறிமுகம் – 44  »

எழுதக் கற்றுக்கொள்வோம்

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 43

தொடர் – 43

ஹைக்கூ வகைமை

ஹைக்கூவில் பல்வேறு வகையான புது முயற்சிகளை அவ்வப்போது செய்து கொண்டு தான் இருக்கிறார்கள் கவிஞர்கள்.

ஏற்கனவே ஹைக்கூ.. சென்ரியுவோடு

ஹைபுன்..

 » Read more about: ஹைக்கூ ஓர் அறிமுகம் – 43  »