தொடர் 19

ஈற்றடி சிறப்பு

 

ஹைக்கூவில் திருப்பம் தரும் ஈற்றடியின் முக்கியத்துவம் குறித்து ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்..

ஈற்றடியை திருப்பமாகவோ,முரணாகவோ அமைக்கலாம். ஆனால் முதலிரண்டு அடிகளுக்கு முற்றிலும் சம்பந்தமின்றி முரண்பட்டு அமைக்க கூடாது. இதை பலமுறை வலியுறுத்துகிறோம்..

ஏனெனில் அவ்வாறு எழுதும் போது அது ஹைக்கூவின் அழகை கெடுத்து விடும்.

இதை கவனியுங்கள். கொஞ்ச நாட்களுக்கு முன் ஒரு கவிஞர் எழுதி நான் படித்த ஒரு கவிதை இது..

அப்பாவின் அறிவுரை
மிகவும் கசப்பாக இருக்கிறது
பாகற்காய்..!

இதில் ஈற்றடியும் பொருந்தவில்லை. முரண்பட்டும் அமைந்திருக்கிறது. அறிவுரைக்கும், பாகற்காய்க்கும் என்ன சம்பந்தம் உள்ளது ? ஒரு வேளை அறிவுரை பாகற்காயைப் போல கசப்பானது எனச் சொல்ல வருகிறார் கவிஞர் என எண்ணத் தோன்றுகிறது.

ஹைக்கூவில்… முதல் அடியோடு பொருந்தியதாக இரண்டாம் அடியும், ஈற்றடி இவ்விரண்டு அடிகளோடு இணைந்ததாகவும், பொருந்துவதாகவும் அமைதல் வேண்டும். முரண்பட்டு ஈற்றடி தனியாக நிற்கக் கூடாது.

கவிதையை எழுதியதும் படித்துப் பாருங்கள். ஹைக்கூ என்பது செய்தியல்ல. ஒரு காட்சிப் பதிவு. நீங்கள் எழுதிய ஹைக்கூவை வாசித்து முடிக்கையில் அது ஒரு காட்சியாக வாசகன் மனதில் விரிய வேண்டும்.

கீழேயுள்ள நமது கவிஞர்களின் கவிதைகளை கவனியுங்கள்..

பனிப்பொழிவிற்கு தப்பிய
இலையின் அடிபாகத்தை
ஈரமாக்கியவாறே அந்திமழை.

  • முனைவர் V.புகழேந்தி.

உதிரவே இல்லை
இறந்துகிடந்த வண்ணத்துப்பூச்சியின்
வண்ணங்கள்.

  • வதிலை பிரபா

மரங்கள் வெட்டப்பட்டு
புதிதாய் நடப்பட்டது
அலைபேசி கோபுரம்.

  • நாகை ஆசைத்தம்பி

வெயிலைத் துரத்த
குடையை விரிக்கிறேன்
சிக்கியது நிழல்.

  • ஐ.தர்மசிங்

தோட்டத்தில் பூச்செடிகள்
நிரம்பியிருக்கும்
வீட்டினுள் நறுமணம்.

  • மாதவன்.

யார் பதித்த கால்தடமோ
பறவைகளின் தாகம் தீர்க்கிறது
மழைநாட்கள்..!

  • ஆ.உமாபதி

இந்தக் கவிதைகள் நிச்சயம் வாசித்து முடிந்ததும்..உங்கள் எண்ணத்தில் காட்சியாய் விரியும் என்பதில் ஐயமில்லை..

ஹைக்கூ காட்சியாய் விரிவதோடு பலவித எண்ணங்களையும் வாசகனிடத்தில் விதைக்க வேண்டும்.

இன்னும் வரும்.. 

 முன்தொடர் 18


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

அறிமுகம்

வாழ்வி(ய)ல் வசந்தம்!

உள்ளிழுத்து வெளிவரும் – என்
உஷ்ண மூச்சுக் காற்று
இதயத்தின் ரணங்களை
மொழிபெயர்க்கும்!

என் வீட்டு ஜன்னல் கதவு
என் மன ஓலத்தை எதிரொலிக்க
ஒத்தாசை புரியும்!

 » Read more about: வாழ்வி(ய)ல் வசந்தம்!  »

தன்முனை

மலர்வனம் 6

தன்முனை

ஜென்ஸி

நெஞ்சொடு கிளத்தல்

புத்தக அந்தாதி

1.
சிரிக்க. வைத்தவர்களை
மறந்து விட்டு
அழ. வைத்தவர்களை – ஏன்
நினைத்துக் கொண்டிருக்கிறாய்..?

 » Read more about: மலர்வனம் 6  »

இலக்கணம்-இலக்கியம்

கவிதைக்கழகு இலக்கணம் – 18

தொடர் 18

வெண்பா வகைகளில்

குறள் வெண்பா
சிந்தியல் வெண்பா
நேரிசை வெண்பா
இன்னிசை வெண்பா
நேரிசை பஃறொடை வெண்பா
இன்னிசை பஃறொடை வெண்பா

ஆகியவற்றை இதுவரைக் கண்டோம்.

 » Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 18  »