பாடல் – 98

செந்தீ முதல்வர் அறம்நினைந்து வாழ்தலும்
வெஞ்சின வேந்தன் முறைநெறியில் சேர்தலும்
பெண்பால் கொழுநன் வழிச்செலவும் இம்மூன்றும்
திங்கள்மும் மாரிக்கு வித்து.

(இ-ள்.) செந்தீ – வேள்விச் செந்தீயை, முதல்வர் – வளர்கின்ற அந்தணர்கள், அறம் – தமக்குரிய அறத்தை, நினைந்து வாழ்தலும் – மறவாது வாழ்தலும்; வெம் சின வேந்தன் – கொடுமையாகிய கோபத்தைக் காட்டுகின்ற அரசன், முறை நெறியில் – முறையாக ஆளும் வழியில்; சேர்தலும் – சேர்ந்து நடத்தலும்; பெண்பால் – பெண்ணுக்கு உரிய குணம் அமைந்தவள், கொழுநன்வழி – தன் கணவனுடைய குறிப்பின் வழியில், செலவும் – நடத்தலும்; இ மூன்றும் – ஆகிய இம் மூன்றும், திங்கள் – மாதந்தோறும் பெய்யவேண்டிய, மும்மாரிக்கு – மூன்று மழைக்கும், வித்து – காரணங்களாம்; (எ-று.)

(க-ரை.) அந்தணர் மறைவழி நடத்தலாலும், அரசன் செங்கோல் நெறி பிறழாததாலும், மனைவி கணவனுக்கு இசைந்து நடப்பதாலும் திங்கள் மும்மாரி பொழிந்து நாடு செழிக்கும் என்பது.

தீக்களில் வேள்வித்தீ சிறந்வதாதலால் வேள்வித்தீயைச் செந்நீ என்றார். செலவு : தொழிற்பெயர், முறை : தானியாகுபெயர்.

முன் பக்கம் செல்ல…    தொடரும்


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 100

பாடல் – 100

பத்திமை சான்ற படையும் பலர்தொகினும்
எத்துணையும் அஞ்சா எயிலரணும் – வைத்தமைந்த
எண்ணின் உலவா விழுநிதியும் இம்மூன்றும்
மண்ணாளும் வேந்தர்க் குறுப்பு.

(இ-ள்.) பத்திமை சான்ற –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 100  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 99

பாடல் – 99

கற்றாரைக் கைவிட்டு வாழ்தலும் காமுற்ற
பெட்டாங்கு செய்தொழுகும் பேதையும் – முட்டின்றி
அல்லவை செய்யும் அலவலையும் இம்மூவர்
நல்லுலகம் சேரா தவர்.

(இ-ள்.) கற்றாரை –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 99  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 97

பாடல் – 97

ஐங்குரவ ராணை மறுத்தலும் ஆர்வுற்ற
எஞ்சாத நட்பினுள் பொய்வழக்கும் – நெஞ்சமர்ந்த
கற்புடை யாளைத் துறத்தலும் இம்மூன்றும்
நற்புடையி லாளர் தொழில்.

(இ-ள்.) ஐங்குரவர் –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 97  »