பாடல் – 97

ஐங்குரவ ராணை மறுத்தலும் ஆர்வுற்ற
எஞ்சாத நட்பினுள் பொய்வழக்கும் – நெஞ்சமர்ந்த
கற்புடை யாளைத் துறத்தலும் இம்மூன்றும்
நற்புடையி லாளர் தொழில்.

(இ-ள்.) ஐங்குரவர் – ஐந்து பெரியோர்களுடைய, ஆணை – கட்டளையை, மறுத்தலும் – மறுத்து நடத்தலும்; ஆர்வு உற்ற – விரும்பிய, எஞ்சாத – குறையாமல் வளர்கின்ற; நட்பினுள் – நட்புச் செய்வாரிடத்து, பொய் வழக்கும் – பொய் பேசுதலும்; நெஞ்சு அமர்ந்த (தன்னை) மனத்தால் விரும்பிய, கற்பு உடையாளை – கற்புடைய மனைவியை, துறத்தலும் – விடுதலும்; இ மூன்றும் – ஆகிய இம் மூன்றும், நல்புடை – அறத்தினது, இல்ஆளர் – இன்மையை ஆளுதலுடையாரது, தொழில் தொழில்களாம்; (எ-று.)

(க-ரை.) ஐங்குரவர் ஆணைப்படி நடவாமையும், நண்பனிடத்துப் பொய் சொல்லுதலும், கற்புடை மனைவியைத் துறத்தலும் பாவச் செய்கைகள் என்பது.

ஐங்குரவர் அரசன், உபாத்தியாயன், தாய், தந்தை, தம்முன் நெஞ்சு : இடவாகு பெயர். வழக்கு : முதனிலை திரிந்த தொழிற்பெயர். துறத்தல் – முற்றிலும் நீக்கிவிடுதல்.

முன் பக்கம் செல்ல…    தொடரும்


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

இலக்கணம்-இலக்கியம்

கவிதைக்கழகு இலக்கணம் – 20

தொடர் 20

வெண்பா ஆசிரியப்பா இரண்டு பற்றியும் தெரிந்து கொண்ட நாம் அடுத்ததாக கலிப்பாவைக் காண்போம்.

இது 3 ஆவது பாவகை

மாமுன் நிரை
விளமுன் நேர்
காய்முன் நேர் இவை வெண்பா

நேர்முன்நேர்
நிரைமுன் நிரை
நேர் முன் நிரை
நிரை முன் நேர் இவை ஆசிரியப்பா

ஆனால் கலிப்பாவில்

காய்முன் நிரை வரும்
அதாவது கலித்தளை மிகுந்து வரும்
மற்ற தளைகள் குறைந்து வரலாம்
புளிமாங்காய் கருவிளங்காய் அதிகம் வரும்
கனிச்சீர்கள் வாரா
அளவடிகளால் ஆனது

கலிப்பா மற்ற பாக்கள் போல ஒரே உறுப்புகள் கொண்டமையாமல் பல உறுப்புகள் உடையது.

 » Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 20  »

இலக்கணம்-இலக்கியம்

கவிதைக்கழகு இலக்கணம் – 19

தொடர் 19

வெண்பாதான் கடினம் என்று புலவர்கள் சொல்வதுண்டு. வெண்பாவில் சிறப்பாக எழுதுபவர்களை வெண்பாப் புலி என்றும் அழைக்கப்படுவார்கள். நிறைய தமிழ் நூல்கள் வெண்பாவில் புனையப் பட்டுள்ளன. நீங்களும் இப்போது வெண்பா எழுத முற்பட்டிருப்பீர்கள் எனக் கருதுகிறேன்.

 » Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 19  »

இலக்கணம்-இலக்கியம்

கவிதைக்கழகு இலக்கணம் – 18

தொடர் 18

வெண்பா வகைகளில்

குறள் வெண்பா
சிந்தியல் வெண்பா
நேரிசை வெண்பா
இன்னிசை வெண்பா
நேரிசை பஃறொடை வெண்பா
இன்னிசை பஃறொடை வெண்பா

ஆகியவற்றை இதுவரைக் கண்டோம்.

 » Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 18  »