பாடல் – 96

கொண்டான் குறிப்பறிவாள் பெண்டாட்டி கொண்டன
செய்வகை செய்வான் தவசி கொடிதொரீஇ
நல்லவை செய்வான் அரசன் இவர்மூவர்
பெய்யெனப் பெய்யும் மழை.

(இ-ள்.) கொண்டான் – கொண்ட கணவனுடைய, குறிப்பு அறிவாள் – குறிப்பறிந்து நடக்கின்றவள், பெண்டாட்டி – மனைவியாவாள் : கொண்டன – தான் மேற்கொண்ட விரதங்களை, செய்வகை – செய்யும் முறைப்படி, செய்பவன் – செய்பவன், தவசி – தவசியாவன்; கொடிது – தீங்கினை, ஒரீஇ – நீக்கி, நல்லவை – (குடிகளுக்கு) நன்மையானவற்றை, செய்வான் – செய்பவன், அரசன் – அரசனாவான்; இவர் மூவர் – ஆகிய இவர் மூவரும், பெய் என – (மழையைப்) பெய் என்றுசொல்ல, மழைபெய்யும் – மழை பொழியும்; (எ-று.)

(க-ரை.) குறிப்பறிந்து நடக்கும் பெண்டாட்டியும் நோன்புகளை முறைப்படி நடத்துகிற தவசியும், குடிகளுக்குத் தீமையை விலக்கி நன்மையைச் செய்கின்ற அரசனும் உள்ள இடத்தில் மழை தவறாது பெய்யும் என்பது.

பெண்டு ஆட்டி – பெண்டு ஆம் தன்மையை ஆளுபவள், தவசி செய்கையாவன : மனம் பொறிவழியிற் போகாமல் நிற்றற் பொருட்டு நோன்புகளால் உண்டி சுருக்குதல், மழை பனி நீர் நிலை வெயில் இவற்றில் நிற்றல் முதலியவைகளை மேற்கொண்டு, அவற்றால் தமக்கு வரும் துன்பங்களைப் பொறுத்தல்.

முன் பக்கம் செல்ல…    தொடரும்


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

ஆன்மீகம்

ஸ்ரீமத் பகவத்கீதையும் திருக்குறளும் ( ஒப்பாய்வு – 6 )

தியானயோகம்

தஞ்சைத் தமிழ் மன்றத்தின் கவியரங்கம் . அதற்கு வருவதாக ஒரு முகநூல் நண்பர் சொல்லியிருந்தார். முதல்நாளே முகவரியைக் கேட்டுப் பெற்றிருந்தார். வருவதாகச் சொல்பவர்கள் எல்லாம் எங்கே நிகழ்வுகளுக்கு வருகிறார்கள்? ஏதாவது காரணம் சொல்லிவிட்டு வாராமல் நின்று விடுகிறார்கள்.

 » Read more about: ஸ்ரீமத் பகவத்கீதையும் திருக்குறளும் ( ஒப்பாய்வு – 6 )  »

இலக்கணம்-இலக்கியம்

பொன்மணிதாசன் கவிதைகள்

ஒரு வயதான அன்பர். வெள்ளைச் சட்டையுடன் முறுக்கிய மீசையுடன் தும்பைநிற வேட்டி சட்டையில் கவியரங்கம் நடக்கும் இடங்களில் ஒரு ஓரத்தில் அமர்ந்திருப்பார். அருகில் சென்று பேசினால் பேசுவார். இல்லையேல் அமைதியாக இருப்பார். அழைத்தால் மேடையில் வந்து கவிதை பாடுவார்.

 » Read more about: பொன்மணிதாசன் கவிதைகள்  »

இலக்கணம்-இலக்கியம்

சங்க இலக்கியமும், தற்காலமும்!

முல்லைத்திணையும், முற்றுபெறாதக் காத்திருப்பும்…

முல்லைக்குரிய உரிப்பொருள் ‘‘இருத்தலும் இருத்தல் நிமித்தமுமாகும்’’ (தொல்காப்பியம், இளம்., ப.30) வினைமேற்சென்ற தலைவன் வினைகளத்தே இருப்பதும் அவனுக்காகத் தலைவி காத்திருப்பதும்..

‘நெஞ்சாற்றுப் படுத்த நிறைதபு
புலம்பொடு நீலுநினைந்து
தேற்றியு மோடுவளை திருத்தியு
மையல் கொண்டு மொய்யென
வுயிர்த்து மேவுறு மஞ்ஞையி
னடுங்டகி யிழைநெகிழ்ந்து.

 » Read more about: சங்க இலக்கியமும், தற்காலமும்!  »