பாடல் – 95

அறிவழுங்கத் தின்னும் பசிநோயும் மாந்தர்
செறிவழுங்கத் தோன்றும் விழைவும் – செறுநரின்
வெவ்வுரை நோனு வெகுள்வும் இவைமூன்றும்
நல்வினை நீக்கும் படை.

(இ-ள்.) அறிவு அழுங்க – நல்லறிவு கெடும்படி, தின்னும் – வருத்துகின்ற, பசிநோயும் – பசியாகிய நோயும், மாந்தர் – நல்லோர், செறிவு அழுங்க – நெருங்குதல் கெடும்படி, தோன்றும் விழைவும் – உண்டாகும் விருப்பமும்; செறுநரின் – பகைவரிடத்துண்டாகும், வெவ்வுரை – கொடிய மொழிகளை, நோனா – பொறுக்காத, வெகுள்வும் – கோபமும்; இவை மூன்றும் – ஆகிய இந்த மூன்றும், நல்வினை – நல்ல வினையை, நீக்கும் – நீக்குகின்ற, படை – படைக் கருவிகளாம்; (எ-று.)

(க-ரை.) கொடும் பசியாலும், பெருவிருப்பாலும், கொடுமொழி பொறுக்காத கோபத்தாலும் அறமுறை கெடும் என்பது.

செறிவு : தொழிற்பெயர். செறுநர் : வினையாலணையும் பெயர். நோனா – நோன் : பகுதி. வெவ்வுரை : வெம்மை + உரை. பசிநோய் : இரு பெயரொட்டுப் பண்புத் தொகை.

முன் பக்கம் செல்ல…    தொடரும்


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

இலக்கணம்-இலக்கியம்

சங்க இலக்கியமும், தற்காலமும்!

முல்லைத்திணையும், முற்றுபெறாதக் காத்திருப்பும்…

முல்லைக்குரிய உரிப்பொருள் ‘‘இருத்தலும் இருத்தல் நிமித்தமுமாகும்’’ (தொல்காப்பியம், இளம்., ப.30) வினைமேற்சென்ற தலைவன் வினைகளத்தே இருப்பதும் அவனுக்காகத் தலைவி காத்திருப்பதும்..

‘நெஞ்சாற்றுப் படுத்த நிறைதபு
புலம்பொடு நீலுநினைந்து
தேற்றியு மோடுவளை திருத்தியு
மையல் கொண்டு மொய்யென
வுயிர்த்து மேவுறு மஞ்ஞையி
னடுங்டகி யிழைநெகிழ்ந்து.

 » Read more about: சங்க இலக்கியமும், தற்காலமும்!  »

இலக்கணம்-இலக்கியம்

தமிழமின் வாழ்க தழைத்து!

விசித்திர அகவல்

ஒரு குறள் வெண்பாவிலுள்ள ஒவ்வோர் எழுத்தையும் ஒவ்வோரடியின் ஈற்றில் அமையுமாறு பாடுவது விசித்திர அகவல் ஆகும்.

குறள் வெண்பா

குமுத மலராகக் கோலவிதழ் பின்னும்
தமிழமின் வாழ்க தழைத்து!

 » Read more about: தமிழமின் வாழ்க தழைத்து!  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 100

பாடல் – 100

பத்திமை சான்ற படையும் பலர்தொகினும்
எத்துணையும் அஞ்சா எயிலரணும் – வைத்தமைந்த
எண்ணின் உலவா விழுநிதியும் இம்மூன்றும்
மண்ணாளும் வேந்தர்க் குறுப்பு.

(இ-ள்.) பத்திமை சான்ற –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 100  »