பாடல் – 88

பிணிதன்னைத் தின்னுங்கால் தான்வருந்து மாறும்
தணிவில் பெருங்கூற் றுயிருண்ணு மாறும்
பிணைசெல்வ மாண்பின் றியங்கலிவை மூன்றும்
புணையின் நிலைகலக்கும் ஆறு.

(இ-ள்.) பிணி – நோயானது, தன்னை – , தின்னுங்கால் – வருத்தும்போது, தான் வருந்தும் ஆறும் – (ஒருவன்) தான் (அதற்கு) வருத்தப்படும் வகையும்; பெருங்கூற்று – பெரிய எமன் உயிர் உண்ணும் ஆறும் – உயிரைக் கொண்டுபோக வருத்தும் வகையும்; பிணை – (சுற்றத்தோர் முதலியோர்) வந்து சேர்வதற்குக் காரணமாகிய, செல்வம் – செல்வமானது, மாண்பு இன்று – நிலையில்லாமல், இயங்கல் ஆறும் – செல்லும் வகையும்; இவைமூன்றும் – ஆகிய இம் மூன்றும், புணையின் – (ஒருவனுக்குப் பிறவிப் பெருங்கடற்கு) மரக்கலமாயுள்ள மனத்தின், நிலை – நிலையை, கலக்கும் – கலக்குகின்ற, ஆறு – வழிகளாம்; (எ-று.)

(க-ரை.) நோயால் வருந்துவதும், உயிர்போக நோவதும் செல்வம் அழிவதும் மனவுறுதியைக் கலக்குவன என்பது.

பிணி : கருத்தாப் பொருள் உணர்த்தும் இகர விகுதி புணர்ந்து கெட்ட தொழிற்பெயர். மாண்பு – நிலைமை. இயங்கல் என்பதன் இறுதியில் உம் தொக்கது, ஆறு என்பதை இயங்கலோடும் கூட்டுக.

முன் பக்கம் செல்ல…    தொடரும்


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 100

பாடல் – 100

பத்திமை சான்ற படையும் பலர்தொகினும்
எத்துணையும் அஞ்சா எயிலரணும் – வைத்தமைந்த
எண்ணின் உலவா விழுநிதியும் இம்மூன்றும்
மண்ணாளும் வேந்தர்க் குறுப்பு.

(இ-ள்.) பத்திமை சான்ற –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 100  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 99

பாடல் – 99

கற்றாரைக் கைவிட்டு வாழ்தலும் காமுற்ற
பெட்டாங்கு செய்தொழுகும் பேதையும் – முட்டின்றி
அல்லவை செய்யும் அலவலையும் இம்மூவர்
நல்லுலகம் சேரா தவர்.

(இ-ள்.) கற்றாரை –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 99  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 98

பாடல் – 98

செந்தீ முதல்வர் அறம்நினைந்து வாழ்தலும்
வெஞ்சின வேந்தன் முறைநெறியில் சேர்தலும்
பெண்பால் கொழுநன் வழிச்செலவும் இம்மூன்றும்
திங்கள்மும் மாரிக்கு வித்து.

(இ-ள்.) செந்தீ –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 98  »