பாடல் – 87

கொல்வது தானஞ்சான் வேண்டலும் கல்விக்
ககன்ற இனம் புகுவானும் இருந்து
விழுநிதி குன்றுவிப் பானுமிம் – மூவர்
முழுமக்க ளாகற்பா லார்.

(இ-ள்.) கொல்வது – (ஒருயிரைக்) கொல்வதற்கு, தான் அஞ்சான் – தான் அஞ்சாதவனாகி, வேண்டலும் – அதனைச் செய்ய விரும்புதலும்; கல்விக்கு -; அகன்ற – நீக்கமாகிய, இனம் – கூட்டத்திலே, புகுவானும் – நுழைகின்றவனும்; இருந்து – (ஒரு முயற்சியும்) செய்யாதவனா யிருந்து, விழு நிதி – (முன்னுள்ள) பெருஞ் செல்வத்தை, குன்றுவிப்பானும் – (செலவு செய்து) குறைவிப்பவனும்; இ மூவர் – ஆகிய இம் மூவரும், முழுமக்கள் – மூடர்கள், ஆகல்பாலர் – ஆகுதலாகிய தன்மையை யுடையார்; (ஏ-று.)

(க-ரை.) அஞ்சாது ஓருயிரைக் கொலை புரியக் கருதுவதும், படிப்பிற் பற்றற்றவரோடு சேர்வதும், முன்னோர் பொருளைப் பெருக்காமல் செலவழிப்பதும் மூடர் செய்கை என்பதாம்.

கொல்வது : தொழிற்பெயர். அஞ்சான் : முற்றெச்சம். கல்விக்கு : கு உருபு நீக்கப் பொருளில் வந்தது. அறிவின்மையால் மக்கட்டன்மையில் குறைந்தவரை முழுமக்கள் என்றது மங்கல வழக்கு. இதை இலக்கணமுடையதாகக் கொண்டு அறிவு நுழையப் புரையில்லாத மக்கள் எனப் பொருள் கூறுவாருமுண்டு. பாலார் : பண்படியாகப் பிறந்த பெயர்.

முன் பக்கம் செல்ல…    தொடரும்


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 100

பாடல் – 100

பத்திமை சான்ற படையும் பலர்தொகினும்
எத்துணையும் அஞ்சா எயிலரணும் – வைத்தமைந்த
எண்ணின் உலவா விழுநிதியும் இம்மூன்றும்
மண்ணாளும் வேந்தர்க் குறுப்பு.

(இ-ள்.) பத்திமை சான்ற –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 100  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 99

பாடல் – 99

கற்றாரைக் கைவிட்டு வாழ்தலும் காமுற்ற
பெட்டாங்கு செய்தொழுகும் பேதையும் – முட்டின்றி
அல்லவை செய்யும் அலவலையும் இம்மூவர்
நல்லுலகம் சேரா தவர்.

(இ-ள்.) கற்றாரை –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 99  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 98

பாடல் – 98

செந்தீ முதல்வர் அறம்நினைந்து வாழ்தலும்
வெஞ்சின வேந்தன் முறைநெறியில் சேர்தலும்
பெண்பால் கொழுநன் வழிச்செலவும் இம்மூன்றும்
திங்கள்மும் மாரிக்கு வித்து.

(இ-ள்.) செந்தீ –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 98  »