பாடல் – 73

இரந்துகொண் டொண்பொருள் செய்வலென் பானும்
பரந்தொழுகும் பெண்பாலைப் பாசமென் பானும்
விரிகட லூடுசெல் வானுமிம் மூவர்
அரிய துணிந்துவாழ் வார்.

(இ-ள்.) இரந்துகொண்டு – (இல்லாமையால் பிறரிடம்) கெஞ்சிப் பெற்று, ஒண்பொருள் – ஒள்ளிய பொருளை, செய்வல் என்பானும் – ஈட்டுவன் என்று கூறும் இரப்போனும்; பரந்து – (பலரிடத்தும்) சென்று, ஒழுகும் நடக்கின்ற, பெண்பாலை – பெண்வகுப்பைச் சேர்ந்த வேசையை,பாசம் என்பானும் அன்புடையாளெனக் கருதும் காமுகனும் : விரி கடல் ஊடு – பரந்த கடலினடுவில், செல்வானும் – (தக்க கருவியின்றி) பொருளீட்டச் செல்லும் வாணிகனும்; இ மூவர் – ஆகிய இம் மூவரும், அரிய – செய்வதற்கு அரிய பொருள்களை, துணிந்து – பின் வாங்கலின்றி மேற்கொண்டு, வாழ்வார் – வாழ்பவர் போலத் தாழ்பவராவார்; (எ-று.)

(க-ரை.) பிச்சையெடுத்துப் பெரும்பொருள் ஈட்டுதலும், வேசை தன்னிடம் மெய்யன்புடையவளென்று நம்புதலும், வேண்டிய கருவிகளில்லாமல் திரைகடலோடித் திரவியந் தேட முயலுதலும் முடியாத செயல் என்பது.

ஒண்பொருள் – ஒருவனைப் பலருள்ளும் ஒண்மையுடையவனாகச் செய்யவல்ல செல்வம்; செய்வல் : அல் ஈற்றுத் தன்மையொருமை எதிர்கால வினைமுற்று. பரந்தொழுகுதலாவது – உள்ளம் ஒருவனைப் பற்றி நில்லாது பொருள்வளம் மிக்க பலரிடத்தும் செல்லுதல். பாசம் – பற்று; பண்பாகுபெயர். கடலூடு : ஊடு : ஏழனுருபு.

முன் பக்கம் செல்ல…    தொடரும்


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

இலக்கணம்-இலக்கியம்

தமிழ்நெஞ்சம் புகழாரம்

தமிழ்நெஞ்சம் புகழாரம் புத்தகம் பற்றி ஒரு பார்வை...

ஒரு புகழாரத்தைத் தனிப் புத்தமாக பதிக்க வேண்டுமென்றால் அதன் தரம் எப்படி இருக்கும்? இப்படித்தான் இருக்கும் என்கிறது இந்தத் தொகுப்பு. தித்திப்பே திரண்டு வந்து சொற்களுக்குள் புகுந்து கொண்ட திகட்டாத இனிப்பு.நாவூறும் பாக்களின் நற்கோர்வை காரணம் அதன் சொற்கோவை.

 » Read more about: தமிழ்நெஞ்சம் புகழாரம்  »

இலக்கணம்-இலக்கியம்

கவிதைக்கழகு இலக்கணம் – 20

தொடர் 20

வெண்பா ஆசிரியப்பா இரண்டு பற்றியும் தெரிந்து கொண்ட நாம் அடுத்ததாக கலிப்பாவைக் காண்போம்.

இது 3 ஆவது பாவகை

மாமுன் நிரை
விளமுன் நேர்
காய்முன் நேர் இவை வெண்பா

நேர்முன்நேர்
நிரைமுன் நிரை
நேர் முன் நிரை
நிரை முன் நேர் இவை ஆசிரியப்பா

ஆனால் கலிப்பாவில்

காய்முன் நிரை வரும்
அதாவது கலித்தளை மிகுந்து வரும்
மற்ற தளைகள் குறைந்து வரலாம்
புளிமாங்காய் கருவிளங்காய் அதிகம் வரும்
கனிச்சீர்கள் வாரா
அளவடிகளால் ஆனது

கலிப்பா மற்ற பாக்கள் போல ஒரே உறுப்புகள் கொண்டமையாமல் பல உறுப்புகள் உடையது.

 » Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 20  »

இலக்கணம்-இலக்கியம்

கவிதைக்கழகு இலக்கணம் – 19

தொடர் 19

வெண்பாதான் கடினம் என்று புலவர்கள் சொல்வதுண்டு. வெண்பாவில் சிறப்பாக எழுதுபவர்களை வெண்பாப் புலி என்றும் அழைக்கப்படுவார்கள். நிறைய தமிழ் நூல்கள் வெண்பாவில் புனையப் பட்டுள்ளன. நீங்களும் இப்போது வெண்பா எழுத முற்பட்டிருப்பீர்கள் எனக் கருதுகிறேன்.

 » Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 19  »