பாடல் – 71

உடுத்தாடை யில்லாதார் நீராட்டும் பெண்டிர்
தொடுத்தாண் டவைப்போர் புகலும் – கொடுத்தளிக்கும்
ஆண்மை யுடையவர் நல்குரவும் இம்மூன்றும்
காண அரியவென் கண்.

(இ-ள்.) உடுத்த ஆடை – உடுக்கப்பட்ட ஆடை, இல்லாதார் – இல்லாதவர், நீர் ஆட்டும் – நீராடுதலும்; பெண்டிர் பெண்கள், தொடுத்து – (பிறரோடு) வழக்குத் தொடுத்து, ஆண்டு – அங்குள்ள, அவை – சபைகளிடத்தில், போர் புகலும் – போர்க்குப் புகுதலும்; கொடுத்து – பிறர்க்குக் கொடுத்து, அளிக்கும் காக்கின்ற; ஆண்மை யுடையவர் – ஆண் தன்மையுடையவரது, நல்குரவும் – வறுமையும், இ மூன்றும் – ஆகிய இந்த மூன்றும், என் கண் – என் கண்கள், காண அரிய – பார்க்கத் தகுவன வல்லவாம்; (எ-று.)

(க-ரை.) ஆடையின்றி நீரில் இறங்கிக்குளிப்பதும், பெண்கள் வழக்குத் தொடுத்து மன்றேறுதலும், கொடையாளர்கள் வறுமை யுறலும் காணக்கூடிய வல்ல என்பது.

உடுத்தாடை என்பதில் உடுத்த என்ற பெயரெச்சத்து ஈறு தொகுத்தல். ஆட்டு : பிறவினை முதனிலைத் தொழிற்பெயர். நல்குரவு என்ற தொழிற் பெயரில் நல்கூர் முதனிலை. “உடுத்தலால் நீராடார், ஒன்றுடுத் துண்ணார், உடுத்தாடை நீருட் பிழியார் – விழுத்தக்கார், ஒன்றுடுத்தென்றும் அவைபுகார் என்பதே, முந்தையோர் கண்ட முறை” என்ற ஆசாரக்கோவை யடிகளும் காண்க.

முன் பக்கம் செல்ல…    தொடரும்


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

இலக்கணம்-இலக்கியம்

தமிழ்நெஞ்சம் புகழாரம்

தமிழ்நெஞ்சம் புகழாரம் புத்தகம் பற்றி ஒரு பார்வை...

ஒரு புகழாரத்தைத் தனிப் புத்தமாக பதிக்க வேண்டுமென்றால் அதன் தரம் எப்படி இருக்கும்? இப்படித்தான் இருக்கும் என்கிறது இந்தத் தொகுப்பு. தித்திப்பே திரண்டு வந்து சொற்களுக்குள் புகுந்து கொண்ட திகட்டாத இனிப்பு.நாவூறும் பாக்களின் நற்கோர்வை காரணம் அதன் சொற்கோவை.

 » Read more about: தமிழ்நெஞ்சம் புகழாரம்  »

இலக்கணம்-இலக்கியம்

கவிதைக்கழகு இலக்கணம் – 20

தொடர் 20

வெண்பா ஆசிரியப்பா இரண்டு பற்றியும் தெரிந்து கொண்ட நாம் அடுத்ததாக கலிப்பாவைக் காண்போம்.

இது 3 ஆவது பாவகை

மாமுன் நிரை
விளமுன் நேர்
காய்முன் நேர் இவை வெண்பா

நேர்முன்நேர்
நிரைமுன் நிரை
நேர் முன் நிரை
நிரை முன் நேர் இவை ஆசிரியப்பா

ஆனால் கலிப்பாவில்

காய்முன் நிரை வரும்
அதாவது கலித்தளை மிகுந்து வரும்
மற்ற தளைகள் குறைந்து வரலாம்
புளிமாங்காய் கருவிளங்காய் அதிகம் வரும்
கனிச்சீர்கள் வாரா
அளவடிகளால் ஆனது

கலிப்பா மற்ற பாக்கள் போல ஒரே உறுப்புகள் கொண்டமையாமல் பல உறுப்புகள் உடையது.

 » Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 20  »

இலக்கணம்-இலக்கியம்

கவிதைக்கழகு இலக்கணம் – 19

தொடர் 19

வெண்பாதான் கடினம் என்று புலவர்கள் சொல்வதுண்டு. வெண்பாவில் சிறப்பாக எழுதுபவர்களை வெண்பாப் புலி என்றும் அழைக்கப்படுவார்கள். நிறைய தமிழ் நூல்கள் வெண்பாவில் புனையப் பட்டுள்ளன. நீங்களும் இப்போது வெண்பா எழுத முற்பட்டிருப்பீர்கள் எனக் கருதுகிறேன்.

 » Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 19  »