பாடல் – 63

நோவஞ்சா தாரோடு நட்பும் விருந்தஞ்சும்
ஈர்வளையை யில்லத் திருத்தலும் – சீர்பயவாத்
தன்மையி லாளர் அயலிருப்பும் இம்மூன்றும்
நன்மை பயத்த லில.

(இ-ள்.) நோ – (தமக்கு வரும்) துன்பத்துக்கு, அஞ்சாதாரோடு – பயப்படாதவரிடத்து, நட்பும் – கொண்ட நட்பும்; விருந்து அஞ்சும் – விருந்தினர்க்கு உண்டி கொடுக்க அஞ்சுகின்ற, ஈர்வளையை – மனைவியை, இல்லத்து – மனையினிடத்தில், இருத்தலும் – இருக்கச் செய்தலும் : சீர்பயவா – சிறப்பைத் தராத, தன்மை – தன்மையையுடைய, இல் ஆளர் – இல்வாழ்வோருக்கு, அயல் இருப்பும் – அயலில் குடியிருத்தலும்; இ மூன்றும் – ஆகிய இம் மூன்றும், நன்மை – நன்மையை, பயத்தல் இல – தருதலில் லனவாம்; (எ-று.)

(க-ரை.) வருந் துன்பத்துக்கு அஞ்சா நண்பரின் நட்பும் விருந்தோம்பாத மனைவியோடிருப்பும், நற்குணமில்லாதவர் அயலிற் குடியிருப்பும் பயனற்வை என்பது.

நோ : முதனிலை திரிந்த தொழிற்பெயர். ஈர்வளை : பண்புத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை; பைந்தொடி என்னும் பொருளது. ஈர் : வினைத்தொகையாயின் அறுக்கப்பட்ட என்னும் பொருட்டு. வளை : பண்பாகு பெயர்.

முன் பக்கம் செல்ல…    தொடரும்

 


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

இலக்கணம்-இலக்கியம்

தமிழ்நெஞ்சம் புகழாரம்

தமிழ்நெஞ்சம் புகழாரம் புத்தகம் பற்றி ஒரு பார்வை...

ஒரு புகழாரத்தைத் தனிப் புத்தமாக பதிக்க வேண்டுமென்றால் அதன் தரம் எப்படி இருக்கும்? இப்படித்தான் இருக்கும் என்கிறது இந்தத் தொகுப்பு. தித்திப்பே திரண்டு வந்து சொற்களுக்குள் புகுந்து கொண்ட திகட்டாத இனிப்பு.நாவூறும் பாக்களின் நற்கோர்வை காரணம் அதன் சொற்கோவை.

 » Read more about: தமிழ்நெஞ்சம் புகழாரம்  »

இலக்கணம்-இலக்கியம்

கவிதைக்கழகு இலக்கணம் – 20

தொடர் 20

வெண்பா ஆசிரியப்பா இரண்டு பற்றியும் தெரிந்து கொண்ட நாம் அடுத்ததாக கலிப்பாவைக் காண்போம்.

இது 3 ஆவது பாவகை

மாமுன் நிரை
விளமுன் நேர்
காய்முன் நேர் இவை வெண்பா

நேர்முன்நேர்
நிரைமுன் நிரை
நேர் முன் நிரை
நிரை முன் நேர் இவை ஆசிரியப்பா

ஆனால் கலிப்பாவில்

காய்முன் நிரை வரும்
அதாவது கலித்தளை மிகுந்து வரும்
மற்ற தளைகள் குறைந்து வரலாம்
புளிமாங்காய் கருவிளங்காய் அதிகம் வரும்
கனிச்சீர்கள் வாரா
அளவடிகளால் ஆனது

கலிப்பா மற்ற பாக்கள் போல ஒரே உறுப்புகள் கொண்டமையாமல் பல உறுப்புகள் உடையது.

 » Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 20  »

இலக்கணம்-இலக்கியம்

கவிதைக்கழகு இலக்கணம் – 19

தொடர் 19

வெண்பாதான் கடினம் என்று புலவர்கள் சொல்வதுண்டு. வெண்பாவில் சிறப்பாக எழுதுபவர்களை வெண்பாப் புலி என்றும் அழைக்கப்படுவார்கள். நிறைய தமிழ் நூல்கள் வெண்பாவில் புனையப் பட்டுள்ளன. நீங்களும் இப்போது வெண்பா எழுத முற்பட்டிருப்பீர்கள் எனக் கருதுகிறேன்.

 » Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 19  »