பாடல் – 28

வெல்வது வேண்டி வெகுண்டுரைக்கு நோன்பிலியும்
இல்லது காமுற் றிருப்பானுங் – கல்வி
செவிக்குற்றம் பார்த்திருப் பானும்இம் மூவர்
உமிக்குத்திக் கைவருந்து வார்.

(இ-ள்.) வெல்வது – சொல்வென்றியை, வேண்டி – விரும்பி, வெகுண்டு உரைக்கும் – (உண்மைப் பொருளை யுரைப்போரைச்) சினந்து சொல்கின்ற, நோன்பு இலியும் – தவம் இல்லாதவனும், (தீயோனும்,) இல்லது – (தனக்குக்) கிடைத்தற்கரிய பொருளை, காமுற்று – விரும்பி, இருப்பானும் – இருக்கின்றவனும்; கல்வி – பிறன் கற்ற கல்விப் பொருளில், செவிக் குற்றம் – செவியினால் குற்றத்தை, பார்த்திருப்பானும் – ஆராய்ந்து பார்க்கின்றவனும், இ மூவர் – ஆகிய இம் மூவரும், உமி குத்தி – உமியைக் குத்தி, கை வருந்துவார் – கைவருந்துவோரை ஒப்பர்; (எ-று.)

(க-ரை.) வெகுண்ட பேச்சால் பிறரை வெல்லக் கருதுதலும், கிட்டாததைப் பெற முயலுதலும், ஒருவன் கல்வியின் தன்மையை ஆராயாது குற்றங் கூறுதலும்; உமியைக் குத்துபவர் போல் துன்பத்தையும் பயனின்மையையும் கொடுக்கும் என்பது.

வெல்வது : எதிர்காலத் தொழிற்பெயர்; வெல் : பகுதி, வ் : இடைநிலை, அ : சாரியை, து : விகுதி, “வெல்வது வேண்டின் வெகுளி விடல்,” என்பது நான்மணிக்கடிகை. வெகுண்டு : இறந்தகால வினையெச்சம். வெகுள் : பகுதி, ட் : இடைநிலை, உ : விகுதி, ளகரம் ணகரமானது விகாரம். நோன்பு – உயிர்க் குறுகண் செய்யாமை. “உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை, அற்றே தவத்திற் குரு” என்றார் வள்ளுவரும். இலி – இல்லாதவன். உமிக்குத்தி : இரண்டாம் வேற்றுமைத் தொகை. ஒப்பர் என்னும் சொல் எஞ்சி நின்றது.

முன் பக்கம் செல்ல…    தொடரும்


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

இலக்கணம்-இலக்கியம்

நாட்டுப்புற காதல் பாடல்களில் காணப்படும் சங்க அகஇலக்கியக் கூறுகள்

முன்னுரை

நாட்டுப்புற மக்களின் காதல் உணர்வின் வெளிப்பாடே காதல் பாடல்கள் ஆகும். அகத்தின் கண் மறைத்தும் புறத்தின் கண் புலப்பட்டும் மெய்ப்பாடுகளால் தாக்கப்பெறும் வலிய சக்தியே காதல். ஆண், பெண் என்ற தத்துவத்தின் வித்தாகவும் அவற்றின் வாழ்வுக்கும் வளமைக்கும் அடிப்படையாகவும் காதல் விளங்குவதைக் காணலாம்.

 » Read more about: நாட்டுப்புற காதல் பாடல்களில் காணப்படும் சங்க அகஇலக்கியக் கூறுகள்  »

இலக்கணம்-இலக்கியம்

காலந்தோறும் கவிதை

கதையென்பது ஓர் உணர்வுப் பரிமாற்றம். தனக்கேற்றபட்ட சுய அனுபவங்களை, தாக்கங்களை ஏனையவர்களோடும் பகிர்ந்து கொள்ள எடுக்கும் முயற்சியே கவிதை.

கவிதைக்கு நீண்ட வரலாறு உண்டு என்று கூறினோம். ஆம். கவிதை, செய்யுள் என்பவை மன்னர் காலத்தில் மன்னர்களால் புகழப்பட்டது.

 » Read more about: காலந்தோறும் கவிதை  »

இலக்கணம்-இலக்கியம்

கம்பன் கவிநயம்… தொடர் – 11

கம்பனின் கவியாற்றல் ஒரு வியப்புக்குறியாகவே இன்றளவும் உள்ளது.

தமிழ் மொழியைக் கையாண்ட விதம், சொற்களை சொக்கட்டான் போல் விளையாடி கையில் எடுத்து கவிதைக்குள் பின்னி வைத்த அழகு வெறும் வார்த்தைகளால் நம்மால் சொல்ல முடியவில்லை.

 » Read more about: கம்பன் கவிநயம்… தொடர் – 11  »