பாடல் – 26

ஒல்வ தறியும் விருத்தினனு மாருயிரைக்
கொல்வ திடைநீக்கி வாழ்வானும் – வல்லிதிற்
சீல மினிதுடைய வாசானும் இம்மூவர்
ஞால மெனப்படு வார்.

(இ-ள்.) ஒல்வது (தனக்குச்) செய்யக் கூடியதை, அறியும் – அறியவல்ல, விருந்தினனும் – அதிதியும்; ஆர் உயிரை – அருமையாகிய உயிரை, கொல்வது – (ஒருவன்) கொல்லுந் தொழிலை, இடை நீக்கி – கொல்வோனுக்கும் கொல்லப்படுவதற்கும் நடுவே (சென்று) விலக்கி, வாழ்வானும் – வாழ்கின்றவனும்; வல்லிதின் – (மனத்தின்) உறுதியினால், இனிது சீலம் – (உயிர்க்கு) நன்மையைத் தருவதாகிய ஒழுக்கத்தை, உடைய ஆசானும் – உடைய ஆசிரியனும்; இ மூவர் ஆகிய இம் மூவரும், ஞாலம் எனப்படுவார் – உயர்ந்தோர் என்று சிறப்பித்துச் சொல்லப்படுவார்; (எ-று.)

(க-ரை.) பெற்றது கொண்டுமகிழும் அதிதியும், கொலையை நீக்கி வாழ்பவனும் உயிரினும் இனிய ஒழுக்கத்திற் சிறந்த ஆசிரியனும் உயர்ந்தோர் என்று சொல்லப்படுவார் என்பது.

ஒல்வது : தொழிலாகு பெயர். விருந்து – புதுமை. இப் பண்பு ஆகுபெயராய் விருந்தினனை யுணர்த்தும். விருந்தினன் – விருந்து : பகுதி, இன் : சாரியை, அன் : ஆண்பால் விகுதி. விருந்து – அறிவிருந்து அறியாவிருந்து என்றிரு வகைப்படும். முன் அறிந்திருந்தமையால் குறித்து வரும் விருந்து அறிவிருந்து; அறிந்திராமையால் குறியாமல் வரும் விருந்து அறியாவிருந்து. ஆருயிர் – ஆர்உயிர்; ஆர் – அருமை, ஆருயிர் : பண்புத்தொகை. அரு, இரு, பெரு முதலிய பண்புகள் வருமொழி முதலில் உயிர் வந்தால் முதல் நீளப் பெறும். கொல்வது : எதிர்காலத் தொழிற்பெயர், வல்லிது; வலிது என்பதன் விரித்தல் விகாரம் : குறிப்புவினையா லணையும் பெயர். ஆசான் – ஆசாரியன். ஞாலம் – உலகு : இங்கு ஆகுபெயராய் உலகத்து உயர்ந்தோரை உணர்த்தியது.

முன் பக்கம் செல்ல…    தொடரும்


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

இலக்கணம்-இலக்கியம்

நாட்டுப்புற காதல் பாடல்களில் காணப்படும் சங்க அகஇலக்கியக் கூறுகள்

முன்னுரை

நாட்டுப்புற மக்களின் காதல் உணர்வின் வெளிப்பாடே காதல் பாடல்கள் ஆகும். அகத்தின் கண் மறைத்தும் புறத்தின் கண் புலப்பட்டும் மெய்ப்பாடுகளால் தாக்கப்பெறும் வலிய சக்தியே காதல். ஆண், பெண் என்ற தத்துவத்தின் வித்தாகவும் அவற்றின் வாழ்வுக்கும் வளமைக்கும் அடிப்படையாகவும் காதல் விளங்குவதைக் காணலாம்.

 » Read more about: நாட்டுப்புற காதல் பாடல்களில் காணப்படும் சங்க அகஇலக்கியக் கூறுகள்  »

இலக்கணம்-இலக்கியம்

காலந்தோறும் கவிதை

கதையென்பது ஓர் உணர்வுப் பரிமாற்றம். தனக்கேற்றபட்ட சுய அனுபவங்களை, தாக்கங்களை ஏனையவர்களோடும் பகிர்ந்து கொள்ள எடுக்கும் முயற்சியே கவிதை.

கவிதைக்கு நீண்ட வரலாறு உண்டு என்று கூறினோம். ஆம். கவிதை, செய்யுள் என்பவை மன்னர் காலத்தில் மன்னர்களால் புகழப்பட்டது.

 » Read more about: காலந்தோறும் கவிதை  »

இலக்கணம்-இலக்கியம்

கம்பன் கவிநயம்… தொடர் – 11

கம்பனின் கவியாற்றல் ஒரு வியப்புக்குறியாகவே இன்றளவும் உள்ளது.

தமிழ் மொழியைக் கையாண்ட விதம், சொற்களை சொக்கட்டான் போல் விளையாடி கையில் எடுத்து கவிதைக்குள் பின்னி வைத்த அழகு வெறும் வார்த்தைகளால் நம்மால் சொல்ல முடியவில்லை.

 » Read more about: கம்பன் கவிநயம்… தொடர் – 11  »