பாடல் – 25

செருக்கினால் வாழுஞ் சிறியவனும் பைத்தகன்ற
அல்குல் விலைபகரும் ஆய்தொடியும் – நல்லவர்க்கு
வைத்த வறப்புறங் கொன்றானும் இம்மூவர்
கைத்துண்ணார் கற்றறிந் தார்.

(இ-ள்.) செருக்கினால் – (பெரியோரை மதியாமல்) இறுமாப்புடன் : வாழும் – வாழ்கின்ற, சிறியவனும் – அறிவில்லாதவனும்; பைத்து – படத்தைப் போன்றதாய், அகன்ற – விசாலமான, அல்குல் – நிதம்பத்தினை, விலைபகரும் – விற்கும், ஆய் தொடியும் – ஆராய்ந்தெடுத்த வளையலணிந்த வேசையும்; நல்லவர்க்கு – துறவறத்தார்க்கு, வைத்த – அமைத்த, அறப்புறம் – அறச்சாலையை, கொன்றானும் – அழித்தவனும்; இ மூவர் – ஆகிய இம் மூவருடைய, கைத்து – பொருளை, உண்ணார் – புசியார், கற்று – (அற நூல்களைப்) படித்து, அறிந்தார் – (அதன் பொருளை உள்ளபடி ) அறிந்தவர்; (எ-று.)

(க-ரை.) மதிக்கத் தக்க பெரியாரை மதிக்காதவன், விலைமாது, நல்லவர் பொருட்டு ஏற்படுத்தப் பெற்ற அறச்சாலையை அழித்தவன் ஆகிய இம் மூவரிடமும் அறிஞர் உணவு கொள்ளல் ஆகாது என்பது.

செருக்கு. மதம், செல்வக் களிப்பு, ஆல் : மூன்றன் உருபு; உடனிகழ்ச்சிப் பொருள். சிறியவன் என்பதில் சிறுமை அறிவின் மேல் நின்றது. கொல்லல் – அழித்தல், “இன்றும் வருவது கொல்லோ நெருநலும் கொன்றது போலும் நிரப்பு” என்ற திருக்குறள் 1048 இல் கொன்றது என்பதற்கு இன்னாதவற் றைச் செய்தல் என்று பொருள் கூறப்பட்டுள்ளது. பைத்து – பையையுடையது. பை – படம். கைத்து – கையிலுள்ளது : ஒன்றன் பாற் படர்க்கை வினையாலணையும் பெயர், கை : பகுதி, த் : சந்தி, து : ஒன்றன்பால் விகுதி. “வஞ்சத்தாற் பல்கின்பங் காட்டும் பரத்தையும்” என்ற பாடங்கொள்வதும் உண்டு.

முன் பக்கம் செல்ல…    தொடரும்


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மின்னிதழ்

தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 07-2018

 

<div data-configid=”16979909/62858972″ style=”width:100%; height:286px;” class=”issuuembed”></div>

<script type=”text/javascript” src=”//e.issuu.com/embed.js” async=”true”></script>

தந்தைக்கு ஒரு தாலாட்டு!

பத்துமாதம் வயிற்றுக்குள்
பத்தியமாய்ச் சுமக்கவில்லை
சித்தத்தில் உன்நினைவைச்
சிறிதேனும் இறக்கவில்லை!

 » Read more about: தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 07-2018  »

அஞ்சலி

தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 06-2018

உனது எழுத்துக்களின் ஊர்வலத்தோடு….

திருக்காட்டுப்பள்ளி பழமார்நேரியில்
அருட்சுடர்போல் அவதரித்தவன் நீ…
ஆனந்த வயலில் ஆசையெனும் வேதத்தை
அறவே துறந்த எழுத்துச்சித்தன்
நானே எனக்கொரு போதிமரம் எனும்
தத்துவமாய் வாழ்ந்து இரும்புக்குதிரைகளை
எதோ ஒரு நதியில் நடக்கவிடாமல்
கடற் பாலத்தின் மேல் ஓடவிட்டவன் !

 » Read more about: தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 06-2018  »