பாடல் – 20

ஆசை பிறன்கட் படுதலும் பாசம்
பசிப்ப மடியைக் கொளலுங் – கதித்தொருவன்
கல்லானென் றெள்ளப் படுதலும்இம்மூன்றும்
எல்லார்க்கு மின்னா தன.

(இ-ள்.) பிறன்கண் – பிறனொருவனிடத்துள்ள பொருளுக்கு, ஆசைப்படுதலும் – விருப்பத்தைச் செய்தலும், பாசம் – தன் சுற்றத்தார், பசிப்ப – பசித்திருக்க, மடியை – சோம்பலை, கொளலும் – கொள்ளுதலும்; கதித்து – வெறுத்து, ஒருவன் – ஒருவனால், கல்லான் என்று – கற்றிலன் என்று, எள்ளப்படுதலும் – இகழப்படுதலும்; இ மூன்றும் – ஆகிய இம் மூன்றும், எல்லார்க்கும் – யாவர்க்கும், இன்னாதன – இன்பந் தராதவைகளாம்; (எ-று.)

(க-ரை.) அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படுவதும், மக்கள் முதலிய கிளைஞர் உணவின்றி வருந்த யாதொரு முயற்சியுமின்றிச் சும்மா இருப்பதும், கல்லாதவன் என்றிகழப்படுவதும் இன்பந்தராதவை.

பிறன் என்பது அவன் பொருளுக்கு ஆகுபெயர். இனி, பிறன்கண் ஆசைப்படுதலும் என்பதற்குத் தீயோனிடத்துச் செல்வம் உண்டாதலும் என்றுங் கூறலாம். இங்கு நல்லோனுக்கு மறுதலைப்பட்டவனைப் பிறன் என்றார். பாசம் : கயிற்றின் பெயராகிய இஃது ஒருவனை நீங்கவொட்டாமற் கட்டுப்படுத்துகிறதென்னும் ஒப்புமையால் ஆசைக்கு ஆயிற்று. பின்பு ஆசைக்கு இடமாகிய சுற்றத்திற்கு ஆகுபெயர். கதித்து : கதம் என்னும் பெயரடியாகப் பிறந்த வினையெச்சம். கதி : பகுதி, கதித்து என்பதற்குப் பெருத்து வளர்ந்து எனவும் பொருள் கூறுவர். ஒருவன் : கருத்தாப் பொருளில் வந்த மூன்றாம் வேற்றுமைத் தொகை. இன்னாதன : இனிமை என்னும் பண்படியாகப் பிறந்த எதிர்மறைப் பலவின்பால் வினைமுற்று.

முன் பக்கம் செல்ல…    தொடரும்


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

Related Posts

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 19

பாடல் – 19

கொல்யானைக் கோடுங் குணமிலியு மெல்லிற்
பிறன்கடை நின்றொழுகு வானு – மறந்தெரியா
தாடும்பாம் பாட்டு மறிவிலியு மிம்மூவர்
நாடுங்காற் றூங்கு பவர்.

(இ-ள்.) கொல் யானைக்கு –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 19  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 18

பாடல் – 18

ஒருதலையான் வந்துறூஉ மூப்பும் புணர்ந்தார்க்
கிருதலையு மின்னாப் பிரிவு – முருவினை
யுள்ளுருக்கித் தின்னும் பெரும்பிணியு மிம்மூன்றுங்
கள்வரி னஞ்சப் படும்.

(இ-ள்.) ஒருதலையான் –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 18  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 17

பாடல் – 17

மூப்பின்கண் நன்மைக் ககன்றானும் கற்புடையாள்
பூப்பின்கண் சாராத் தலைமகனும் – வாய்ப்பகையுள்
சொல்வென்றி வேண்டும் இலிங்கியும் இம்மூவர்
கல்விப் புணைகைவிட் டார்.

(இ-ள்.) மூப்பின்கண் –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 17  »