பாடல் – 13

சீலம் அறிவான் இளங்கிளை சாலக்
குடியோம்பல் வல்லான் அரசன் – வடுவின்றி
மாண்ட குணத்தான் தவசியென் றிம்மூவர்
யாண்டும் பெறற்கரி யார்.

(இ-ள்.) சீலம் – (பிறர்) குணத்தை, அறிவான் – அறிந்து நடக்கிறவன், இளம் கிளை – இளமை (தொட்டு வந்த) சுற்றத்தானாவான், சால – மிகவும், குடி – குடிகளை, ஓம்பல் – பேணுதலில், வல்லான் – வல்லவன், அரசன் – அரசனாவான், வடுஇன்றி – குற்றம் இல்லாமல், மாண்ட – மாட்சிமைப்பட்ட, குணத்தான் – குணத்தையுடையவன், தவசி – தவசியாவான், என்ற – என்று சொல்லப்பட்ட, இ மூவர் – இம் மூவரும், யாண்டும் – எவ்விடத்தும், பெறற்கு – பெறுதற்கு, அரியார் – அரியராவார்; (எ-று.)

(க-ரை.) பிறர் குணம் அறிந்து நடக்கவல்ல சுற்றத் தானும், குடிகளைக் காக்கவல்ல அரசனும், குற்றமில்லாது துறவோடிருக்கவல்ல தவசியும் எல்லாராலும் தேடிப் பெற வேண்டுபவராவர்.

இளங்கிளை – புத்திரனாவான் என்பதுமுண்டு. இளமையாகியகிளை : பண்புத்தொகை. இளமை என்பதற்கு இளமை தொட்டு வந்த என இலக்கணையாற் பொருள் கொள்ளப்பட்டது; கிளை – சுற்றத்தார்க்கு உவமையாகுபெயர். சால : உரிச்சொல்; மிகுதி யென்னும் பொருட்டு. குடியோம்பல் – தளர்ந்த குடிகளைப் பேணல். அஃதாவது ஆறிலொன்றாகிய இறைப் பொருளையும் வறுமை நீங்கியவழிக் கொள்ளல்வேண்டின் அவ்வாறு கோடலும், இழத்தல் வேண்டின் இழத்தலும் ஆம். மாண்ட மாண், பகுதி; மாண்ட : பெயரெச்சம். தவசி : காரணப் பெயர். தவசு : பகுதி. தவமாவது – மனம் பொறிவழி போகாது நிற்றற் பொருட்டு நோன்புகளால் உண்டி சுருக்கல் முதலாயின. அரியார் என்பதில் அருமை என்னும் பகுதி இன்மை யென்னும் பொருட்டு.

முன் பக்கம் செல்ல…    தொடரும்


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 100

பாடல் – 100

பத்திமை சான்ற படையும் பலர்தொகினும்
எத்துணையும் அஞ்சா எயிலரணும் – வைத்தமைந்த
எண்ணின் உலவா விழுநிதியும் இம்மூன்றும்
மண்ணாளும் வேந்தர்க் குறுப்பு.

(இ-ள்.) பத்திமை சான்ற –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 100  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 99

பாடல் – 99

கற்றாரைக் கைவிட்டு வாழ்தலும் காமுற்ற
பெட்டாங்கு செய்தொழுகும் பேதையும் – முட்டின்றி
அல்லவை செய்யும் அலவலையும் இம்மூவர்
நல்லுலகம் சேரா தவர்.

(இ-ள்.) கற்றாரை –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 99  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 98

பாடல் – 98

செந்தீ முதல்வர் அறம்நினைந்து வாழ்தலும்
வெஞ்சின வேந்தன் முறைநெறியில் சேர்தலும்
பெண்பால் கொழுநன் வழிச்செலவும் இம்மூன்றும்
திங்கள்மும் மாரிக்கு வித்து.

(இ-ள்.) செந்தீ –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 98  »