பாடல் – 14

இழுக்கல் இயல்பிற் றிளமை பழித்தவை
சொல்லுதல் வற்றாகும் பேதைமை – யாண்டும்
செறுவொடு நிற்குஞ் சிறுமைஇம் மூன்றும்
குறுகார் அறிவுடை யார்.

(இ-ள்.) இளமை – இளமைப் பருவம், இழுக்கல் – வழுவுதலை, இயல்பிற்று – இயல்பாகவுடையது; பேதைமை – அறியாமை, பழித்தவை – (அறிவுடையோரால்) விலக்கப்பட்டவைகளை; சொல்லுதல் – சொல்லுதலில், வற்று ஆகும் – வல்லதாம், சிறுமை – ஈனத்தன்மை, யாண்டும் – எக்காலத்தும் செறுவொடு – சினத்தோடு, நிற்கும் – நிற்பதாகும் (ஆதலால்), இ மூன்றும் – இம் மூவகையினையும், அறிவு உடையார் – (மேல் விளைவை) அறிதலையுடையார், குறுகார் – நெருங்கார்; (எ-று.)

(க-ரை.) இயல்பாக வழுவுதலையுடையது இளமைப்பருவமாம்; வெறுப்பவைகளைச் சொல்லுதல் மூடத்தனம்; எப்போதும் சினத்தோடிருப்பது சிறுமை; இவை ஒருவனுக்கு இருந்தால் பெரியோர்அவனைச் சேரார்.

இழுக்கல் – வழக்குதல்; இழுக்கு : பகுதி, அல் : தொழிற் பெயர் விகுதி, இயல்பிற்று : குறிப்பு முற்று. இயல்பு ; பகுதி, இன் : சாரியை. று : விகுதி. னகரம் றகரமாகத் திரிந்தது. பழித்தவை : பலவின்பால் வினையாலணையும் பெயர். வற்று : வன்மையின் திரிபாகிய வல் : பகுதி. று : ஒன்றன்பால் விகுதி, லகரம் றகரமானது சந்தி. செறுவொடு : ஒடு என்னும் மூன்றனுருபு விசேடணப் பொருளது. சிறுமையுடன் செறுவும் உடனிகழ்தலால், உடனிகழ்ச்சிப்பொருளுமாம், இளமை, பேதைமை, சிறுமைகள் அவற்றையுடையார்க்குப் பண்பாகு பெயரென்றாயினும், இழிவுபற்றி உயர்திணையை அஃறிணையாகக் கூறியதென்றாயினும் அமைத்துக்கொள்க.

முன் பக்கம் செல்ல…    தொடரும்

 


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

இலக்கணம்-இலக்கியம்

நாட்டுப்புற காதல் பாடல்களில் காணப்படும் சங்க அகஇலக்கியக் கூறுகள்

முன்னுரை

நாட்டுப்புற மக்களின் காதல் உணர்வின் வெளிப்பாடே காதல் பாடல்கள் ஆகும். அகத்தின் கண் மறைத்தும் புறத்தின் கண் புலப்பட்டும் மெய்ப்பாடுகளால் தாக்கப்பெறும் வலிய சக்தியே காதல். ஆண், பெண் என்ற தத்துவத்தின் வித்தாகவும் அவற்றின் வாழ்வுக்கும் வளமைக்கும் அடிப்படையாகவும் காதல் விளங்குவதைக் காணலாம்.

 » Read more about: நாட்டுப்புற காதல் பாடல்களில் காணப்படும் சங்க அகஇலக்கியக் கூறுகள்  »

இலக்கணம்-இலக்கியம்

காலந்தோறும் கவிதை

கதையென்பது ஓர் உணர்வுப் பரிமாற்றம். தனக்கேற்றபட்ட சுய அனுபவங்களை, தாக்கங்களை ஏனையவர்களோடும் பகிர்ந்து கொள்ள எடுக்கும் முயற்சியே கவிதை.

கவிதைக்கு நீண்ட வரலாறு உண்டு என்று கூறினோம். ஆம். கவிதை, செய்யுள் என்பவை மன்னர் காலத்தில் மன்னர்களால் புகழப்பட்டது.

 » Read more about: காலந்தோறும் கவிதை  »

இலக்கணம்-இலக்கியம்

கம்பன் கவிநயம்… தொடர் – 11

கம்பனின் கவியாற்றல் ஒரு வியப்புக்குறியாகவே இன்றளவும் உள்ளது.

தமிழ் மொழியைக் கையாண்ட விதம், சொற்களை சொக்கட்டான் போல் விளையாடி கையில் எடுத்து கவிதைக்குள் பின்னி வைத்த அழகு வெறும் வார்த்தைகளால் நம்மால் சொல்ல முடியவில்லை.

 » Read more about: கம்பன் கவிநயம்… தொடர் – 11  »