பாடல் – 12

தாளாளன் என்பான் கடன்படா வாழ்பவன்
வேளாளன் என்பான் விருந்திருக்க உண்ணாதான்
கோளாளன் என்பான் மறவாதான் இம்மூவர்
கேளாக வாழ்தல் இனிது.

(இ-ள்.) தாள் ஆளன் என்பான் – முயற்சியை ஆளுதலுடையான் என்று சிறப்பித்துச் சொல்லப்படுபவன், கடன்படா – கடன் படாமல், வாழ்பவன் – வாழ்தலுடையவன், வேள் ஆளன் – உதவி யாளன், என்பான் – என்று சொல்லப்படுவோன், விருந்து – வந்த விருந்தினர், இருக்க – பசித்து இருக்கையில், உண்ணாதான்- (தனித்து) உண்ணாதவன், கோள் ஆளான் – (பிறர் அறிந்த காரியங்களை மனத்திற்) கொள்ளுதல் உடையவன், என்பான் – என்று சொல்லப்படுபவன், மறவாதான் – கேட்டவற்றை மறவாதவன், இ மூவர் – இம் மூவரும், கேள் ஆக – தனக்கு நட்பினராயிருக்க, வாழ்தல் – (ஒருவன்) வாழ்வது, இனிது – (அவனுக்கு) நன்மை தருவதாகும்; (எ-று.)

(க-ரை.) கடன்படாது வாழ்வதே நல்ல முயற்சி யென்பதும் வீட்டுக்கு வந்த விருந்தினரைப் பேணுதலே சிறந்த உதவி என்பதும், தான் ஒருவர் சொல்லியவற்றை மறவாது மனத்திற் கொண்டிருத்தலே நற்சிந்தை என்பதும் ஆம்.

தாள் – முயற்சி, வேள் – உதவி, என்பான் – என்று சொல்லப் படுபவன் : செயப்பாட்டுவினை செய்வினையாக வந்த வினையாலணையும் பெயர்; என்: இடைச்சொல்; பகுதி, “எந்நாளும் காப்பாரே வேளாளர் காண்” என்ற கம்பர் தனிக் கவியடியும் வேளாளன் என்பான் விருந்திருக்க உண்ணாதான் என்ற உண்மையை விளக்கும். பாடா : எதிர்மறை வினையெச்சம், து விகுதி கெட்டது. இருக்க : செயவென் வாய்ப்பாட்டு வினையெச்சம். ஆக : செயவென் வாய்பாட்டு வினையெச்சம். கோள் : முதனிலை திரிந்த தொழிற் பெயர். விருந்து, கேள் : இவை பண்பாகு பெயராய் விருந்தினரையும் கேளிரையும் உணர்த்தும். கோளாளன் என்பதற்கு ஆசிரியர் கூறிய நூற்பொருளை அமையக் கொள்ளும் மாணாக்கன் என்று சொல்லப்படுவோன் கேட்டவற்றை மறத்தலில்லாதவன் எனலும் ஆம்.

முன் பக்கம் செல்ல…    தொடரும்


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

Related Posts

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 20

பாடல் – 20

ஆசை பிறன்கட் படுதலும் பாசம்
பசிப்ப மடியைக் கொளலுங் – கதித்தொருவன்
கல்லானென் றெள்ளப் படுதலும்இம்மூன்றும்
எல்லார்க்கு மின்னா தன.

(இ-ள்.) பிறன்கண் –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 20  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 19

பாடல் – 19

கொல்யானைக் கோடுங் குணமிலியு மெல்லிற்
பிறன்கடை நின்றொழுகு வானு – மறந்தெரியா
தாடும்பாம் பாட்டு மறிவிலியு மிம்மூவர்
நாடுங்காற் றூங்கு பவர்.

(இ-ள்.) கொல் யானைக்கு –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 19  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 18

பாடல் – 18

ஒருதலையான் வந்துறூஉ மூப்பும் புணர்ந்தார்க்
கிருதலையு மின்னாப் பிரிவு – முருவினை
யுள்ளுருக்கித் தின்னும் பெரும்பிணியு மிம்மூன்றுங்
கள்வரி னஞ்சப் படும்.

(இ-ள்.) ஒருதலையான் –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 18  »