பாடல் – 08

தொல்லவையுள் தோன்றுங் குடிமையும் தொக்கிருந்த
நல்லவையுள் மேம்பட்ட கல்வியும் – வெல்சமத்து
வேந்துவப்ப வாட்டார்த்த வென்றியும் இம்மூன்றும்
தாந்தம்மைக் கூறாப் பொருள்.

(பொருள்) :

தொல் அவையுள் – பழைமையை ஆராயவல்லோர் கூடியிருக்கும் சபையிடத்தே, தோன்றும் – தானாக விளங்கித் தோன்றும், குடிமையும் – குடிப்பிறப்பும், தொக்கு இருந்த – பலவகை நூலோரும் கூடியிருந்த, நல் அவையுள் – நல்ல சபையினிடத்தே, மேம்பட்ட – மேன்மைப்பட்ட, கல்வியும் – படிப்பும், வெல் சமத்து -வெல்லும் போரிடத்தே, வேந்து – தம் வேந்தன், உவப்ப – மகிழ, அட்டு – பகைவரைக் கொன்று, ஆர்த்த – நிறைத்த, வென்றியும் – வெற்றியும், இ மூன்றும் – ஆகிய இம் மூன்றும், தாம் – தாமே, தம்மை – தம்மைக் குறித்து, கூறா – புகழ்ந்துபேச வேண்டாத, பொருள் – பொருள்களாம்; (எ-று.)

(கருத்துரை) :

பேர்பெற்ற குடிப்பிறப்பு, சிறந்த கல்வி, வெற்றி மிகுந்த வீரம் இவைதாமே பிறர்க்கு விளங்குவன; இவற்றையுடையவர் தாமே எடுத்துயர்த்தல் பேதைமையுடைத்து; ஆதலால் எடுத்துரைத்த லாகாது.

தொல்லவை – தொன்மை + அவை, தொன்மை – பழைமை, பண்புப் பெயர், நல்லவை – நன்மை+அவை, குடிமை; குடி+குலம் : இஃது ஆகுபெயராய் அதிற் பிறப்பைக் குறிக்கும். தொக்கு – தொகு என்ற பகுதி இரட்டித்து இறந்தகாலங் காட்டியது : வினையெச்சம். மேம்பட்ட – மேன்மைப்பட்ட; படுதல் – உண்டாதல், வேந்து – வேந்தன் தன்மை, வேந்தனுக்கு ஆகுபெயர்; கூற்று. அரசு முதலியவை போல, உவப்ப, அட்டு என்னும் வினையெச்சங்கட்கு முறையே உவ, அடு என்பன முதனிலைகள், ஆர்த்த – முழங்குதலுமாம். வென்றி : தொழிற்பெயர். சமம் – போர், இருவர் எதிர்த்து நிற்றல் என்பது.

முன் பக்கம் செல்ல…    தொடரும்


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 100

பாடல் – 100

பத்திமை சான்ற படையும் பலர்தொகினும்
எத்துணையும் அஞ்சா எயிலரணும் – வைத்தமைந்த
எண்ணின் உலவா விழுநிதியும் இம்மூன்றும்
மண்ணாளும் வேந்தர்க் குறுப்பு.

(இ-ள்.) பத்திமை சான்ற –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 100  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 99

பாடல் – 99

கற்றாரைக் கைவிட்டு வாழ்தலும் காமுற்ற
பெட்டாங்கு செய்தொழுகும் பேதையும் – முட்டின்றி
அல்லவை செய்யும் அலவலையும் இம்மூவர்
நல்லுலகம் சேரா தவர்.

(இ-ள்.) கற்றாரை –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 99  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 98

பாடல் – 98

செந்தீ முதல்வர் அறம்நினைந்து வாழ்தலும்
வெஞ்சின வேந்தன் முறைநெறியில் சேர்தலும்
பெண்பால் கொழுநன் வழிச்செலவும் இம்மூன்றும்
திங்கள்மும் மாரிக்கு வித்து.

(இ-ள்.) செந்தீ –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 98  »