பாடல் – 09

பெருமை யுடையா ரினத்தின் அகறல்
உரிமையில் பெண்டிரைக் காமுற்று வாழ்தல்
விழுமிய வல்ல துணிதலிம் மூன்றும்
முழுமக்கள் காத லவை.

(பொருள்) :

பெருமை – பெருந்தன்மை, உடையார் – உடையவருடைய, இனத்தின் – இனத்தினின்றும், அகறல் – நீங்குதலும், உரிமைஇல் – தமக்கு உரியராதல் இல்லாத, பெண்டிரை – மாதரை, காமுற்று – விரும்பி, வாழ்தல் – அவரோடு வாழ்தலும், விழுமிய அல்ல – சிறந்தவை அல்லாதவற்றை, துணிதல் – சிறந்தவையாகத் துணிதலும், இ மூன்றும் – ஆகிய இம் மூன்றும், முழுமக்கள் – மூடர், காதலவை – விரும்புபவையாம்; (எ-று.)

(கருத்துரை) :

நல்லாரிணக்கம் விடுதலும், தமக்கு மணஞ்செய்து கொடுக்காத பெண்களை விரும்புதலும், பயனற்ற செயல்களைச் செய்தலும், அறிவற்ற மூடர்கள் செயல்களாம்.

பெருமை – அறிவொழுக்கங்களில் மிகுதியுடைமை. அகறல்; தல் விகுதிபெற்ற தொழிற்பெயர். உரிமை கிழமை, பற்று, தன்மனைக்கு உரிமையுடையவள்; மனைவி . காமுற்று : காமுறு – பகுதி, காமம் உறு என்பதன் விகாரம் விழுமிய : பண்படியாய்ப் பிறந்த பலவின்பாற்பெயர். அறிவின்மையாகிய குறையுள்ள மக்களை முழு மக்கள் என்றது மங்கல வழக்கு : முழுமையாகிய மக்கள் : பண்புத்தொகை. படித்து வருந்தி மனத்திலாயினும் உடம்பிலாயினும் சிறிதும் புரைபடாதவர்; அஃதாவது : பிறந்தபடியிருப்பவர், “முழுமகன் சிதடன் இழுதை மூடன்” – திவாகரம். அகறல் வாழ்தல் துணிதல், இவற்றில் உம் என்னும் எண் இடைச்சொல் தொக்கு நின்றது : பெயர்ச் செவ்வெண்.

முன் பக்கம் செல்ல…    தொடரும்


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

Related Posts

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 20

பாடல் – 20

ஆசை பிறன்கட் படுதலும் பாசம்
பசிப்ப மடியைக் கொளலுங் – கதித்தொருவன்
கல்லானென் றெள்ளப் படுதலும்இம்மூன்றும்
எல்லார்க்கு மின்னா தன.

(இ-ள்.) பிறன்கண் –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 20  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 19

பாடல் – 19

கொல்யானைக் கோடுங் குணமிலியு மெல்லிற்
பிறன்கடை நின்றொழுகு வானு – மறந்தெரியா
தாடும்பாம் பாட்டு மறிவிலியு மிம்மூவர்
நாடுங்காற் றூங்கு பவர்.

(இ-ள்.) கொல் யானைக்கு –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 19  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 18

பாடல் – 18

ஒருதலையான் வந்துறூஉ மூப்பும் புணர்ந்தார்க்
கிருதலையு மின்னாப் பிரிவு – முருவினை
யுள்ளுருக்கித் தின்னும் பெரும்பிணியு மிம்மூன்றுங்
கள்வரி னஞ்சப் படும்.

(இ-ள்.) ஒருதலையான் –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 18  »