பாடல் – 04

பகைமுன்னர் வாழ்க்கை செயலும் தொகைநின்ற
பெற்றத்துட் கோலின்றிச் சேறலும் – முற்றன்னைக்
காய்வனைக் கைவாங்கிக் கோடலும் இம்மூன்றும்
சாவ வுறுவான் தொழில்.

(பொருள்) :

பகை முன்னர் – தன் பகைவர் முன்னே, வாழ்க்கை செயலும் – செல்வத்துடன் வாழ்தலைச் செய்தலும், தொகை நின்ற – தொகுதியாக நின்ற, பெற்றத்துள் – மாடுகளின் நடுவே, கோல் இன்றி – கோல் இல்லாமல், சேறலும் – செல்லுதலும், முன் – முன்னே (நின்று), தன்னைக் காய்வானை – தன்னை வருத்துபவனை, கை வாங்கி – முன் விட்டு நீக்கி, கோடலும் – பின் அவனை நட்புக் கொள்ளுதலும், இம்மூன்றும் – ஆகிய இம் மூன்று செயல்களும், சாவ உறுவான் – சாகவேண்டியவனுடைய, தொழில் – செய்கைகளாம்; (எ-று.)

(கருத்து) :

பகைவர்களுக்கு எதிரில் செல்வங் காட்டினால் அவர்கள் அதற்குக் கேடு செய்ய முற்படுவார்கள். கோலில்லாது மாட்டு மந்தையிற் போனால் ஏதாவது ஒரு மாடு முட்டும். பகைவரோடு நட்புப் பாராட்டினால் கெடுதி உண்டாகும்.

பகை – பகைத்தல்; முதனிலைத் தொழிற்பெயர், இங்கு ஆகு பெயராய்ப் பகைவரை யுணர்த்தியது பண்பாகு பெயரென்பதுமாம். பகைமுன்னர் – பகைக்கு முன்னர் : நான்காம் வேற்றுமைத் தொகை. பெற்றம் – பசுவுக்கும் எருதுக்கும் பொது : தென் பாண்டி நாட்டுத் திசைச்சொல். சேறல், கோடல் : தல் ஈற்றுத் தொழிற் பெயர்கள்; செல், கொள், என்பன முதனிலைகள். கை வாங்கல் – ஒரு சொல்லின் தன்மையில், கைவாங்கு : பகுதி. சாவவுறுவான் – இறக்கும்படி துன்பம் அடைவான், உறுதல் துயருறுதற்குரிய வினை.

முன் பக்கம் செல்ல…    தொடரும்

 


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 100

பாடல் – 100

பத்திமை சான்ற படையும் பலர்தொகினும்
எத்துணையும் அஞ்சா எயிலரணும் – வைத்தமைந்த
எண்ணின் உலவா விழுநிதியும் இம்மூன்றும்
மண்ணாளும் வேந்தர்க் குறுப்பு.

(இ-ள்.) பத்திமை சான்ற –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 100  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 99

பாடல் – 99

கற்றாரைக் கைவிட்டு வாழ்தலும் காமுற்ற
பெட்டாங்கு செய்தொழுகும் பேதையும் – முட்டின்றி
அல்லவை செய்யும் அலவலையும் இம்மூவர்
நல்லுலகம் சேரா தவர்.

(இ-ள்.) கற்றாரை –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 99  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 98

பாடல் – 98

செந்தீ முதல்வர் அறம்நினைந்து வாழ்தலும்
வெஞ்சின வேந்தன் முறைநெறியில் சேர்தலும்
பெண்பால் கொழுநன் வழிச்செலவும் இம்மூன்றும்
திங்கள்மும் மாரிக்கு வித்து.

(இ-ள்.) செந்தீ –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 98  »