பாடல் – 03
கல்லார்க்கு இன்னா ஒழுகலும், காழ்க் கொண்ட
இல்லாளைக் கோலால் புடைத்தலும், இல்லம்
சிறியாரைக் கொண்டு புகலும், – இம் மூன்றும்
அறியாமையான் வரும் கேடு.
(பொருள்) :
கல்லார்க்கு – கல்லாதவர்களுடன் (கற்றியாதவார்), இன்னா – இனிமையாக (நட்பாக), ஒழுகலும் – இருப்பதும் (நடப்பதும்), காழ் கொண்ட – கற்புடையாள் (கற்பில் சிறந்த), இல்லாளை- மனைவியை(இல்லத்தை ஆள்பவள்), கோலால் – தடி கொண்டு, புடைத்தலும் – அடித்தலும், இல்லம் – வீட்டிற்கு, சிறியாரை – சிற்றறிவு கொண்டவரை, கொண்டு புகலும் – சேர்த்து உறவாடுதலும், இம்மூன்றும் – இந்த மூன்றும், அறியாமையான் – அறியாமையினால், வரும் – வருகின்ற, கேடு – கேடுகளாகும்.
இல்லம் – வீடு
(கருத்து) :
கற்றறியாதவருடன் நட்பாய் இருப்பதும், கற்புடை மனைவியை அடித்தலும், சிற்றறிவினரை தம் வீட்டுள் சேர்ப்பதும் அறியாமையினால் விளைகின்ற கேடுகளாகும்.