பாடல் – 02

தன்குணங் குன்றாத் தகைமையும் தாவில்சீர்
இன்குணத்தார் ஏவின செய்தலும் – நன்குணர்வின்
நான்மறை யாளர் வழிச்செலவும் இம்மூன்றும்
மேன்முறை யாளர் தொழில்.

(பொருள்):

தன் குணம் – தனது (குடிப்பிறப்பின்) குணம், குன்றா – குன்றாமைக்கு (ஏதுவாகிய), தகைமையும் – ஒழுக்கமும், தா இல் – அழிதல் இல்லாத, சீர் – பெரும் புகழைதருகின்ற, இன் குணத்தார் – இனிய குணத்தையுடையோர், ஏவின – ஏவிய தொழில்களை, செய்தலும் – செய்வதும், நன்கு – அறத்தினியல்பை, உணர்வு – (அறியும்) அறிவையுடைய, நான்மைறையாளர் – நான்கு வகைப்பட்ட வேதங்களை ஓதிய வேதியர், வழி – (கூறிய) வழியில், செலவும் – நடத்தலும், இம்மூன்றும் – ஆகிய இம்மூன்றும், மேல் முறையாளர் – மேன்மையாகி ஒழுக்கத்தை ஆளுதல் உடையாரது, தொழில் – தொழில்களாம்;

(கருத்து):

தன்குலச் சிறப்புக் கெடாத வண்ணம் ஒழுகுதலும், குணஞ் சான்றவர்க்கு ஆவன செய்தலும், நான்மறையாளர் சொல்லும் வழி நிற்றலும் மேலோர் செய்கை.

குன்றா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம், தகைமை – பெருமையுமாம் , தாவில் என்பதைத் தாவு + இல் என்றும் பிரிக்கலாம். இங்கு தா என்னும் முதல் நிலையே உகரச்சாரியை பெற்றுத் தாவு என்றாயிற்று. தா+இல் என்னுமிடத்துத் தா – முதனிலைத் தொழிற் பெயர். நான்மறை – நான்கு மறை; நான்கு கூறுமாய் மறைந்த பொருள்களுமுடைமையால் நான்மறை என்றார். அவை பௌடிகமும், தைத்திரியமும், சாமவேதமும், தலவகாரமும் ஆகும். இவற்றை இக்காலத்தவர் ரிக், யசுர், சாமம், அதர்வணம் என்பர்.

முன் பக்கம் செல்லதொடரும்


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 100

பாடல் – 100

பத்திமை சான்ற படையும் பலர்தொகினும்
எத்துணையும் அஞ்சா எயிலரணும் – வைத்தமைந்த
எண்ணின் உலவா விழுநிதியும் இம்மூன்றும்
மண்ணாளும் வேந்தர்க் குறுப்பு.

(இ-ள்.) பத்திமை சான்ற –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 100  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 99

பாடல் – 99

கற்றாரைக் கைவிட்டு வாழ்தலும் காமுற்ற
பெட்டாங்கு செய்தொழுகும் பேதையும் – முட்டின்றி
அல்லவை செய்யும் அலவலையும் இம்மூவர்
நல்லுலகம் சேரா தவர்.

(இ-ள்.) கற்றாரை –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 99  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 98

பாடல் – 98

செந்தீ முதல்வர் அறம்நினைந்து வாழ்தலும்
வெஞ்சின வேந்தன் முறைநெறியில் சேர்தலும்
பெண்பால் கொழுநன் வழிச்செலவும் இம்மூன்றும்
திங்கள்மும் மாரிக்கு வித்து.

(இ-ள்.) செந்தீ –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 98  »