4

சக்தி கண்களை மூடி, திரும்பத் திரும்ப நினைத்துப் பார்க்கிறாள். மீண்டும் கனவு வரவே இல்லை.

சிலநாட்கள் நகர்ந்தது…

பாட்டி வீட்டில் இருக்கும் கோழிக் குஞ்சுகளுக்கு, அம்மியில் நுணுக்கிய அரிசியை, பிஞ்சு விரல்களால் தூவித் தூவியே… சக்தி விளையாடிக் கொண்டிருந்தாள்..

‘இந்தா மா…! சக்தி… நாளைக்கு, தாத்தா கூட ஊருக்குப் போகனும். வந்து, ஒரு வாரம் ஆச்சு.ல… அடுத்தவாரம் பள்ளிக்கூடம் திறக்குறாங்கலாம், அம்மா, அப்பா ஊருக்கு கூட்டியாரச் சொன்னாங்க… சரியா..? டா..! தங்கம்.’

‘ம், சரிங்க பாட்டி..!

இன்னைக்கு, பெரிய கோயிலுக்கு போய் சாமியை பார்த்துட்டுப் போறேன். பாட்டி..!’

‘ம்..கூ..ம்… அதுக்கென்ன..? சரிடா..! செல்லம்…’

தாத்தாவும், சக்தியும் கோவிலுக்குள் நுழைந்தனர்…

கும்பாபிஷேகம் முடிந்து, ஆட்கள் இல்லாமல், உட்பிரகாரம் நிசப்தமாக இருந்தது.

‘ஏன்… தாத்தா..?

இந்தக் கோயிலை யார் கட்டினாங்க..?’

‘இந்தக் கோயிலை ஆயிரம் வருடங்களுக்கு முன்பாக ராசராசசோழன் என்ற மன்னர் கட்டினார். ரெம்பவும் பழமையான கோவில், நம்ம கலாச்சாரம், கட்டிடக்கலையின் பாரம்பரியச் சின்னம் இது.ப்பா..!’

‘ஓ… அப்படியா..?’

‘சரி..! சாமி கும்பிடு’ என்று, தாத்தா கண்களை மூடி வணங்கிக் கொண்டு இருக்க… சூடம் ஏற்றி ஆராதனை செய்ய, அந்தணர் முனைப்போடு இருக்க… ஓடிப்போய் கருவறைக்குள் சென்று, சிவலிங்கத்தை கட்டிப்பிடித்துக் கொண்டாள் சக்தி.

‘ஏ…ய்..? சக்தி..! அப்படியெல்லாம் பண்ணக்கூடாது..! வா..!’ என்று, தாத்தா அழைக்க… ‘விடுங்க தேவரே..!’ என்று, சக்தியின் செய்கையை, தன்னை மறந்து ரசித்துக் கொண்டிருந்தார்… கோவில் அந்தணர்.

‘தாத்தா… சிவன் ரெம்ப குளுகுளுனு… இருக்கார்..! எனக்கும், ஏதோ..? சக்தி வந்தது மாதிரி இருக்கு.’

‘இல்ல.டா..? அம்மா..! சாமியை, அப்படியெல்லாம் பண்ணக்கூடாது..!’

‘தொட்டுப் பார்க்கனும் போல, ஆசையா இருந்தது. தாத்தா…’

‘ம், சரி‌… வா..!’ சக்தி…‌

வரையப்பட்டிருக்கும் ஓவியங்கள், சிற்பங்களை ரசித்துக்கொண்டே… ‘கோவிலைச் சுற்றிச் சுற்றி ஏதோ..? எழுதி இருக்காங்களே..! என்னாது..? தாத்தா… இது…’

‘ராசராசன் கோவில் கட்டும் பொழுது, யார்..? யாரெல்லாம், கோவில் கட்டும் பணியில் இருந்தார்களோ..? அவர்கள் பெயரையும், கோவில் கட்டும் பணியில் இருந்தவர்களுக்கு, உணவு, உடை, சவரம் செய்தவர்கள் என்று, கோவில் பணிக்கு உதவிய எல்லோருடைய பெயரையும் எழுதி, கடைசியில தன் பெயரையும் எழுதி இருக்கார்.டா..!’

‘உண்மையிலேயே, ராஜராஜ சோழன் ரெம்ப நல்லவரா இருந்திருக்கார். தாத்தா..!’

‘ம்… ஆமா.மா..! சரி, தாத்தாவுக்கு, கால் வலிக்குது…

உச்சி வெயிலில், கோபுரத்து நிழல் கீழே விழுகாது..! போய் பாரு..!’ என்று, சக்தியை தாத்தா அனுப்பினார்

‘அட, ஆமாம்..! என்று ரசித்துக்கொண்டே… வடதிசையில் வழியும் தீர்த்தத்தை, கையில் பிடித்து குடித்து, தலையில் மூன்று முறை தெளித்துக் கொண்டாள்.

தாத்தாவுக்கு, தீர்த்தத்தை பிஞ்சு விரல்களில் பிடித்த படியே, ஓடிய பொழுது… எதிர்பாராமல் கால் இடறி, ‘அம்மா’ என்று, அலறல் சந்தத்தோடு கீழே விழுந்தாள்.

சக்தி தானாக் எழுந்தபடி , ‘நீ… தான… ஏ… கால்களை தடுக்கினாய்… என்று, பிஞ்சுப் பாதங்களில் எட்டி உதைத்தாள்..

புவி உருண்டை போல, அழகிய உருளை வடிவத்தில், முட்டை போல இருந்த, வித்தியாசமான தோற்றத்தில் கல் வெளிப்பட்டதும், எடுத்துக்கொண்டு ஓடி, கழிமுகத்தில் வந்த தீர்த்தத்தில் கழுவியதும், பளிங்கு கல் போல, பளபளப்பாக இருந்தது.

அந்தக் கல்லில்… சிவப்பு, பச்சை, மஞ்சள், நீலம், கறுப்பு, ஊதா… என்று, ஏராளமான வண்ணங்கள் அடர் நிறத்திலும், வெளிர் நிறத்திலும், புள்ளிப் புள்ளியாய் இருந்தது.

தாத்தாவிடம், நடந்ததை கூறினாள் சக்தி.

ம். ம்… என்றபடியே… சக்தியை வீட்டிற்கு, அழைத்துச் சென்றார். தாத்தா


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

தொடர் கதை

மஹ்ஜபின் – 3

தொடர் – 03

அவர் வேலை தேடி சவூதி அரேபியா வுக்குச் செல்ல தயாராகிக் கொண்டிருந்த காலம் அது.

கனவுச் சிறைக்குள் சுதந்திரக் கைதி யாய் சிறகடித்த அவளின் தாய்க்கு வெளி நாட்டு வாழ்க்கையில் இஷ்டம் இல்லை.

 » Read more about: மஹ்ஜபின் – 3  »

தொடர் கதை

மஹ்ஜபின் – 2

தொடர் – 02

எப்படியாவது தனது மனதில் உள்ள மூன்றாண்டுக் கால காதலை மஹ்ஜபினிடம் சொல்லி விட வேண்டும் என்ற முடிவுடன் அன்றொரு நாள் அவளைச் சந்தித்து தனது காதலையும் நேசத்தையும் காத்திருப்பையும் சொல்லி முடித்தான் கஷ்வின்.

 » Read more about: மஹ்ஜபின் – 2  »

தொடர் கதை

மஹ்ஜபின் – 1

மஹ்ஜபின் என அறிந்து கொண்ட நாட்களில்  இருந்து கஷ்வின் அவளை தன் இதயவரையில் மாளிகை கட்டி குடியமர்த்தி இருந்தான். மறு புறமாக ரீஸாவை பார்க்கும் போதல்லாம் அவள் மஹ்ஜபீன் தான் எனத் தெரியாமல் அவளை தப்புத் தப்பாக எண்ணியதை நினைத்து வெட்கித்து தலையை கவிழப் போட்டான். சுமார் மூன்று நான்கு வருடங்களாக அவனது நாடி நாளங்களில் எல்லாம் உருத் தெரியாமல் ஊடுருவி வாழ்ந்து கொண்டிருந்த மஹ்ஜபினின் முகத்தை கண்டு விட்டான் கஷ்வின்.... யுகம் யுகமாய் தவமிருந்த முனிவனுக்கு கிடைத்த வரம் போல இன்றேனும் மஹ்ஜபினைக் கண்டு விட்ட ஜென்மானந்தம் அவனுக்குள் சொல்லி மகிழ வார்த்தைகளே இன்றி அவளுடைய உள்ளமெங்கும் பட்டாம்பூச்சிகள் சிறகடித்தன..