2
‘கோயிலுக்கு வந்து, பாதியிலேயே திரும்பி போகலாமா..? தாத்தா..!’ என்று, சக்தி கேட்க… தாத்தா, மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல்… சிதறிய பூக்கூடையை எடுத்து, சக்தியை கையில் தூக்கிக் கொண்டு நடந்தார்.
வண்ண வண்ண பலூன்கள், ராட்டினங்கள், விளையாட்டுப் பொருட்கள், பொம்மைகள் புதிது புதிதாக சாலையின் இருபுறமும் நிறைந்து இருக்க… சக்தி மயங்கி விழுந்ததை மறக்கச் செய்ய
‘ஏதாச்சும் விளையாட்டுச் சாமான்கள் வேணுமா..? தங்கம்’ என்று, கேட்க…
‘அதெல்லாம், ஒன்னும் வேணாம்.ங்க தாத்தா..!’ என்றபடியே… தலையாட்டி பொம்மை, தலையைத் தலையை ஆட்டி அழைப்பதைக் கூர்ந்து பார்த்தாள் சக்தி.
‘இது, பிடிச்சுருக்காடா..? தங்கம். தாத்தா வாங்கித்தாரேன். சரியா..?’
ஜிப்பாவின் பக்கவாட்டில் இருந்து, மூன்றாக மடித்திருந்த ஐநூறு ரூபாய் நோட்டை எடுத்து, வாங்கினார்.
‘வேற ஏதாச்சும் வேணுமா..? ப்பா..!’
‘இல்லைங்க தாத்தா இதுவே போதும்..!’
‘சரி..!
கோயிலுக்கு உள்ள போகலாமா..?’
‘ம்ம்…
சரிங்க தாத்தா..!’
கூட்ட நெரிசலில் சக்திக்கு மூச்சுத் திணற… சக்தியை தோளில் தூக்கிக் கொண்டார் தாத்தா.
முப்பத்து மூன்று மீட்டர் உயரமுள்ள கோபுர நுழைவு வாயிலில் மெல்ல…மெல்ல… முன்னேற…
சாதாரணமாக அடுக்கி வைத்த கற்கள் போல, கோபுரம் இருப்பதை பார்த்து, தொட்டும் பார்க்கும் ஆசையில்… ஒரு கையில் தாத்தாவின் உருமாலயும், தலையாட்டி பொம்மையையும் பிடித்துக்கொண்டு… மற்றொரு கையால், தலைக்கு மேல் உயர்த்தி, கோபுரத்தை தொட்டிட பார்க்கிறாள். முடியவில்லை…
கூட்டம், முட்டி, மோதித் தள்ள… மெதுமெதுவாக தாத்தா முன்னேறினார்.
வெயிலின் தாக்கத்தால், உடலில் வியர்வைகள் வடிந்து உப்பாக… தாத்தாவிற்கும், சக்திக்கும் நாக்கு வறண்டு தாகம் எடுக்க… கோவில் நிர்வாகம் வைத்திருந்த தண்ணீர் பந்தலில், இருவரும் தாகத்தை தணித்துக் கொண்டனர்.
‘தாத்தா… நின்டு, நின்டு, காலு வலிக்குது தங்கம். செத்த ஒக்காந்துட்டு, பெறவு போலாமா..?’
‘ஆமாங்க, தாத்தா..!
பாவாடை, சட்டையெல்லாம் உப்பா போச்சு..! பாருங்க…’
உருமால் துண்டை கழற்றி, சக்தியின் மேல் விசிறி விட்டார்.
புதிய கலசங்களை மாற்றி, நவதாணியங்களை கலசத்தில் வைத்து, மந்திரங்களை ஓதி, புனித நீரை ஊற்றிய படியே… பச்சைக் கொடியினை அசைக்க
திடீரென… எங்கிருந்து வந்ததோ..? கருடன்
“நாராயணா..! நாராயணா..!!” என்று, சைவர்கள் ஒரு நொடியில் வைணவ கோசங்களை எழுப்பிட…
‘அந்த விஷ்ணு பகவானே வந்துட்டார்..!’ ‘அந்தப் பெருமாளே வந்துட்டார்..!’ என்று, மக்கள் சலசலப்போடு மெய் சிலிர்த்து நிற்க. ஆனந்தத்தின் உச்ச நிலைக்குகே போனாள் சக்தி…
குடமுழுக்கு சிறப்பாக நடந்தேற சிறிது நேரம் கழித்து,
‘சரி..! தங்கம், வீட்டுக்கு போகலாமா..?’
‘ஏ…ங்க, தாத்தா..! சாமியை பார்க்கவே முடியாதா..? என்று வெகுளியாய் சக்தி கேட்க…
1 Comment
Tools For Creators · ஏப்ரல் 16, 2025 at 15 h 50 min
I am really inspired along with your writing abilities
and also with the structure to your blog.
Is that this a paid topic or did you modify it your self?
Anyway stay up the nice quality writing, it’s rare to see a nice weblog like
this one these days. TikTok Algorithm!