தொடர் 27

ஹைக்கூ ஒரு அழகிய ஓவியம். அதை நீங்கள் ரசிக்கத் துவங்கும் போது பல பரிமாணங்களில் அது உங்களை பரவசப்படுத்தும்.

ஹைக்கூ கவிதைகளை நாம் கவியரங்குகளிலோ… வாசகர் இடத்திலோ வாசிக்கும் போது சில நடைமுறைகளை அவசியம் பின்பற்ற வேண்டும்.

ஹைக்கூ மூன்றடியால் எழுதப்படுவதும், ஈற்றடி கவிதையின் போக்கினை மாற்றும் வல்லமையுடன் இருப்பதையும், திருப்பம் தருமாறு எழுதப்படுவதையும் அனைவரும் அறிவோம். எனவே நாம் அதனை வாசிக்கும் போது இப்படியாகத்தான் வாசிக்கப் பட வேண்டுமென வரையறை செய்துள்ளனர். அதாவது…

கவிதையின் முதலிரண்டு அடிகளை வாசித்து சற்றே நிறுத்த வேண்டும். பின் மறுபடியும் முதலிரண்டு அடிகளை வாசித்த பின் திருப்பம் தரும் அந்த மூன்றாவது அடியை வாசிக்க வேண்டும்..

ஏனிந்த நடைமுறை ? ஹைக்கூ எழுதக் கூடிய கவிஞனுக்கு மட்டும் உரித்தானது அல்ல. அது வாசகனையும் தன்னோடு இணைந்து பயணப்பட வைப்பது என்பதனால், முதலிரண்டு அடியை வாசித்து நிறுத்தும் போது… வாசகன் ஈற்றடியை யோசிக்க ஒரு நிமிடம் அவகாசம் தருகிறோம். அதே வேளையில் நாம் ஈற்றடியை இரண்டாவது முறை வாசித்து தொடரும் போது வாசகனின் எண்ண ஓட்டத்துடனோ அல்லது அவனது எதிர்பார்ப்பிற்கு மாறாகவோ அது அமைந்து பலத்த எதிர்பார்ப்பை உருவாக்கி விடுகிறது..

கீழ்காணும் கவிதையை காணுங்கள்..

மரணம் நிச்சயம்
மருந்தாவது இருக்கக் கூடாதா..

இதையே இருமுறை சொல்லி நிறுத்துகிறான் கவிஞன்..

ஈற்றடி என்னவாக இருக்கும் ? ஒவ்வொருவருக்குள்ளும் ஒவ்வொரு சிந்தனை…

ஈற்றடி மரணத்தை வெல்வதாக இருக்குமோ..?!

அது சாத்தியமில்லை. .மரணம் நிச்சயமே. ஒருவேளை அதை தள்ளிப்போடக் கூடிய வகையில் அமையுமா ஈற்றடி ? இவ்வாறான கற்பனைகள் வாசகனிடத்தில் ஏற்படுவது சகஜமே..

ஆனால்…

மரணம் நிச்சயம்
மருந்தாவது இருக்கக் கூடாதா
இனிப்பாக..!

  • கவிப்பேரருவி ஈரோடு தமிழன்பன்

என கவிஞர் நிறைவு செய்யும் போது… ஆஹா… மரணம் நிச்சயமே. உடல் நலமின்மைக்கு எடுத்துக் கொள்ளும் மருந்துகளாவது இனிப்பாக இருந்து தொலைக்கக் கூடாதா… அதுவும் ஏன் கசந்து தொலைகிறது என்ற அங்கதம் அங்கே இழையோடி வாசகனை… என்ன ஒரு திருப்பம் என எண்ணத் தோன்றி விடுகிறது. இதுவே ஹைக்கூவை வாசித்து நிறுத்தி வாசகனை சிந்திக்க வைப்பதனால் ஏற்படும் நன்மை.

இன்னும் வரும்… 

 முன்தொடர் 26


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மின்னிதழ்

ஹைக்கூ திண்ணை 13

ஹைக்கூ திண்ணை செப்டம்பர் / ஒக்டோபர் மின்னிதழைத் தொகுக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன். இந்தப் பெறுமதியான வாய்ப்பை வழங்கிய கவிச்சுடர் கல்யாணசுந்தரம் ஐயா அவர்களுக்கு முதற்கண் எனது நெஞ்சம் நிறைந்த நன்றிகளைச் சமர்ப்பிக்கிறேன். ஹைக்கூ என்றால் என்ன, அதை விளங்கிக் கொண்டு அதன் விதிமுறைகள் பற்றி அறிந்து அதன்படி எழுத எல்லோரும் முனைகின்றார்களா என்பது கேள்விக்குறியே. சிலர் இலக்கண விதிமுறைக்கேற்ப ஹைக்கூ கவிதைகளை எழுதுகின்றனர். ஆனாலும் சிலர் இலக்கண விதிகளைக் கொஞ்சம் மீறிப் புதுமையாக, வித்தியாசமாக எழுதுபவர்களாக இருக்கிறார்கள்...

ஆன்மீகம்

அருள் வாக்கியே! அப்துல்காதிரே!

அருள் வாக்கியே அப்துல் காதிரே!
திருப்புகழ் பாடிப் புகழ்சேர்த்த மெய்ஞ்ஞானியே!

வெண்பா வினால் விளக்கேற்றியே
விந்தைகள் தான்செய்த இறைநேசரே!

(அருள்)

எரியென்றே நீபாடித் திரியேற்றி னாய்
அரியணையில் அணையென்றே ஒளிபோக் கினாய்!

 » Read more about: அருள் வாக்கியே! அப்துல்காதிரே!  »

மின்னிதழ்

நிறைய சிந்தியுங்கள் ஹைக்கூ பிறக்கும்

ஹைக்கூ கவிதைகள் எப்படி இருக்க வேண்டும் என்பதில் குழப்பம் வருவதில் அர்த்தமில்லை அவசியமில்லை தேவையுமில்லை. வாழ்ந்த ஹைக்கூ முன்னோடிகள் கவிக்கோ அப்துல் ரகுமான் தி. லிலாவதி, கவிஞர் மித்ரா, நிர்மலா சுரேஷ் போன்றவர்களின் கவிதை களைப் பாடமாக படியுங்கள். நாம் வாழும் காலத்தில் இருக்கின்ற தமிழக மூத்தக் கவிஞர்கள் கவிஞர் அமுதபாரதி கவிஞர் ஈரோடு தமிழன்பன் கவிஞர் அறிவுமதி கவிச்சுடர் கா. ந. கல்யாண சுந்தரம் கவிஞர் அமரன் கவிஞர் வே. புகழேந்தி கவிஞர் அனுராஜ் கவிஞர் இளையபாரதி கந்தகம் பூக்கள் இவர்களின் கவிதைகளைப் படித்து நுணுக்கங்களை கற்றுக் கொள்ளுங்கள்.