தொடர் 26

ஹைக்கூ மூன்றடியில் எழுதப்படும் ஒரு பெரிய அற்புதம். இந்த மூன்றடியில் எந்த அடி சிறப்பு வாய்ந்தது எனக் கேட்டால்… பலரும் கூறும் ஒரே பதில் கவிதைக்கு திருப்பத்தையும், முரணையும் தந்து கவிதைக்கு அழகைத் தரும் ஈற்றடியே சிறப்பு வாய்ந்தது என்பார்கள். உண்மையும் அதுவே. இருப்பினும்… அதற்கு இணையான ஆற்றலையும்..சொற் இணைப்பையும் உருவாக்கித் தரும் ஒரு அடி… ஹைக்கூவின் இரண்டாவது அடி.

ஏனெனில்… இந்த இரண்டாவது அடியே… முதலடியையும், மூன்றாவது அடியையும் ஒருசேர இணைக்கும் வல்லமை பெற்றது. அது மட்டுமல்ல ஜப்பானிய ஹைக்கூ மரபுப்படி கிரெஜி எனப்படும் திருப்பம் தரும் அசை இந்த இரண்டாவது அடியின் இறுதியில் தான் துவங்குகிறது.

இரண்டாவது அடியே முதலடியோடு இணைந்து கவிதைக்கு ஒரு கருத்தினை தருகிறது. அந்த இரண்டாவது அடிதான் ஈற்றடியோடு இணைந்து ஒரு புதிய பொருளையும் தர உதவுகிறது. எனவே ஹைக்கூவில் நீங்கள் கவனித்து செயலாற்ற வேண்டியது ஈற்றடி மட்டுமல்ல, இரண்டாவது அடியையும் தான். அதுவே முதலடியோடும் தொடர்பு கொண்டு ஒரு பொருளைத் தருவதோடு… ஈற்றடியோடு தொடர்பு கொண்டும் திருப்பத்தையோ, முரணையோ வழங்கி ஹைக்கூவை சிறப்படையச் செய்கிறது.

இந்த ஹைக்கூவை கவனியுங்கள்..

பேருந்துப் பயணம்
முழுதும் நிரம்பி வழிகிறது
இனிமையான இசை..!

பேருந்துப் பயணம்
முழுதும் நிரம்பி வழிகிறது

எனும் போது, பேருந்தில் பயணிகளின் கூட்டம் நிரம்பி வழிவதாக எண்ணத்தை உருவாக்கும் . ஆனால் ஈற்றடியில்…

இனிமையான இசை.. எனும் போது பேருந்து முழுதும் நிரம்பி வழிவது இனிமையான இசை என்றாகி விடுகிறது. ஆகவே திருப்பம் வர உறுதுணையாக இருப்பதோடு, முதலடி மற்றும் ஈற்றடியை இணைக்கும் பாலமாகவும் இருப்பது இரண்டாவது அடி என்பதை ஹைக்கூவில் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

இன்னும் வரும்…

முன்தொடர் 25


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

ஹைக்கூ

மலர்வனம் 8

ஹைக்கூ

ஷர்ஜிலா ஃபர்வின்
 1. மழைத்துளிகளை
  சுமந்து கொண்டிருக்கும்
  கார்காலச் சிலந்தி வலை.
 2. இலையுதிர்காலக் கிளை
  தண்டுகளெல்லாம் மின்னுகிறது
  வைகறைப் பனி.
 3. வானத்தில் நாற்று நட
  கால்களைப் கவ்விப் பிடிக்கும்
  சேற்று வயல்.
 » Read more about: மலர்வனம் 8  »

மின்னிதழ்

மலர்வனம் 7

ஹைக்கூ

வஃபீரா வஃபி

01.
தாவும் குரங்கு
நதியில் தலைமுழுகி எழும்
மரக்கிளை

02.
நண்பகல் வேளை
சக்கரங்களிடை சிக்கித் தவிக்கும்
வண்டி நிழல்

 03.

 » Read more about: மலர்வனம் 7  »

அறிமுகம்

வாழ்வி(ய)ல் வசந்தம்!

உள்ளிழுத்து வெளிவரும் – என்
உஷ்ண மூச்சுக் காற்று
இதயத்தின் ரணங்களை
மொழிபெயர்க்கும்!

என் வீட்டு ஜன்னல் கதவு
என் மன ஓலத்தை எதிரொலிக்க
ஒத்தாசை புரியும்!

 » Read more about: வாழ்வி(ய)ல் வசந்தம்!  »