சுண்ணாம்பு

சென்னை சென்ட்ரல் ரயில்நிலையம். கோவை எக்ஸ்பிரஸ் புறப்படத் தயாராக இருந்தது. நான் விரைந்தோடி அதில் ஏறினேன். ஏறிய நான், அதன் ஜன்னல் ஓரமாய் இருந்த இருக்கையில் அமர்ந்தேன். சிறிது நொடியில் ஜிகு புகு ஜிகு புகு என்ற கூக்குரலுடன் புகையை எழுப்பி, வண்டி நகர்ந்தது. என்னுடன் பலரும் பயணம் செய்தனர். ஜன்னல் கம்பிகளின் மேல் கையை வைத்துக் கொண்டு, என் முகத்தை வெளிப் பக்கமாய் திருப்பினேன். வண்டியும் இலக்கை நோக்கி Read more

வாக்குமூலங்கள்

எங்கள் பண்பாட்டிற்கு ஏற்றபடி சேலை கட்டு. உடம்பு தெரியம்படியான உடைகளை அணியாதே என்றால் ‘நான் விரும்பிய உடையை உடுப்பதற்கும் உரிமையில்லையா?” என்கின்றாள். ‘நீங்கள் சாரம் கட்டுகின்றீர்களே! இது எந்த சமூகத்தின் பண்பாடு” என்று குதர்க்கமாக கேட்கின்றாள்.

வீட்டு வேலைகளில் தனக்கு உதவுவதில்லை என்கின்றாள். எனக்கு உதவியாக இருக்கத்தானே உன்னைத் திருமணம் செய்தேன். நீ உனக்கு உதவிக்கு என்னைக்கூப்பிட்டால்? எனக்குத் தெரியாத வேலைகளை நான் எப்படிச்செய்வது? வீட்டு வேலைகளையெல்லாம் அம்மா எனக்கு பழக்கிவைக்கவில்லையே?

மதமாற்றம் எண்ணங்களின் மாற்றம்

மதத்தைப் பின்பற்றுபவர்கள் பாவம் செய்ய அஞ்சவேண்டும். அடுத்தவனை அடிமைப்படுத்துவதற்குப் பயப்படவேண்டும். அரிவாள், கோடரி, கத்தி, வெடிகுண்டு போன்றவற்றை மனிதர்கள் மேல் பயன்படுத்துவது நரகம் செல்வதற்கான வழி என்று நம்பவேண்டும். நம்பி அவற்றைச் செய்யாமல் இருக்க வேண்டும்.

ஒவ்வொரு மனிதனும் சுய விருப்பு வெறுப்புகளோடு பிறந்திருக்கிறான். தன் குடும்ப சமுதாய மற்றும் நாட்டின் பழக்க வழக்கங்களால் தன்னைச் சில நிர்பந்தங்களுக்கு உள்ளாக்கிக்கொள்கிறான். சில நிர்பந்தங்கள் அவனுக்கு மகிழ்வினைத் தருகின்றன. சில நிர்பந்தங்கள் துயரத்தைத் தருகின்றன.

இயற்கையின் பேரழகு சிந்தும் ஷில்லாங்

இயற்கையின் பேரழகின் வெளிப்பாடுகளில் மனம் மயங்கும் அழகைப் பெற்றது ஷில்லாங். மேகாலயாவின் தலைநகரமான ஷில்லாங் பல ரசிக்கக்கூடிய வனப்புகளைக் கொண்டது. மணமேடையில் அமர்ந்திருக்கும் மணமகளின் முகத்திரை சற்றே விலக வெட்கி நாணுவதைப் போன்று, மேருகளின் மீது படர்ந்திருக்கும் மேகங்கள் காட்சித் தருகின்றன. மனதைக் கொள்ளையடிக்கும் மலைச் சிகரங்களில் ஊதா நிறம் படர்ந்துள்ளதையும் விரிந்து கிடக்கும் பல நிறப் பச்சை புல்வெளிகளையும் ரசித்துக் கொண்டே இருக்கத் தோன்றும். ஷில்லாங்கை சீனாவிலுள்ள ஷங்க்ரிலாவுக்கு Read more

உழவன்

சேறு மிதித்தால் சோறு கிடைக்கும்
உலகுக்கு உரைத்தவன் உழவன்! – அந்த
உண்மை அறிந்தே உள்ளம் மகிழ்ந்தே
வணங்கி நிற்பவன் தமிழன்!

எழுந்து ஒளிரும் ஆதவன் அருளைத்
தொழுது வாழ்பவன் உழவன்! – அவன்
உழுது விளைத்த உணவைப் பெற்றே
உலகில் வாழ்பவன் மனிதன்!

சிறகு தேடி…

அன்வரும் அலியும் எழுந்து தன்மீது படிந்திருந்த மண்ணை தட்டிக்கொண்டார்கள். மாலை கதிரவனின் தூரத்து ஒளி கடற்கரையை அழகு படுத்தி இருந்தது. தென்றல் என்று சொல்ல முடியாத அளவிற்கு காற்று சற்று அழுத்தமாக வீசியது. இங்கும் அங்குமாக சிதறி களைந்துக்கொண்டிருந்த ஜனங்களோடு நண்பர்கள் இருவரும் நெறுக்கமாக நடக்கிறார்கள்.

“அலி, நபிலா நமக்கு உறவு பெண்ணல்ல இருந்தும் நாளை நாம் பஞ்சாயத்தில் கலந்துக் கொள்ளப் போகிறோம். சுமூக சீர் திருத்தத்திற்காக நம்மை நாமே ஓரளவு தயார் படுத்திக் கொண்ட பிறகு ஊரில் நடக்கும் எந்த பிரச்சனைக்கும் பஞ்சாயத்தார் நம்மை அழைக்கிறார்கள். நம் கருத்தை வெளிபடுத்த அது ஒரு வாய்ப்பாக அமைகிறது. நபிலா செஞ்சது சரின்னுதான் பஞ்சாயத்துல சொல்லப் போறேன்.”

மூவகை மக்கள்

சொல்லாமலே பெரியர் சொல்லிச் செய்வர் சிறியர்
சொல்லியும் செய்யார் கயவரே – நல்ல
குலமால வேற்கண்ணாய்! கூறுவமை நாடில்
பலா மாவைப் பாதிரியைப் பார்!

என்ற ஒளவைப்பாட்டியாரின் இப்பாடலின் கருத்தை அறிவது அவசியமல்லவா?

மஞ்சத்தின் பரிசு

வண்ணச் சேலைகட்டி வந்து நின்று,
தென்னந் தோப்பெல்லாம் தேடி விட்டு,
பின்னல் சடையாடக் கோபங் கொண்டு,
தன்னந் தனிமையாளாய் வந்து விட்டாள்.

வீட்டிலே வேறொருவன் இருக்கக் கண்டு,
பாட்டாலே பரவசத்தைக் காட்டி விட்டு,

மறவாதீர்

மலர்தொறும் நாடி மலிவுற வுண்டு
மகிழ்வுறும் வண்டினம் போலக்
கலைமொழிப் பண்பின் பலதிறங் கண்டு
களிபெற வலம்வரு பெரியீர்!
நலங்கொள வேண்டி நவின்றனன்! நீர்தாம்
நாடிய நாடெது வெனினும்
தலைமுறை யாகப் புகழுற வாழ்ந்த
தமிழ்க்கலை மறக்கலிர் என்றும்!

அம்மா எனக்கொருத் தோழி

அம்மாவின் கனவுகளை மட்டுமல்ல, நினைவுகளையும் கூடப் பொய்யாக்கிவிட்டு ஓடிப்போனவன் நான். அம்மாவை இறுதியாக எப்போது பார்த்தேன். இருக்கலாம். ஓர் இருபது ஆண்டுகள் இருக்கலாம். என் மனத்துள் இருக்கும் அம்மா நூற் சேலையில், முழங்கை நீண்ட, கழுத்துவரை உயர்ந்த கிளாஸ்கோ மல் இரவிக்கையில் ஐம்பது வயதிலும் நரை அறியாது என்னை ஆச்சரியப்படுத்துபவள். காலையில் தோசைக்கல் வழிய மாவை வார்த்து, பொன் சிவப்புக்குக் காத்திருந்து, “குறைந்தது மூன்றாவது தின்னுட்டுத்தான் எழுந்திருக்கணுமெனச்” சத்தம் போடுவதையும், Read more