வண்ணச் சேலைகட்டி வந்து நின்று,
தென்னந் தோப்பெல்லாம் தேடி விட்டு,
பின்னல் சடையாடக் கோபங் கொண்டு,
தன்னந் தனிமையாளாய் வந்து விட்டாள்.
வீட்டிலே வேறொருவன் இருக்கக் கண்டு,
பாட்டாலே பரவசத்தைக் காட்டி விட்டு,
வேட்கையிலே பரிதவிக்கும் அவனைக் கண்டு,
கூட்டிப்போய்ப் படுக்கையிலே இருக்க வைத்தாள்.
வேலோடு போட்டியிடும் விழி இமைத்து,
பாலோடு தேனைப் பருகக் கொடுத்து,
தோலோடு தோல்சேர்க்கத் துடித்து வந்து,
காலோடு கால்பின்னக் கட்டி அணைத்தாள்.
மிஞ்சிய அழகதனால் தடுமாறி வீழ்ந்து,
பஞ்சனை படபடக்கப் பரவசத்தால் துடித்தவனை,
பிஞ்சு கரத்தினால் நெஞ்சோடு அணைத்து,
எஞ்சிய காசெல்லாம் கொஞ்சியே பெற்றாள்.