யாளியும்… சக்தியும்… 5

5 ம். ம்… என்றபடியே… சக்தியை வீட்டிற்கு, அழைத்துச் சென்றார். தாத்தா..! சக்தி, இரவு படுக்கைக்கு போகும் பொழுது… ஒரு கையில் தலையாட்டி பொம்மையையும், மறு கையில் பெருவுடையார் கோவிலில் கண்டெடுத்த, முட்டை வடிவத்தில் இருந்த பொருளை எடுக்க… உடனே..! புருவம் உயர்த்தி, வாய் பிளந்து, ஆச்சரியமாக பார்த்தாள். ஆம்..! அந்த பொருளின் எடை குறைந்து இருந்தது. அவளுக்கு, நம்ப முடியவில்லை. இரண்டு, மூன்று முறை, உள்ளங்கையை மேலே – Read more

யாளியும்… சக்தியும்… 4

4 சக்தி கண்களை மூடி, திரும்பத் திரும்ப நினைத்துப் பார்க்கிறாள். மீண்டும் கனவு வரவே இல்லை. சிலநாட்கள் நகர்ந்தது… பாட்டி வீட்டில் இருக்கும் கோழிக் குஞ்சுகளுக்கு, அம்மியில் நுணுக்கிய அரிசியை, பிஞ்சு விரல்களால் தூவித் தூவியே… சக்தி விளையாடிக் கொண்டிருந்தாள்.. ‘இந்தா மா…! சக்தி… நாளைக்கு, தாத்தா கூட ஊருக்குப் போகனும். வந்து, ஒரு வாரம் ஆச்சு.ல… அடுத்தவாரம் பள்ளிக்கூடம் திறக்குறாங்கலாம், அம்மா, அப்பா ஊருக்கு கூட்டியாரச் சொன்னாங்க… சரியா..? டா..! தங்கம்.’ ‘ம், சரிங்க பாட்டி..! Read more

யாளியும்… சக்தியும்… 3

3 ‘ஏ…ங்க, தாத்தா..! சாமியை பார்க்கவே முடியாதா..?’ என்று, வெகுளியாய் சக்தி கேட்டாள். ‘இப்ப, கும்பாபிஷேகம் நடக்கிறதால… சாமியை பார்க்க முடியாது.டா..! தங்கம்… ரெண்டு நாள் கழிச்சு வந்து பார்க்கலாம். கூட்டமும் இருக்காது..!’ ‘ம்.ம்கூம்… சரிங்க. தாத்தா..!’ தாத்தாவும், பேத்தியும், களைத்துப் போய் வீடு வந்து சேர்ந்தனர். ‘இவ்வளவு கூட்டத்துல… பேத்தி சொல்லக் கேட்டு, போகனுமா..? சாயங்காலம் போயிருக்கலாம்.ல’ என்றபடியே… ஆளுக்கு ஒரு சொம்பு தண்ணீர் கொடுத்தார் பாட்டி. சிறிது Read more

யாளியும்… சக்தியும்… 2

2 ‘கோயிலுக்கு வந்து, பாதியிலேயே திரும்பி போகலாமா..? தாத்தா..!’ என்று, சக்தி கேட்க… தாத்தா, மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல்… சிதறிய பூக்கூடையை எடுத்து, சக்தியை கையில் தூக்கிக் கொண்டு நடந்தார். வண்ண வண்ண பலூன்கள், ராட்டினங்கள், விளையாட்டுப் பொருட்கள், பொம்மைகள் புதிது புதிதாக சாலையின் இருபுறமும் நிறைந்து இருக்க… சக்தி மயங்கி விழுந்ததை மறக்கச் செய்ய ‘ஏதாச்சும் விளையாட்டுச் சாமான்கள் வேணுமா..? தங்கம்’ என்று, கேட்க… ‘அதெல்லாம், ஒன்னும் வேணாம்.ங்க தாத்தா..!’ என்றபடியே… தலையாட்டி பொம்மை, தலையைத் Read more

யாளியும்… சக்தியும்… 1

1 ‘சக்தி..! சக்தி..!! அம்மா… சக்தி…! எங்க போனா..? இவ… சொல்லாம கொல்லாம…’ “சக்தி” பெயருக்கு ஏற்ப வலிமையோடும், துறு… துறு… வென இருப்பாள். பார்த்த மாத்திரத்தில், நமது குழந்தையாகிடும் அன்பும், சிரிப்பும் மிகுந்தவள். அம்மன் சிலை போல அழகு முகம் கொண்டவள். கோபக்கார சுட்டிக்குழந்தை இவள். பூர்வீகம் திருநெல்வேலியில் இருந்தாலும், பள்ளி விடுமுறைக்காக தஞ்சையில் பாட்டியிடம் தஞ்சமடைந்துள்ளாள். ‘என்னாங்க பாட்டி..! கூப்புட்டீங்களா..? பக்கத்து தெருவுல… கொட்டு அடுச்சு, கொழவை போட்டு Read more

யாளியும்… சக்தியும்…

முன்னுரை உலக அரங்கில் சில எலும்புத் துண்டுகளை மட்டுமே வைத்து, டைனோசருக்கு உருவம் கொடுத்து, பல நாவல்களும், பல்வேறு திரைப்படங்களும் வெளியிட்டு, தன் ஆளுமையை நிலைநாட்டிய மேலை நாட்டினருக்கு மத்தியில்… “கல்தோன்றி மண்தோன்றா காலத்து மூத்த குடியில்” பிறந்த, நம் தமிழ் இனத்தின் கலை, இலக்கியங்களோடு புதைந்தும், கோவில் பிரகாரங்களில் தன் வரலாற்றுச் சுவடுகளை, இன்றும் சுமந்து கொண்டு இருக்கும், யாளிகள் பற்றிய நூல்களோ..? விரல்விட்டு, எண்ணும் படியே இருப்பது Read more